”நடந்தது பொதுக்குழுவே இல்லை. கோர்ட்டுக்கு போனால் செல்லாது!” - ஜே.கே. ரித்தீஷ்

 ஜே கே ரித்தீஷ்


நடிகர்  சங்கத்தில் தினம் ஒரு திருப்பம் நடந்து  வருகிறது. யார்  யாருடன் இருக்கிறார்கள் என்று அன்றைய நிலவரத்தை  வைத்து தான் சொல்ல  முடிகிறது. விஷால் அணியில் இருந்து அவர் ஜெயிப்பதற்கு காரணமாக  இருந்த ரித்தீஷ், அவர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் சரத், ராதா ரவி  அணிக்கு  தாவ போகிறார் என்று சொல்லி வந்தனர் .இதை நிரூபிக்கும் விதமாக அண்மையில் அவர் விகடனுக்கு அளித்து  இருந்த  பேட்டியில் "ராதாரவியும், சரத்குமாரும்தான் எனக்கு நல்ல பழக்கம். அவங்களுக்கு நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுப்போடனும்னுதான் இருந்தேன். ஆனா சேலத்துக்கு ஓட்டு கேட்கப் போன இடத்துல  நான் நாடக  நடிகர்களுக்கு கொடுத்த,பணத்தை கொடுக்கலன்னு சொல்லிட்டாங்க . அதுதான் எனக்கு சரத்குமார் அணி மேல கோபத்த உண்டாக்குச்சு. சரியா, அந்த நேரத்துல,தான்  நடிகர் ரமணா மூலமா விஷால் என்னைச் சந்தித்தார். நானும் விஷாலை ஆதரிச்சேன். அதே நேரத்துல, எங்க கட்சியில இருந்து என்னைக் கூப்பிட்டு,  நடிகர் சங்கத் தேர்தலில் நிக்க வேணாம்னு சொன்னாங்க. நானும் அதுக்கு கட்டுப்பட்டு தேர்தல்ல போட்டியிடல. இன்னைக்குவரை, சங்கத்துக்குள்ளேயே போகல. ஏன்னா, நம்மாளதான் ஜெயிச்சாங்க. அதுனால சங்கத்த கைப்பத்திட்டார்னு சொல்லக்கூடாதுல்ல. அதுக்குத்தான்." 
 
நடிகர் சங்கத் தேர்தல் முடிஞ்ச ரெண்டு நாளில், ராதாரவி அண்ணே, என்னைக்கூப்பிட்டார். அவர் தோக்குறதுக்கு காரணமே நான்தான் அப்படின்னு  தெரிஞ்சும் என்னை அழைத்துப் பேசினார்.  அவருக்கு எவ்ளோ பெரிய மனசு. அதுதான் அவர் பிறந்தநாளுக்கு நேரில் போய் வாழ்த்துச் சொன்னேன். அவர் என்னைத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிக்க சொன்னதா சொல்றாங்க அது உண்மை  இல்ல . ஆனா, விஷால் ரெண்டு இடத்துல கால வைக்கக்கூடாது.

இப்போ இருக்குற இடத்தை அவர் முதல்ல சரி பண்ணனும். அகல உழுறத விட... ஆழ உழனும்னு பழமொழியே இருக்கு. இதுவே இன்னும் சரியாகல.. அதுக்குள்ள எதுக்கு தயாரிப்பாளர் சங்கத்துக்கு வர்றார்? என்னைப்பொறுத்தவரை கட்சி என்னை அனுமதித்தால், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன். தயாரிப்பாளர் சங்கக் கூட்டங்களுக்கு இப்பவே ரெகுலரா போக ஆரம்பிச்சுட்டேன். இன்னும் ஒரு மாசத்துல அங்க இருக்க எல்லாப் பிரச்னையையும் சொல்லுவேன்” என  சொல்லி இருந்தார் 

கொஞ்ச  காலமாக அமைதியாக  இருந்த ரித்தீஷை மீண்டும்  கொம்பு  சீவி விட்டுள்ளனர் நடிகர்  சங்க  நிர்வாகிகள். பொதுக்குழுவில் நடிகர்சங்க துணைத்தலைவர் கருணாஸின் கார் கண்ணாடி மர்ம நபரால் உடைக்கப்பட்டதால் பொதுக்குழு வளாகத்திற்கு வெளியே பெரும் கலவரம் நடந்தது. கண்ணாடியை உடைத்த மர்ம நபரை ரித்திஷ் ஆதரவாளர்கள்  என கூறி  வந்தனர்.  மேலும் பொதுக்குழுவில்  சரத்குமார் ராதாரவி இருவரையும் நிரந்தர  நீக்கம்  செய்து அறிவித்தனர்.. 

கருணாஸ் கார்

இந்த நீக்கம் செல்லாது  என்று சரத் குமார் தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது மேலும்  நடிகர் சங்கத்தில் நடந்த எந்த கலவரத்திற்கும்  நானோ அல்லது எனது ஆதரவாளர்களோ  காரணம்  இல்லை  என்று அறிக்கை அளித்துள்ளார் .

'' நான்  கருணாஸ் கூட பேச்சை  நிப்பாட்டி பல  நாட்கள் ஆகுது. எனக்கும்  அவருக்கு  ஒத்துவரல. அதனால நான்  பேசுறது இல்ல.அம்மா  ஒரு வேட்பாளரை நிப்பாட்டுனாங்க. அவங்க  வெற்றிக்கு  நான்  உழைச்சேன்.அவ்ளோ தான் எனக்கும்  கருணாசுக்கும் உள்ள உறவு. அவர் கார் கண்ணாடியை உடைக்குற  அளவுக்கு நான்  சீப்பானவன்  கிடையாது.கருணாஸ் கார்  கண்ணாடியை  உடைச்சதா ஒருத்தன அடிச்சாங்களே.. அவனே  சொல்லி இருக்கான்.. நான்  கருணாஸ்  கூட தான்  வந்தேன்.  விளம்பரத்துக்காக இது மாதிரி கீழ்த்தரமான  வேலை எல்லாம் செய்ய  கூடாது .அதுவும் இல்லாம நடந்தது  பொதுக்குழுவே  இல்ல  இது கோர்ட்க்கு போனா சட்ட ரீதியா  செல்லாது” என்று சொல்லி இருந்தார் ரித்தீஷ்.. 

இந்த  பிரச்சனையின் பின்னணி  குறித்து  பேசிய நடிகர் சங்க நிர்வாகி  ஒருவர்  ” இப்போ  நடிகர்  சங்கத்துல விஷால் சரத்  தரப்புக்கு  இடையில இருக்குற   பிரச்சனையை விட  கருணாஸ் ரித்தீஷ் தரப்புக்கு  இடையில  தான்  நிறைய  பிரச்சனை  உள்ளது. விஷால் அணி  வெற்றி  பெற  முக்கிய காரணமாக  இருந்தவர் ரித்தீஷ். கருணாஸ்  இந்த அணிக்குள்ள வரவும்  அவர் தான்  காரணம். சட்டமன்ற தேர்தலில்  சீட் கிடைத்து திருவாடானை தொகுதியில கருணாஸ்க்காக உழைச்சாரு ரித்தீஷ்.அது வரை அண்ணன் அண்ணனு மரியாதையா  இருந்த  கருணாஸ் சட்டமன்றத்துக்குள்ள முதல்வரின்  நேரடி  பார்வைக்கு  போன  பிறகு அமைதிப்படை  அமாவாசையாவே  மாறிட்டாரு. இதனால ரெண்டு  பேருக்கு இடையிலையும் பனிப் போர் ஆரம்பிசிருச்சு. அது இப்ப பெரிய பிரிவா  வந்து  நிக்குது.பொது குழுவிற்கு முதல் நாள் இரவு  நடிகர் சங்க வளாகத்துக்குள் நான்  நினைச்சா ரித்தீஷ் கட்சியில  இருக்க முடியாது  என சொல்ல, அனைவரும் அதைக் கேட்டு  சிரித்துள்ளனர்.இந்த விஷயம் ரித்தீஷ்  காதுக்கு போக உடனடியாக கிளம்பி நடிகர் சங்க  வளாகத்துக்கு  வந்துட்டாரு.நல்ல  வேலை  அப்ப  கருணாஸ்  அங்க  இல்ல.மற்ற  எல்லாரையும் திட்டிட்டு கிளம்பிட்டாரு  ரித்தீஷ். இந்த நிலையில  தான் கருணாஸ்  கார் கண்ணாடியை  யாரோ  உடைக்க தேனாம்பேட்டை காவல் நிலையத்துல ரித்தீஷ் ஆதரவாளர்  தான் உடைச்சுட்டதா கருணாஸ் தரப்புல புகா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை நீர்  பூத்த  நெருப்பா தான்  இருக்கு எப்ப நாளும் வெடிக்கலாம். பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு கொடுக்க  முடியாதுன்னு போலீஸ்  தரப்புல  சொல்லிட்டதால 72  பௌன்சர்களை ஸ்டன்ட் நடிகர்  ஒருவர் 3000 சம்பளத்துக்கு   கூட்டிட்டு  வந்தாரு.இது போக கருணாஸ்  தரப்புல  இருந்து அவரது கட்சிக்கார்கள் 100 பேருக்கு  மேல  வந்து  இருந்தாங்க.  இதையும் மீறி கருணாஸ் கார் கண்ணாடியை வெளில இருந்து  ஒருத்தர்  எப்படி வந்து உடைக்க  முடியும்” என  ஆதங்கமாக  சொல்லி முடித்தார் .

இந்த  விவகாரத்தால் ரித்தீஷ் அணியும் ராதாரவி- சரத் அணியும் ஒன்று சேர்ந்து உள்ளது  அதன்  ஒரு தொடக்கமாக  பெப்சி அமைப்பின்  சார்பில்முதல்வர்  உடல் நலம் பெற வேண்டி நடைபெற்ற சர்வ மத  கூட்டு  பிராத்தனை கூட்டம் சென்னையில் இன்று  நடைபெற்றது. இதில் நடிகர்  ராதாரவியுடன் கலந்து  கொண்டார் நடிகர் ரித்தீஷ்.

 ராதா ரவி

 

பின்னர்  செய்தியர்களிடம் பேசிய அவர்,தேர்தலுக்கு  பிறகு  அனைவரும் நண்பர்களாக  பழக  வேண்டும் என்று நான்  முன்பே சொல்லி இருந்தேன் .ராதாரவி ,சரத்குமாரை  சங்கத்தை  விட்டு  நீக்கியது  தவறு .இது பழி வாங்கும் நடவடிக்கை இது  நாகரிகமும்  கிடையாது. நடிகர் சங்கத்துக்கு மக்கள் மத்தியில இருக்குற இமேஜை நாமளே அழிக்க  கூடாது.பதவிக்கு இன்னைக்கு வரும்; போகும். ஆனா  நிர்வாகத்துல இருக்குறவர்களுக்கு பொறுமை,மன்னிக்குற தன்மை,பக்குவம்  ரொம்ப முக்கியம். அது எல்லாம் இப்ப இருக்குற நிர்வாகிகள் கிட்ட  இல்ல.  ராதாரவி,சரத் குமார் கூட இருந்த சங்கையா  எல்லாம் விஷால் வெற்றிக்காக உழைத்தவர்.பாவம் அவரையே  பொதுக்குழு உள்ள விடல” என்று கூறினார் 

நடிகர்  ரித்தீஷை வைத்து அடுத்த இன்னிங்ஸை தொடங்கி  விட்டனர். ஏற்கனவே களைகட்டி வரும்  நடிகர் சங்க விவகாரம் இனி ரணகளம் ஆகும்  என்பது உறுதி  

-பிரம்மா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!