Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நம்ம பாக்யராஜ் இப்போ மிஷ்கின் வில்லன் ..! ‘அடடே’ பாக்யராஜ்

தமிழ் சினிமா இயக்குநர்களில் மிஷ்கின் வித்தியாசமான படைப்பாளி. முதன்முதலாக 'சித்திரம் பேசுதடி' படத்தை கொடுத்த மிஷ்கின்  அடுத்து இயக்கிய 'அஞ்சாதே' திரைப்படம் தமிழ் சினிமா ரசிகனை மட்டுமல்ல தமிழ் திரைப்பட உலகையே திரும்பி பார்க்க வைத்தது. அனைத்து தரப்பு  மக்களாலும் நகைச்சுவை நாயகனாக பார்க்கப்பட்ட, ரசிக்கப்பட்ட பாண்டியராஜனுக்கு வில்லன் வேஷம் கொடுத்து பிரமிக்க வைத்தார். அதோடு நிற்காமல் 'கத்தால கண்ணால குத்தாதே...' என்கிற பாடலுக்கு கவர்ச்சி நடிகையோடு குத்தாட்டமும் போடவைத்தார்.

அடுத்து 'நந்தலாலா' திரைப்படத்தின் கதையை வைத்துக் கொண்டு முன்னணி கதாநாயகர்கள் பலரிடம் அலைந்து திரிந்தார். முழுக்கதையை கேட்டு முடித்த பல ஹோர்ம் ஒர்க் ஹீரோக்கள் எல்லாம்  'என்னால இந்த கேரக்டர்ல நடிக்க முடியாது சாமீ...' என்று  ஜகா வாங்கிக் கொண்டனர்.  இறுதியாக தனுஷை சந்தித்தார், மிஷ்கின். 'நந்தலாலா' படத்தின் ஒவ்வொரு காட்சியையும்  நடித்து காண்பித்த மிஷ்கினை பார்த்து அசந்து போனாராம், தனுஷ். 'சார் இந்த படத்துல வேற எந்த ஹீரோ நடிச்சாலும்  எடுபடாது .நீங்க பிரமாதமா நடிக்கிறீங்க பேசாம நீங்களே நடிச்சுடுங்க' என்று தனுஷ் சொன்ன ஆலோசனையை தலைமேல் ஏற்றுக் கொண்டு 'நந்தலாலா' படத்தில் நடித்தார். அந்தபடம் வியாபார ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும்  தமிழ் சினிமாவின் வித்தியாசமான திரைப்படம் என்று எல்லோராலும் விமர்சிக்கப்பட்டது.

இயக்குநர் ப்ளஸ் நடிகராக நடித்து வெளிவந்த 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' திரைப்படம் பெரிதாக பேசப்பட்டது. மிஷ்கின் படத்தில் இடம்பெறும் முரட்டுத்தனமான திரைக்கதைக் காட்சிகளை கண்டு சிலாகித்து போனார், ராதாரவி. 'ஏம்பா மிஷ்கின் உன் படத்துல எனக்கொரு சான்ஸ் தரமாட்டியா..?' என்று ராதாரவி விளையாட்டாக கேட்டார்.   ராதாரவியை தனது 'பிசாசு' படத்தில் நடிக்க வைக்க அவரது நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது.

இப்போது விஷாலை வைத்து திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட திரைக்கதையை அமைத்து 'துப்பறிவாளன்' படத்தை இயக்கி வருகிறார், மிஷ்கின்.  முதலில் 'அஞ்சாதே' திரைப்படத்தில் சிஷ்யன் பாண்டியராஜனை வில்லனாக நடிக்க வைத்த மிஷ்கின். இப்போது 'துப்பறிவாளன்' படத்தில் பாண்டியராஜனின் குருநாதர் பாக்யராஜை வில்லன் அவதாரம் எடுக்க வைத்து இருக்கிறார். பொதுவாக அப்பாவித்தன நடிப்புதான் பாக்யராஜின் பெரும்ப்ளஸ். பாக்யராஜின் அந்த அப்பாவித்தன நடிப்புக்கு பெரும்பாலான மக்கள் குறிப்பாக பெண்கள் கைதட்டி ரசித்து ஆர்ப்பரிப்பார்கள்.

முன்பு 'கன்னி பருவத்திலே' படத்தின் நாயகி வடிவுக்கரசியை மிரட்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் ஹீரோவான பிறகு அப்பாவித்தன வேஷத்திலேயே நடித்துவந்த பாக்யராஜ் இடையில் 'விடியும்வரை காத்திரு' படத்தின் ஆன்ட்டி ஹீரோவாக நடித்து இருப்பார். இப்போது 'துப்பறிவாளன்' படத்தின் வில்லன் வேஷம். இதுகுறித்து இயக்குநரும், நடிகருமான பாக்யராஜிடம் கேட்டோம். ''நீங்கள் சொல்றது மாதிரி 'கன்னி பருவத்திலே'  'விடியும்வரை காத்திரு' படத்துக்கு பிறகு மிஷ்கின் டைரக்‌ஷன்ல 'துப்பறிவாளன்' படத்துல வித்தியாசமான  வில்லன் வேஷத்துல நடிக்கிறது உண்மைதான்'' என்று நம்மிடம் ஒப்புதல் பதில் சொன்னார்.    

சத்யாபதி

படங்கள்: குமரகுருபரன்      

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!