விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஜோடியாகிறார் நயன்தாரா..!

சரத்குமார் முதன்முதலாக தயாரித்த படத்தின் தலைப்பு ‘கண்சிமிட்டும் நேரம்’, நவரச நாயகன் கார்த்திக் ஹீரோவாக நடித்தபடம். அந்த டைட்டிலை நினைவூட்டும் விதமாக  தனது படத்துக்கு ‘இமைக்கா நொடிகள்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார், இயக்குநர் அஜய் ஞானமுத்து.  ஏற்கெனவே ’டிமான்டி காலனி’ என்கிற திகில் படத்தை இயக்கிய அஜய், ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்.

நயன்தாரா அக்காவாகவும், அதர்வா தம்பியாகவும் நடிக்கும் திரைப்படத்தின் பெயர்தான் ‘இமைக்கா நொடிகள்’. முழுக்க முழுக்க க்ரைம் நிறைந்த இந்த படத்தின் ஒரு ஷெட்யூல் சென்னையில் முடிந்து விட்டது. இரண்டாம் ஷெட்யூல் இப்போது பெங்களூருவில் நடந்து கொண்டு இருக்கிறது. நயன்தாரா சிபிஐ ஆபீஸராக நடிக்கும் இந்த படத்துக்காக பிரத்யேகமாக குதிரையேற்ற பயிற்சி, சண்டை பயிற்சியை கற்று, நடித்து வருகிறார்.

அக்கா நயன்தாரா, தம்பி அதர்வா இருவரோடு மோதும் அதிரடி வில்லன் வேடத்தில் பாலிவுட்டின் மாஸ்டர் இயக்குநர் அனுராக் காஷ்யாப் நடித்திருக்கிறார். இதுவரை ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், ஆர்யா, ஜெய், சிவ கார்த்திகேயன் ஆகியோருடன் காதல் ஜோடியாக நடித்து வந்த நயன்தாரா, முதன்முதலாக ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் நான்கு வயது குழந்தைக்கு தாயாக நடித்து வருகிறார். முதலில் இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியே கிடையாது. ஸோலோ ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்று சொன்னார்கள். இப்போது அவருக்கென்று ஒரு ஃப்ளாஷ்பேக் கதை சேர்த்திருக்கிறார்களாம். அந்த ஃப்ளாஷ்பேக்கில் நயன்தாராவின் கணவராக கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. இவர்கள் இருவரும் நடிக்கும் காட்சிகள் பரவிவிடக் கூடாது என்பதற்காக, குறிப்பிட்ட யூனிட் ஆட்களை மட்டும் வைத்துக்கொண்டு ரகசியமாகபடமாக்கி வருகிறார் இயக்குநர் அஜய்.

சத்யாபதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!