சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறாரா ராம்கோபால் வர்மா?


இயக்குநர் ராம்கோபால் வர்மாவையும் அதிரடி செய்தியையும் பிரிக்க முடியாது. சந்தன மர புகழ் வீரப்பனை வைத்து இவர் எடுத்த 'வில்லாதி வில்லன் வீரப்பன்' திரைப்படத்திற்கு பல தரப்புகளிடமிருந்து விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் மூன்று மொழிகளிலும் வெளியிட்டார்.

இப்போது 'சசிகலா' எனும் பெயரில் தனது  புதிய படத்தை எடுக்கவிருப்பதாக சமூகதளத்தில் எழுதியிருக்கிறார். அந்தப் படம் ஓர் அரசியல்வாதியின் நெருக்கமான தோழியைப் பற்றிய படம். ஆனால் அது முழுக்க முழுக்க கற்பனையே என்று சொல்லியிருக்கிறார்.  உண்மைக் கதை எடுத்தாலும் பொதுவாக இப்படித்தானே சொல்வார்கள்.  இப்போது இருக்கும் தமிழக அரசியல் சூழலில் இதுபோன்ற படத் தலைப்பு சர்ச்சையை கிளப்ப போவது நிச்சயம். தலைப்பே இப்படியென்றால் படம் வெளியாகும் சூழல் எப்படியோ!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா பற்றியும் பல கருத்துகளை பதிந்துள்ளார்.

 


ஜெயலலிதா மீதும் அதைவிட சசிகலா மீதும் மரியாதை வைத்திருப்பதாகவும், நாம் ஜெயலலிதாவைப் பார்க்கும் விதத்தை விட, சசிகலா பார்க்கும் பார்வையில் நேர்மையும் கவித்துவமும் நிறைந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!