2016-ல் தப்பிப் பிழைத்த 10 தமிழ்ப்படங்கள் #2016Rewind | Ten Above average Tamil movies in 2016

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (23/12/2016)

கடைசி தொடர்பு:10:45 (23/12/2016)

2016-ல் தப்பிப் பிழைத்த 10 தமிழ்ப்படங்கள் #2016Rewind

எதிர்பார்க்க வைத்து மொக்கை வாங்கிய படங்கள், ரிலிஸுக்கு முன் ஓவர் பில்ட் அப் கொடுத்தாலும் வெளியான பின்னும் சொல்லி வைத்ததுபோல் செம ஹிட் அடித்த தமிழ்ப்படங்கள் என பல டாப் 10 லிஸ்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் யாரும் பெரிய அளவில் எதிர்பாராமல் அதே வேளை மரியாதையான வெற்றி பெற்ற படங்களின் டாப் 10 லிஸ்ட் இது.   

டாப் 10


இறுதிச்சுற்று - குத்துச்சண்டையில் விழும் குத்துகளில் பிரபலமானது அப்பர் கட் மற்றும் ஹூக் பஞ்ச். ஆனால் இவற்றுக்கு எல்லாம் பெரியது எதிரியை நிலைகுலையச்செய்ய குத்து என்பது ஜேப் என்கிற டைனமைட் பஞ்ச். இறுதிச்சுற்று அப்படி ஒரு 'டைனமைட் பஞ்ச்' வீசி எதிர்பாராத வெற்றியை அடைந்தது. 'மஸ்தி' மாதவன் 'டூமிங் குப்பம்' ரித்திகா என நம்பிக்கையான படம். 

 டாப் 10

பிச்சைக்காரன் - தொடர்ந்து தனது படத்தின் தலைப்புகளை வித்தியாசமாக வைத்து வெற்றிக்கோட்டை எட்டி தொடுவதை வழக்கமாக்கி வந்தார் விஜய் ஆண்டனி. இதற்கு முந்தைய படமான இந்தியா-பாகிஸ்தான் ஆவரேஜ் ரிசல்ட் கொடுத்திருந்த நிலையில் இந்தப் பிச்சைக்காரனின் 'அம்மா' என்கிற சத்தம் தமிழ்சினிமா ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது என்றே சொல்லலாம். ஆனால் அது இவ்வளவு கலெக்‌ஷன் ஆகும் என விஜய் ஆண்டனியே எதிர்பார்த்து இருக்கமாட்டார். 

 டாப் 10

தோழா - வழக்கமாக சில தமிழ் இயக்குநர்கள் வெளிநாட்டுப்படங்களில் 'இன்ஸ்பயர்' ஆகி அதே மாதிரி எடுத்து பின்னர் நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னப்படுவார்கள். ஆனால் 'தோழா' பிரெஞ்ச்ப்படத்தின் உரிமையை வாங்கி எடுக்கப்பட்ட 'ஒரிஜினல்' படம். மெட்ராஸ்,கொம்பன் என வெரைட்டி ஹிட் அடித்து அந்த ஹேங் ஓவரில் இருந்த கார்த்தி இந்த படத்துக்கு செட் ஆவாரா என ஒரு டாக் ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியானவுடனே ஒரிஜினல் வெர்சனை டோரன்டில் டவுன்லோடி,உதட்டை பிதுக்கிக்கொண்டிருந்தனர் தமிழ் சினிமாவின் ஆன்லைன் ஆர்வலர்கள். அவர்களின் எண்ணத்தை பொய்யாக்கும் வகையில் தமிழ்-தெலுங்கு என இரண்டிலும் ஓடியது படம். 

 டாப் 10

ஒரு நாள் கூத்து - படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லைதான். ஆனால் அன்மைக்காலமாகவே தமிழ் சினிமாவில் காணாமல் போன சமூக சிந்தனை,நடைமுறை யதார்த்தம் குறித்து பேசியது இந்தபடம். 30 வயதுக்கு மேல் திருமணம் ஆகாதவர்கள் அதிகமுள்ள சமூகமாக தமிழ்ச்சமூகம் மாறிவருவது குறித்து பேசியது இந்தப்படம். பிரசன்டேஷன் வகையில் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் கதைக்களத்துகாக 'அட'  போடலாம். 

 டாப் 10

ஜாக்சன் துரை - இந்த பேய் சீசனை மிஸ் பண்ணினால் இதே சான்ஸ் திரும்பக் கிடைக்காது என சிபிராஜ் அப்பாவை வற்புறுத்தி இருப்பார் போல, சொந்த வாழ்க்கையில் கடவுளைக்கூட நம்பாத சத்யராஜ் பேயாக நடித்த படம் இது.  மொட்டை ராஜேந்திரன்,யோகி பாபு, கருணாகரன் என ஆங்காங்கே கொஞ்சம் ஜவ்வு மிட்டாய் கொடுத்தாலும் ஓவரால் ரிசல்ட்டாக 'ஓகே' வாங்கிய படம்.   

 டாப் 10

தில்லுக்கு துட்டு - "நான் இனி காமெடியன் மட்டும் கிடையாது... ஐ ஹேவ் அதர் ஐடியாஸ்..." என சந்தானம் ட்ராக் மாறிய பின் வந்த மூன்றாவது படம். முழுக்க முழுக்க ஹீரோ மெட்டிரியலாக அவர் மாறி இருந்ததை உணரமுடிந்தது. தனது குருநாதரின் இயக்கத்தில் சந்தானம் நடித்த இந்தப்படம் 'வதவத'  என வந்துக்கொண்டிருக்கும் பேய்ப் பட க்ரௌடிலும் தப்பியது. 

 டாப் 10

தர்மதுரை - "நல்லப் படம்தான் ஆனா கொஞ்சம் இழுக்குது..." என சிட்டி ஏரியாக்களில் பேச்சு கிளம்பிய போது நின்று நிதானமாக பி மற்றும் சி சென்டர்களில் ஓடியது. ஏற்கெனவே தேசிய விருது வாங்கிய கூட்டணியான விஜய் சேதுபதி - சீனு ராமசாமி இணைந்திருந்ததால் படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பாராட்டிய அளவிற்கு இயக்குநர் சொல்ல நினைத்த மெசேஜ் ரீச் ஆகியிருந்தது.  

 டாப் 10

தேவி - பாட்டியைப் பார்க்க வந்த இடத்தில் கட்டாயமாக ஒரு பெண்ணை கட்டிவைக்க்கிறார்கள். அவரோடு ஒண்டு குடித்தனமாக போன வீட்டில் இருக்கும் பேய் மனைவியை பிடித்துக்கொள்ளும் கதை. ஒரே சமயத்தில் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப் பட்ட படம். பிரபு தேவா- தமன்னா -சோனு சூட் என மூன்று பேரும் பெர்பெக்ட்டாகவே கொண்டு போய் தப்பித்தார்கள். ஏ.எல்.விஜய் இயக்கமும் படம் தப்பிக்க ஒரு காரணம். 

 டாப் 10

அச்சம் என்பது மடமையடா - வழக்கமாக சிம்பு ஒரு படத்தில் நடிக்கும் போது எழும் எல்லாப்பிரச்சினைகளும் இந்தப்படத்திற்கும் எழுந்தது. இருந்தாலும் மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது இது கொஞ்சம் சீக்கிரமே வெளியான சிம்பு படம் என்றே சொல்லலாம். பாடல்களும் ஏற்கெனவே வெளியாகி ஹிட் அடித்திருந்ததால் பட ரிலீசுக்கு சாஃப்ட் லாஞ்ச் கிடைத்தது. இயக்குநர் கௌதம் மேனனின் பிபியும் படம் வெளியாகி ஓடியதால் நார்மலுக்கு வந்திருக்கும். 

 டாப் 10


சென்னை 28  - 'பாய்ஸ் ஆர் பேக்' இரண்டாம் பாகம் எப்பவுமே முதல் பாகத்தை தூக்கி சாப்பிட்டு விடாது என்கிற தமிழ் சினிமா லாஜிக்கை மீறாத படம். படம் முழுக்க கவுண்டர் டயலாக்கிலும், மொக்கை பஞ்ச்சிலும் மிர்ச்சி சிவா பின்னி பெடலெடுக்க ஒரு வழியாக லாஸ்ட் பாலில் சிங்கிள் தட்டி வெற்றி பெற்றுள்ளார்கள். 

 டாப் 10

-வரவனை செந்தில்  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close