இயக்குநர் சுராஜை விளாசிய நயன்தாரா, தமன்னா..! | Nayanthara and Tamannaah against for director suraaj speech

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (26/12/2016)

கடைசி தொடர்பு:16:16 (27/12/2016)

இயக்குநர் சுராஜை விளாசிய நயன்தாரா, தமன்னா..!

‘கத்தி சண்டை’ படத்தை பற்றியான ஒரு பேட்டியில் இயக்குநர் சுராஜ், ஹீரோயின்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். அவர் கூறிய கருத்துக்கு பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நயன்தாராவும் இயக்குநர் சுராஜின் கருத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

“ஹீரோயின்கள் பணம் கொடுத்தால், என்ன வேண்டுமானால் செய்வோம் என அவர் நினைக்கிறாரா? இதே போன்ற கருத்தை அவர் தனது குடும்பத்தைப் பார்த்து சொல்வாரா? கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே நாங்கள் கிளாமருக்கு ஒத்துக்கொள்வோம். ‘தங்கல்’, ‘பிங்க்’ போன்று பெண்களை பெருமைப்படுத்தும் படங்கள் பல வந்து கொண்டிருக்கின்றன. ரசிகர்களும் தற்போது அந்த மனநிலையில் இல்லை. அவர்களும் கதைக்கு ஏற்றவாறு இருந்தால் தான் ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படியிருக்கும் போது சுராஜ் கூறிய இந்த கருத்தை அவர் மாற்றிக் கொள்ளவேண்டும்” என்று நயன்தாரா விளாசியுள்ளார்.

நயன்தாராவை போல் நடிகை தமன்னாவும் இயக்குநர் சுராஜின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் நடித்த கத்தி சண்டை பட இயக்குநர் சுராஜ் கூறிய கருத்துகளால் நான் வேதனையும், கோபமும் அடைந்துள்ளேன்.

அவர் என்னிடமும், சினிமாவில் இருக்கும் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்“ என கூறியுள்ளார். நடிகைகள் குறித்து இயக்குநர் சுராஜ் கூறிய கருத்துகளுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close