9 வருடங்களுக்கு பிறகு நடிக்க வருகிறார், குஷ்பு..! | Actress Kushboo acting in Telugu movie after 9 years

வெளியிடப்பட்ட நேரம்: 10:36 (28/12/2016)

கடைசி தொடர்பு:10:35 (28/12/2016)

9 வருடங்களுக்கு பிறகு நடிக்க வருகிறார், குஷ்பு..!

நடிப்பிற்கு கொஞ்சம் ப்ரேக் கொடுத்துவிட்டு தீவிர அரசியலில் இறங்கிய நடிகை குஷ்பு, மீண்டும் நடிக்க வருகிறார். ஆனால், இவர் நடிக்கப்போவது தமிழ் படத்தில் அல்ல. த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் தெலுங்கு படத்தில் நடிக்க போகிறார் குஷ்பு. இந்த அறிவிப்பை அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டிருக்கிறார்.

சரியாக 9 வருடங்களுக்கு முன்பு ராஜமௌலியின் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தெலுங்கு படம் ஒன்றில் குஷ்பு நடித்தப்பின்பு, அவர் வேறு எந்த தெலுங்கு படத்திலும் நடிக்கவில்லை. தற்போது அவர் பவன் கல்யாண் நடிக்கும் 25வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close