“நாங்களும் பொங்கலுக்கே ‘விஜய்’யம் செய்கிறோம்..!” - பார்த்திபன் | Koditta Idangalai Nirappuga movie's release date chanced

வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (28/12/2016)

கடைசி தொடர்பு:11:17 (28/12/2016)

“நாங்களும் பொங்கலுக்கே ‘விஜய்’யம் செய்கிறோம்..!” - பார்த்திபன்

டிசம்பர் மாதம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட பின் சில தேதி மாற்றங்களை சந்தித்தது ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம். தேதி மாற்றங்கள் வந்த போதும் டிசம்பர் மாதம் திரைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் பொங்கலுக்கு ரிலீஸ் என தற்போது அறிவித்திருக்கின்றனர். 

சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா, பார்த்திபன் மற்றும் பலர் நடித்த இந்த படத்தின் சில முன்னோட்டங்கள் வெளிவந்து படத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்த நிலையில், ஜனவரி 12ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. 

 

அதற்கான அறிவிப்பு போஸ்டரில், ‘நாங்களும் பொங்கலுக்கே ‘விஜய்’யம் செய்கிறோம்!’ என்று போட்டுள்ளார் இயக்குநர் பார்த்திபன். பொங்கலுக்கு விஜய் படம் வருவதால் விஜயம் என்கிற வார்த்தையை ‘விஜய்’யம் என்று விஜய் பெயரை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பல படங்களோடு தற்போது இந்த படமும் சேர்ந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்