பாண்டுவிற்கு பிரபுதேவா செய்யும் மரியாதை..!

உலகநாயகன் கமல்ஹாசன் தான் தன் வாழ்நாளில் 50 வருடங்களை சினிமாவிற்காக அர்ப்பணித்த முதல் மனிதர். அவருக்கு அடுத்து அந்த பாக்கியம் நடிகர் பாண்டுவிற்கு கிடைக்கப்போகிறது. பாண்டு சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக சேர்த்து, பின்னர் நடிகராக இருந்து வருகிறார். 

அடுத்த வருடத்தோடு பாண்டு சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் நிறைவு பெறுகிறதாம். இதனை அவர் ஏதார்த்தமாக பிரபுதேவாவிடம் கூற, ‘இதை பெரிய விழாவாக கொண்டாடவேண்டும். அதனை நானே செய்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். 

இதைப்பற்றி பாண்டுவிடம் கேட்டப்போது, “ ‘நினைவிருக்கும் வரை’ படத்தில் இருந்து எனக்கும் பிரபுதேவாவிற்கும் நல்ல பழக்கம். சினிமாவையும் தாண்டி நாங்கள் குடும்ப நண்பர்கள். விஷாலை வைத்து அவர் இயக்கும் ‘வெள்ளை ராஜா கருப்பு ராஜா’ படத்தில் நானும் நடிக்கிறேன். அந்த பட வேலைகளின் போது பிரபுதேவா, ‘நீங்க சினிமாவுக்குள் வந்து எத்தனை வருடங்கள் ஆச்சு..?’ என்று எதார்த்தமாக கேட்டார். அப்போது கணக்கெடுத்து பார்க்கும் போது, நான் சினிமாவுக்குள் வந்து 49 வருடங்கள் ஆச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அடுத்த வருடம் 50வது வருடம் என்பதால் அதனை பிரபுதேவாவே பெரிய விழாவாக எடுத்து நடத்துகிறார். அடுத்த வருடம் அந்த விழா நடைபெறும்” என்றார் பாண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!