மகனிடம் குஸ்தியில், பாசத்தில் தோற்கும் அமீர்கான்! டங்கல் வீடியோ

Amir khan

சேர் இல்லைனாலும் பரவாயில்லை; நின்னுக்கிட்டாவது பார்க்குறோம்’ என்று ரசிகர்கள் கெஞ்சுகிற அளவுக்கு, தன்னுடன் ரிலீஸான மற்ற படங்களுக்குப் பொங்கல் வைத்துவிட்டது ‘டங்கல்’. 3 நாட்களில் 100 கோடி, தற்போதைய நிலவரப்படி 170 கோடி என்று வசூலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் டங்கலின் இந்த மிகப் பெரிய வெற்றிக்குப் பின்னால், கண்ணுக்குத் தெரியாத உழைப்பு நிறைய இருக்கிறது. அதிலும் அமீர்கானின் டெடிகேஷன்... ‘வாவ்!’

Amir khan

படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளாக இருந்தாலும், சண்டையில் டூப் போடுவதுதான் சில ஆக்ஷன் நடிகர்களின் ஸ்பெஷல். ஆனால், படத்தில் ரெஸ்ட்லிங் சம்பந்தமாக ஒன்றிரண்டு சீன்கள்தான் அமீர்கானுக்கு. ‘உடம்பைக் குறைக்கிறது கஷ்டம்... டூப் வேணா போட்டுக்கலாம்’ என்று அட்வைஸ்கள் வாலன்டியராக வந்தபோது, ‘'டூப் போட்டால் ரசிகர்களை நான் ஏமாற்றுவதுபோல் ஆகிவிடும். ரெண்டு சீன் என்றாலும் பரவாயில்லை; எத்தனை மாதம் ஆனாலும் பரவாயில்லை.. ரெஸ்ட்லிங் ட்ரெய்னிங் எடுத்த பிறகுதான் ஷூட்டிங்’’ என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாராம். இப்போதுகூட படம் பார்ப்பவர்கள், ‘ரோப் வெச்சு இழுத்துருக்காங்களோ.. டூப்பா இருக்குமோ... அமீர் சின்ன வயசு உடம்பை வெச்சு மார்பிங் பண்ணியிருக்காங்களோ’ என்று ரசிகர்கள் தங்களின் மெடுல்லா ஆப்லேங்கேட்டாவைச் சொறிந்து கொண்டே யோசிக்க வைக்கும் அளவுக்கு நடித்திருப்பது, அமீருக்குக் கிடைத்த வெற்றியே! இதற்காக ‘குஸ்தி’ பற்றி புத்தகங்களைச் சேகரித்துப் படித்தது, காமன்வெல்த் கேமில் கலந்து கொண்டு தங்கம் வாங்கப் போகும் வீரனைப்போல் பயிற்சி எடுத்தது, 100 நாட்கள் கடுமையாக ஒர்க்-அவுட், டயட் என்று புஜங்களைப் புடைக்க விட்டதெல்லாம்... வேற லெவல்!

Amir khan

அமீர் பயிற்சி எடுக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இப்போது நெட்டில் பயங்கர வைரல் ஆகி வருகிறது. ‘டங்கல்’ படத்தைவிட ‘Behind the scene’ ஆக எடுக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோவுக்கு வியூவர்ஸ் அதிகமாகி தெறி ஹிட் ஆகியிருக்கிறது. இதில் விசேஷம் என்னவென்றால், இந்த வீடியோவின் மூலம் அமீர்கானின் இளைய மகன் ஆஸாத்தும் இப்போது சோஷியல் மீடியா செல்லம் ஆகிவிட்டிருக்கிறார். வீடியோவில் தன் செல்ல மகனுடன் கட்டிப் புரண்டு குஸ்தி போட்டு தோற்றுப் போகும் தந்தை அமீர்கானின் பாசம்... ஆசம்!

                                                                                                                                                                                   

 

- தமிழ்.

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!