போலி அக்கவுன்ட்டின் ட்வீட்டால் பரபரப்பு..! | Fake twitter handle in the name of Kamal Haasan

வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (30/12/2016)

கடைசி தொடர்பு:12:59 (30/12/2016)

போலி அக்கவுன்ட்டின் ட்வீட்டால் பரபரப்பு..!

நடிகர் கமல் ஹாசன் சமூக வலைதளமான ட்விட்டரில் அவ்வப்போது ஆக்ட்டிவ்வாக இருந்து வருகிறார். ஏதாவது மகிழ்ச்சி செய்தி அல்லது இரங்கல் செய்தி என்றாலும், ரசிகர்களிடம் ஏதாவது கூற வேண்டும் என்றாலும் அதை தான் பயன்படுத்துகிறார்.

ஆனால், தற்போது அவரது ஒரிஜினல் அக்கவுன்ட்டை போலவே ஒரு போலி அக்கவுன்ட்டை உருவாக்கியுள்ளனர். இரண்டு அக்கவுன்டிற்கும் 'a' என்கிற ஒரு எழுத்து தான் வித்தியாசம். கமலின் ஒரிஜினல் அக்கவுன்ட் @ikamalhaasan என்றும் போலி அக்கவுன்ட் @ikamalhasan என்றும் இருக்கிறது. கமலின் ஒரிஜினல் அக்கௌன்ட்டில் ப்ளூ டிக் இருக்கும்.

நேற்று இந்த போலி அக்கவுன்ட்டில் இருந்து ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒரு ட்வீட் போடப்பட்டது. அது போலி அக்கவுன்ட் என்று தெரியாத பலர், கமல் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார் என தகவலை பரப்பியும், அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்தும் உள்ளனர். பிறகு சிலர் அது போலி அக்கவுன்ட் என்று தெரிந்த பின்னர் உஷாராகியுள்ளனர். நீங்களும் உஷாரா இருக்க பாஸ்..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்