சென்னை 28 - II இன்னிங்ஸ் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்! (வீடியோ)

சில மாதங்களுக்கு முன் வெளியாகி சிக்ஸர் அடித்த படம் சென்னை 600028 - II இன்னிங்ஸ். ஜெய், சிவா, வைபவ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படம், ரூபாய் நோட்டு பிரச்னையில் ஏடிஎம் முன் கால் வலிக்க நின்று கொண்டிருந்த மக்களையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து சோகத்தை மறக்கடித்தது. இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் நேற்று யூடியூப்பில் வெளியானது. மார்ஃபியல் லேகியம், அன்டாக்‌ஷாரி, அவுட் கோயிங், அர்னால்டின் சவால் என மொத்தம் 12 காட்சிகள் சேர்ந்து ஒரே தொகுப்பாக வெளியாகியுள்ளது.

சென்னை 28

'வயிற்று வலிக்கு மார்பியஸ் ப்ளூ, தலைவலிக்கு லா மார்டின் டானிக்குகள் வாங்கப்போகிறோம்' என சரக்கு வாங்க கல்யாண வீட்டில் இருந்து பொய் சொல்லி கிளம்பும் 'மார்பியஸ் லேகியம்'.

சிவ பூஜையில் கரடி பூந்தாற் போல சரக்கடிக்க போகும் நேரம் பார்த்து அவர்களின் மனைவிகள் 'பாட்டுக்கு பாட்டு' விளையாட கூப்பிட, சோகத்தில் சோக பாட்டாய் பாடி அழுவும் ' லேடீஸ் லவ் அன்டாக்‌ஷாரி'.

கிராமத்தில் காலைக்கடன் கழிக்க அல்லோலப்படும் ' அவுட்கோயிங் ஃப்ரீ'.

சரக்கடிக்கலாம் என்ற ப்ளானோடு ஊரில் இருந்த கிளம்பி வந்த நண்பர்கள், குடும்பத்தோடு கொஞ்சி விளையாடி கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகும் சிங்கிள் சீனுவின் ஃபீலிங்கை சொல்லும் ' அப்செட் சீனு'.

'மாஸ்டர் மைன்ட் அரவிந்த்'தின் மங்குனி பிளான்.

பல ஆண்டுகளுக்கு பிறகு அரவிந்த சென்னைக்கு செல்லும் உருக்கமான ' அரவிந்த் இன் சென்னை 28' காட்சி.  

'அண்ணாமலை' ரஜினி கனக்காய் மனோகர் அண்ணனிடம் அர்னால்டு சவால் விடும் 'அர்னால்டு சேலஞ்ச்'.

ட்ரெய்லரில் ஜெய் சொல்லும் ' ராம் கோபால் வர்மாவாவே இருந்தாலும் கர்மாவுக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்’  வசனம் இடம்பெறும் 'தி கர்மா வர்மா'.

அனு மனதை மாற்றும் ' அனு ப்ரெய்ன் வாஷ்டு' - என எல்லா காட்சிகளுமே வேற லெவல். ஆனால், டயாக்குகளில் ஆங்காங்கே ப்ளோவில் கெட்டவார்த்தை வந்திருக்கும். அதனால், 18 வயசுக்கு கீழ உள்ளவங்க, இதயம் பலவீனமானவங்க பார்க்க வேண்டாம்.

 

சரி, இது இருக்கட்டும் கபாலி படத்தின் நீக்கபட்ட காட்சிகளை பார்த்தாச்சா?  

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!