2016ஆம் ஆண்டில் ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ என்று பெயர் சொல்லும் இரண்டு படங்களை கொடுத்து, தனக்கான ஒரு இடத்தையும் ரசிகர்களிடம் பிடித்து விட்டார் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனி நடித்த முதல் படமான ‘நான்’ படத்தின் இயக்குநர் ஜீவா சங்கரோடு இணைந்து ‘எமன்’ என்கிற படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் விஜய் ஆண்டனி.
இந்த படத்தின் வேலைகளை விரைவில் முடித்துவிட்டு, படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடவுள்ளார். ‘எமன்’ படத்தின் சிங்கிள் ட்ராக் ஏற்கெனவே வெளிவந்து நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு அடுத்ததாக சரத்குமார்-ராதிகாவின் தயாரிப்பில் புது படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் விஜய் ஆண்டனி. 2016ஆம் ஆண்டைப் போல் 2017ஆம் ஆண்டும் விஜய் ஆண்டனிக்கு நல்ல வருடமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
