‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளர்..?! | Who is the music composer of Enai Nokki Paayum Thotta movie

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (02/01/2017)

கடைசி தொடர்பு:13:34 (02/01/2017)

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளர்..?!

Who is the music composer of Enai Nokki Paayum Thotta

‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு அடுத்து இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர், சாங் ப்ரோமோ போன்றவை வெளியான போதும், இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று இதுவரை அவர் தெரியப்படுத்தவேயில்லை. 

இந்த நிலையில், பாடலாசிரியர் மதன் கார்க்கியின் பாடல் இணையதளமான டூபாடூவிற்காக ஒரு பாடலை இசையமைத்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் கௌதம். ‘ஓ... கௌதம் மேனன் கம்போஸ் பண்ணுவாரா..?!?! அப்போ அவர் தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு இசையமைப்பாளரா இருப்பாரோ..!’ என்று பலர் யோசித்து வருகின்றனர். 

Who is the music composer of Enai Nokki Paayum Thotta

இதனை ட்விட்டரில் பதிவிட்ட மதன் கார்க்கியும், “கௌதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று நீங்கள் யோசித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் கௌதம் இசையமைத்திருக்கும் இந்த பாடலை கேளுங்கள்” என்று ட்வீட் செய்துள்ளார். ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு கௌதம் மேனன் இசையமைப்பாளராக இருக்கலாம் என்பதை சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது மதன் கார்க்கி பதிவிட்ட இந்த ட்வீட். 

Who is the music director of Enai Nokki Paayum Thotta

இப்படி ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும், தனுஷிற்கு இசை ஆர்வம் அதிகம் இருப்பதால், இந்த படத்திற்கு தனுசே இசையமைப்பாளராக இருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் பேசி வருகின்றனர். யார் தான் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close