வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (02/01/2017)

கடைசி தொடர்பு:15:38 (02/01/2017)

ஷாக் கொடுத்த சிம்புவின் ட்வீட்..!

Music Director Simbu

‘சந்தானம் படத்திற்கு இசையமைக்கிறார் சிம்பு’ என்கிற செய்தி எவ்வளவு ஷாக் கொடுத்ததோ அதே போல், இன்று சிம்பு பதிவிட்டிருக்கும் ட்வீட்டும் செம ஷாக்காக இருக்கிறது. சந்தானம் நடிக்கும் ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்திற்கு கமிட்டான வேகத்திலேயே அனைத்து பாடல்களையும் கம்போஸ் செய்து விட்டாராம். இனி ரெக்கார்டிங் மட்டும் தான் மீதமுள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிம்பு. 

Music Director Simbu

‘டிரிப்பிள் ஏ’ படப்பிடிப்பில் படு பிஸியாக இருந்தாலும், வேகமாக அனைத்து பாடல்களையும் முடித்து விட்டார் சிம்பு. சமீபத்தில் சிம்பு, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக குரல் கொடுத்தது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல் ட்விட்டரிலும் அவர், ‘ஐ சப்போர்ட் ஜல்லிக்கட்டு’ என்ற படத்தை வைத்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்