சத்யராஜின் மகள் நடிக்கும் குறும்படம்..!

actor Sathyaraj’s daughter

சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜ் என இருவரும் நடிப்பில் பிஸியாக இருப்பவர்கள். ஆனால் சத்யராஜின் மகள் திவ்யா நடிப்பில் ஆர்வம் காட்டாமல் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். தற்போது விளையாட்டின் முக்கியத்துவத்தையும், ஊட்டச்சத்து உள்ள உணவு பழக்கங்களை மேற்கொள்வதால்  உண்டாகும் பயன்களை பற்றி எடுக்கப்படும் ஒரு குறும்படத்தில் நடிக்க இருக்கிறார் திவ்யா சத்யராஜ். இந்த குறும்படத்தில் இவரோடு இணைந்து, கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் வீரர்களும் நடிக்க இருக்கிறார்கள்.    

இந்த குறும்படத்தைப் பற்றி திவ்யா சத்யராஜ் கூறும் போது, “உடற்பயிற்சி என்பது வேறு, கட்டுப்பாடான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது என்பது வேறு. ஆனால் என்னிடம் ஆலோசனை கேட்டு வரும் சிலர், உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால் உடற்பயிற்சி  செய்ய தேவை இல்லை எனவும், உடற்பயிற்சி  செய்தால் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க  தேவை இல்லை என்கின்ற மன நிலையிலும் தான் இருக்கின்றனர். உடற்பயிற்சி என்பது நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க கூடாத ஒன்று. 

என்னதான் அதி நவீன உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்தாலும், பெரும்பாலானோருக்கு அதில் தொடர்ந்து நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது. அதற்கு காரணம்,  ’கலோரி’ குறைந்து விட்டதா என்று பயந்து பயந்து பயிற்சி மேற்கொள்வது தான். ஆனால் விளையாட்டு என்பது அப்படியில்லை. நம்முடைய முழு கவனத்தையும் விளையாட்டில் செலுத்தும் போது, நம் உடலில் இருக்கும்  ’கலோரிகள்’ தானாகவே குறைந்துவிடும். மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக செயல்படுவது மட்டுமன்றி, சிறந்த ஒரு உடற்பயிற்சியாகவும் விளையாட்டு கருதப்படுகிறது. இதனை மையப்படுத்தி எடுக்கப்படுவதே இந்த குறும்படம்‘ என்று கூறினார் திவ்யா சத்யராஜ்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!