Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஹ்மான் இசையமைத்த இந்த பாப் பாடல்களில் எதெல்லாம் உங்களுக்கும் பிடிக்கும்?

ரஹ்மான்

'மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, நடித்த மியூசிக் வீடியோக்களின் தொகுப்பு இது. உங்களில் பலர் இவற்றில் பல பாடல்களை கேட்டிருக்கவே மாட்டீங்க. 

மா துஜே சலாம் :

1997 ஆம் ஆண்டில் வெளியான 'வந்தே மாதரம்' ஆல்பம், 'தேசப்பற்று' என்றதும் நம் நினைவுக்கு வரும். பள்ளிக்கூட காலங்களில் சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் தேசிய கொடியை அசைத்து பெர்ஃபாம் செய்தோமே, அந்த 'தாய் மண்ணே வணக்கம்' பாடலின் இந்தி வெர்ஷன் தான் 'மா துஜே சலாம்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, பாடி, நடித்த இந்த மியூசிக் வீடியோவை இயக்கியது 'மரியான்' படத்தின் இயக்குநர் பரத்பாலா. உலகிலேயே அதிக மொழிகளில் பாடப்பட்ட பாடல் என்ற கின்னஸ் சாதனையையும் இந்த பாடல் அடைந்ததுள்ளது. 

ப்ரே ஃபார் மீ ப்ரதர் :

இசைப்புயல் இசையமைத்து பாடிய முதல் ஆங்கிலப்பாடல். ஐக்கிய நாடுகளின் பத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளின் ஒன்றான தீவிர வறுமையை ஒழித்தலின் கீதமாக இந்த பாடல் உருவாக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த பாடலை இயக்கியதும் பரத்பாலா தான். ரஹ்மானோடு இணைந்து ராப் பாடகர் ப்ளாஸியும் இந்த பாடலை பாடியிருப்பார். மொபைல் சினிமாஸ்கோப் ஃபார்மெட்டில் படமாக்கபட்ட முதல் மியூசிக் வீடியோ இது தான். பாட்டையும் கொஞ்சம் பாருங்க ப்ரதர்...

ஒன் லவ் :

காதலின் சின்னமான தாஜ்மஹால் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கபட்டதை கொண்டாடும் மியூசிக் ஆல்பம். ஆல்பத்திலுள்ள ஆறு பாடல்களும் ஒரே மெட்டுத்தான். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காளி என ஆறு மொழிகளில் பாடப்பட்டிருக்கும். 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்'னு பாரதியே சொல்லிட்டதால தமிழ் வெர்ஷனையே இங்கே கொடுத்திருக்கோம்.

ஜியே ஸே ஜியா :

'வசனமாடா முக்கியமா, மியூஸிக்கை கேளுடா...' என்பவர்கள் தாராளமாக கேட்கலாம். 'உஜ்ஜரே... உஜ்ஜரே...' என ரஹ்மான் ஹைபிட்சில் ஆரம்பித்து வைக்க, முழுப்பாடலும் செம எனர்ஜிட்டிக்காக இருக்கும். ரஹ்மானின் நெருங்கிய நண்பர் டிரம்ஸ் சிவமணி டிரம்மில் விளையாடிருப்பார். சில விஷயங்களை சொல்றதை விட பார்க்குறது இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும். நீங்க வீடியோவையே பார்த்துடுங்க...

ஜெய் ஹோ ( யூ ஆர் மை டெஸ்டினி ) :

ரஹ்மானுக்கு ஆஸ்கரை பெற்று தந்த 'ஜெய் ஹோ...' பாடலின் பாப் வெர்ஷன். இந்த பாடலை பிரபல அமெரிக்க பாப் இசை குழுவான தி புஸி கேட் டால்ஸ் மறு உருவாக்கம் செய்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் என பலநாடுகளில் இந்தப்பாடல் மிகவும் பிரபலமடைந்தது. விமர்சகர்களிடமிருந்தும் பாஸிட்டிவான பாராட்டுகளை பெற்றது. ஜெய் ஹோ....

செம்மொழியான தமிழ் மொழியாம் : 

2010 ஆம் ஆண்டில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் அதிகாரப்பூர்வ பாடல். கர்நாடக இசை, கிராமிய இசை, ராக், ராப் என கலந்து கட்டி இசை விருந்து படைத்திருப்பார் ஏ.ஆர்.ஆர். டி.எம்.சௌந்தரராஜனில் ஆரம்பித்து ஸ்ருதி ஹாசன் வரை பல பிரபல பாடகர்களும், இசையமைப்பாளர்களும் இணைந்து பாடிய இந்த பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை இயக்கியது கௌதம் மேனன். இந்த பாடல் வெளியான சமயத்தில் அரசு பேருந்துகளிலுள்ள டிவிகளில் திரும்ப திரும்ப ஒளிபரப்பபட்டு கொண்டே இருந்தது. அத்தனை முறையும் அசராமல் பார்த்தார்கள் ரஹ்மேனியாக்ஸ்.

சேஞ்சிங் சீஸன் :

'எனது முதல் சர்வதேச மியூசிக் வீடியோ விரைவில் வெளியாகவுள்ளது' என தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பாடலின் டீசரை வெளியிட்டிருந்தார் ரஹ்மான். மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த பாடலை, பின்னர் தனி மியூசிக் வீடியோவாக வெளியிட்டார். அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை இந்தப் பாடலுக்கு பயன்படுத்தியிருப்பார் இதன் இயக்குநர் ஜான் வார்னர். இதன் தமிழ் வெர்ஷனை நீங்க கண்டிப்பா கேட்டுருப்பீங்க, மறுபடியும் ஒருமுறை கேட்டுப்பாருங்க...

இன்ஃபைன்ட் லவ் :

'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்பதை இசையாலும், காட்சிகளாலும் விவரிக்கும் பாடல். குழந்தைகள் மனதில் உள்ள அன்பையும், அந்த அன்பு இந்த உலகையே எவ்வளவு மகிழ்ச்சியானதாக மாற்றும் என்பதையும் அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். ரஹ்மானின் காஸ்ட்யூம் வேற லெவல்...

கிங்கா :

ஆஸ்கார் நாயகனுக்கு அடுத்த ஆஸ்கரை வாங்கித்தருமா? என எல்லோரையும் எதிர்பார்க்கவைத்திருக்கும் பாடல் இது தான். கால்பந்து விளையாட்டின் ஜாம்பாவன் பீலேவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் 'பீலே : பர்த் ஆஃப் லெஜண்ட்' படத்திற்காக இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பா பார்த்துடுங்க...

- ப. சூரியராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்