சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய ஜி.வி.பிரகாஷ்..! | Adangathey movie teaser will be released on pongal

வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (07/01/2017)

கடைசி தொடர்பு:12:45 (07/01/2017)

சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய ஜி.வி.பிரகாஷ்..!

Adangathey movie teaser

‘பைரவா’ படத்துடன் ‘புரூஸ் லீ’ படமும் வெளியாகும் என்று அறிவித்தப்பின்னர், ‘பொங்கலுக்கு அண்ணனோட வர்றோம்’ என்று ஜி.வி.பிரகாஷ் கூறினார். ஆனால், திடீரென நேற்று ‘புரூஸ் லீ’ படத்தின் ரிலீஸ் பிப்ரவரி மாததிற்கு தள்ளிப்போகிறது என்று அறிவித்தனர்.

bruce lee movie release postponed

அந்த அறிவிப்பு வந்தது தான் தாமதம், உடனே நெட்டீசன்கள் ‘ஏதோ பொங்கலுக்கு அண்ணனோட வர்றோம்னு சொன்னாரே, இப்ப என்ன ஆச்சு’ என்று ஜி.வி.பிரகாஷை கலாய்க்கத் தொடங்கினர். பொங்கலுக்கு ‘பைரவா’ படத்தோட ‘புரூஸ் லீ’ படத்தை வெளியிட முடியாமல் போனாலும் ‘பொங்கலுக்கு அண்ணனோட வர்றோம்’ என்று ஜி.வி, சொன்ன வார்த்தை தற்போது காப்பாற்றியிருக்கிறார். 

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், சுரபி நடிக்கும் படம் ‘அடங்காதே’. பரபரப்பாக படப்பிடிப்பு சென்று கொண்டிருந்த வேளையில், புத்தாண்டு அன்று இந்த படத்தின்  போஸ்டரை வெளியிட்டனர். தற்போது பொங்கலுக்கு ரிலீஸாகும் ‘பைரவா’ படத்தோடு ‘அடங்காதே’ படத்தின் டீசரையும் வெளியிடவுள்ளனர்.

bruce lee movie release postponed

ஆக, ‘பொங்கலுக்கு அண்ணனோட வர்றோம்’ என்று ஜி.வி.பிரகாஷ் கூறிய அந்த வார்த்தையை தற்போது காப்பாற்றியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close