தர்மதுரையை பாராட்டிய தர்மதுரை..! | Rajnikanth wishes Dharmadurai team on its 100 day success

வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (07/01/2017)

கடைசி தொடர்பு:16:40 (07/01/2017)

தர்மதுரையை பாராட்டிய தர்மதுரை..!

Dharmadurai Success

ரஜினிகாந்தின்  படப்பெயரான தர்மதுரையை தனது படத்திற்கு வைத்த விஜய் சேதுபதி, ரஜினி படத்தைப் போல தனது படத்தையும் வெற்றிப்படமாக மாற்றிவிட்டார். சமீபத்தில் நடந்த 100வது நாள் விழாவில், தர்மதுரை படத்தில் நடித்த மற்றும் வேலை செய்த அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. இந்த கேடயம் வழங்கும் முறை பல ஆண்டுகளுக்கு முன்பே வழக்கொழிந்து விட்டது. அதற்கு மறுபடியும் உயிர்க்கொடுத்தது தர்மதுரை வெற்றி. 

அனைவருக்கும் கேடயம் கொடுத்து விட்டு, ரியல் தர்மதுரைக்கு கொடுக்காமல் விட்டுவிட்டால் எப்படி..!? ரஜினிகாந்த்தை சந்தித்த தர்மதுரை படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, இயக்குநர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், அவருக்கும் தர்மதுரை படத்தில் 100வது நாள் கேடயத்தை கொடுத்து, அவரிடம் இருந்து வாழ்த்து பெற்றனர். 

Dharmadurai Success

இந்த சந்திப்பு ஏறக்குறைய 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது.  அந்த நேரங்களில் விஜய் சேதுபதியின் நடிப்பையும், படத்தின் அம்சங்களையும் குறிப்பிட்டு அவற்றை பாராட்டினார் ரஜினிகாந்த். மேலும் எம்.எஸ். பாஸ்கர், ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டார். சந்திப்பு இனிதே நிறைவு பெற்றது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்