Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதை எல்லாம் எப்ப மாத்துவீங்க கெளதம் மேனன் தோழர்?

'அச்சம் என்பது மடமையடா' படம் வந்த ஒரே மாசத்துல `வந்துட்டான்டா அவன் தம்பி`ங்கிற ரேஞ்சுக்கு 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தோட டீசரை ரிலீஸ் பண்ணிட்டார் கெளதம் மேனன். இந்தப் படத்தோட டீசர் பார்த்த பல பேருக்கு இது 'அச்சம் என்பது மடமையடா' படத்தோட தனுஷ் வெர்ஷன் மாதிரியே இருக்கேன்னு டவுட் வந்திருக்கும். இந்த ரெண்டு படம் மட்டும் இல்லை, அவரோட எல்லாப் படத்தோட கதையும் ஒண்ணுதான் ஃப்ரெண்ட்ஸ். எப்படின்னு கேட்கிறீங்களா, இதைப் படிங்க.

கெளதம் மேனன்

* கெளதம் படத்துல இருக்கிறவங்க எல்லோரும் சாப்பிடுறாங்களோ இல்லையோ கண்டிப்பா ஏதாவது காபி ஷாப்ல காபி குடிச்சிட்டு இருப்பாங்க. நேஷனல் ஹைவேல மோட்டல் இல்லாத ஏரியாவில்கூட காபி ஷாப் இருக்கும்னா அது கெளதம் மேனன் படத்துல மட்டும்தான். அவளும் நானும் காபியும் கிளாஸும்னே நீங்க பாட்டு எழுதியிருக்கலாமே ப்ரோ.

* தங்கச்சி சென்டிமென்ட் பேசத்தான் பேரரசு, டி.ஆர்லாம் இருக்காங்களே, அப்பா சென்டிமென்ட் பற்றி நாமதான் பேசணும்னு முடிவு பண்ணி அதைக் கிட்டத்தட்ட எல்லாப் படத்துலேயும் தவறாம ஃபாலோ பண்ணிட்டு இருக்கார் கெளதம். தமிழ் சினிமாவில் காலம்காலமா அப்பாவைத் தப்பா காட்டினதை மாற்றி 'டாட் எல்லோரும் காட்' அப்படினு சொன்னவர் பாஸ் நம்ம டைரக்டர். ஆனாலும் ரியல் லைஃப்ல அந்த நல்ல மாதிரி அப்பாவுக்கு நாங்க எங்கே பாஸ் போறது?

* படத்துக்கு மூணு கிலோமீட்டர் நீளத்துக்கு பேர் வைக்கிறதுதான் இவரோட முக்கியமான ஹாபி. படம் பேரு எவ்வளவு நீளமா இருந்தாலும் கண்டிப்பா தமிழ்லதான் பேர் வைப்பார். விண்ணைத் தாண்டி வருவாயா, பச்சைக்கிளி முத்துச்சரம், எனை நோக்கி பாயும் தோட்டா, அச்சம் என்பது மடமையடா இந்தப் பேர் எல்லாம் படிச்சுப் பாருங்க ஒரு ரெண்டு நாள் ஆகும் படிச்சு முடிக்க.

* படத்துக்கு பேர் வைக்கிற மாதிரியே படத்தோட வில்லனுக்கும் தூயத் தமிழ்ல பேர் வைக்கிறதுதான் இன்னொரு ட்ரெண்ட். என்னதான் வில்லன் சைக்கோ கில்லரா இருந்தாலும் கூட அமுதன், இளமாறன் மாதிரி காவியப் பெயரா வெச்சுதான் எடுப்பார். தமிழ்ல பேரு வைக்கிறோம், லன்ச்சுக்கு சோறு வைக்கிறோம்னு எதுனா சபதமா ப்ரோ?

* என்னதான் கெளதம் படத்துல பேர் எல்லாம் தமிழ்ல இருந்தாலும்  படத்துல டயலாக் எல்லாம் இங்கிலீஷ்லதான் இருக்கும். கோலிவுட்டிலே ஒரு ஹாலிவுட்டுங்கிற ரேஞ்சுக்குதான் எல்லா டயலாக்குமே இருக்கும். படத்துல நடிக்கிற எல்லோரும் இங்கிலீஷ் பேசுறாங்களே... அதைப் பார்க்கிற எல்லோருக்கும் புரியுமானு யோசிச்சுப் பார்த்தீங்களா?

கெளதம் மேனன்

* படத்துல என்னதான் ஆளாளுக்கு டயலாக் பேசினாலும் படத்தோட மொத்தக் கதையும் ஹீரோ தனியா பேக்கிரவுண்ட்ல பேசிக்கிட்டு இருப்பார். ஆமா பாஸ் நாங்கதான் படத்தோட கதையை ஸ்கிரீன்லயே பாத்துடுறோமே... அப்புறம் ஏன் தனியா பேக்கிரவுண்ட் வாய்ஸ்?

* படத்துல ஹீரோவுக்கு என்னதான் சின்ன வயசுல சைக்கிள்கூட வாங்கித் தரலைனாலும் இருபது வயசு ஆனதும் ஸ்ட்ரெய்ட்டா ராயல் என்ஃபீல்ட் வாங்கிக் கொடுத்துடுவாங்க. ஹீரோவும் எப்பவும் பைக்கும், நானும்னு சொல்ற ரேஞ்சுக்கு பைக்கோடயே சுத்திகிட்டு இருப்பார்.

* 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு யார் மியூஸிக் டைரக்டர்னு கெளதம் சொல்லவே இல்லை. கோலிவுட்டே `ஐ யம் வெயிட்டிங்`மோடுலதான் இருக்கு. ஆனா யார் மியூஸிக் டைரக்டரா இருந்தா என்ன பாஸ்? படத்துல கண்டிப்பா இளையராஜா மியூஸிக் இருக்கும்.

-லோ.சியாம் சுந்தர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!