அட... விஜய், அஜித் படங்களில் வடிவேலு! | Vadivelu busy in Vijay and Ajith movies

வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (28/01/2017)

கடைசி தொடர்பு:10:54 (28/01/2017)

அட... விஜய், அஜித் படங்களில் வடிவேலு!

நீண்ட இடைவெளிக்குப் பின் செகண்ட் இன்னிங்சில் அடியெடுத்து வைத்தார் நடிகர் வடிவேலு. 'கத்தி  சண்டை' படத்தில் என்ட்ரி ஆனார். ஆனால், எதிர்பார்த்தபடி அந்த படம் அவ்வளவாக சோபிக்கவில்லை. தற்போது, சிம்பு தேவன் இயக்கத்தில் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அதன்பின் பெயர் வைக்காத ஜி.வி.பிரகாஷ் படம் உள்பட சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுபோன்ற சின்னச்சின்ன படங்களில் மட்டும் தலையைக் காட்டிக்கொண்டு இருந்தால் முன்பு போல பெரிய ரவுண்ட் வர முடியாது என்று எண்ணினார் வடிவேலு. எனவே  ரஜினி, கமலுக்கு பிறகு அடுத்த போட்டியாளர்களாக, இரு துருவங்களாக இருக்கும் விஜய், அஜித் படங்களில் நடிப்பதற்கு முடிவுசெய்து, அதற்கான காய் நகர்த்தும் பணிகளில் கனஜோராக இறங்கி விட்டார், வடிவேலு.  

விஜய், அஜித் படங்களில் வடிவேலு பிஸி


தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரிக்கும் பிரமாண்ட படத்தில் விஜய் நடிக்க, அதை அட்லீ இயக்குகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு இந்தப் படத்தின் பெரும்பகுதியை அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டு வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். சமந்தா, காஜல் அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். எப்போதும் பொது, சினிமா விழாக்களுக்கு ஃப்ரெஷ்ஷாக தாடியில்லாமல் வந்து கொண்டிருந்த விஜய் சமீபகாலமாக தாடி வளர்த்து கொண்டு வருகிறார். அப்படி தாடியுன் விஜய் நடிக்கும் கேரக்டரை சஸ்பென்ஸாக  மறைத்து செதுக்கி கொண்டு இருக்கிறார், அட்லீ. விஜய் தாடியுடன் நடிக்கும் அந்த காதாபாத்திரத்தின் ஜோடியாக, ஜோதிகா நடிக்க இருக்கிறார்.

விஜய்யுடன் படம் முழுக்க இணைந்து நடிக்கும் கேரக்டர் ரோலுக்கு வடிவேலு செலக்ட் செய்யப்பட்டுள்ளார். வழக்கமாக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ள ஒருநாள் கால்ஷீட்டுக்கு தினசரி ரூ. 9 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார் வடிவேலு. இப்போது விஜய்யுடன் நடிக்கும் படத்துக்காக லம்ப்பாக 50 நாட்கள் கால்ஷீட் வாங்கி வைத்து இருக்கிறார் அட்லீ. தினசரி சம்பள அடிப்படையில் ஒப்பந்தம் செய்யாமல் 50 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக ஒரு பெருந்தொகையைப் பேசி அட்வான்ஸ் பணத்தையும் கொடுத்து விட்டனர். அடுத்த மாதம் அமெரிக்காவில் நடக்க இருக்கும் விஜய் படத்தின், படப்பிடிப்புக்காக இப்போதே ஆர்வமாக இருக்கிறார் அலார்ட் ஆறுமுகம்.

சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடிகர், நடிகைகள் 'மெளன அறவழி அமர்வு' போராட்டத்தை நடத்தினர். அந்த நிகழ்ச்சிக்கு மதியம் வந்தார், வடிவேலு. ' ராஜா' படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட சிறு மனக் கசப்பால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே வடிவேலுவுடன் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் அஜித். தற்போது நடிகர் சங்கத்தில் அஜித்தைக் கண்ட வடிவேலு உடனே ஓடோடிச் சென்று அவரைக் கட்டியணைத்துக் கொண்டார், அஜித்தும் அவரை ஆரத்தழுவிக் கொண்டார். பழசை எல்லாம் மறந்த இருவரும் மகிழ்ந்து, நெகிழ்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அதன்பின்  அஜித் தனது புதுப்படத்தில் வடிவேலுவை நடிக்க வைப்பதாகச் சொல்ல, கண்கலங்கி விட்டார், கைப்புள்ள. 

- சத்யாபதி    

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்