விகடன் விருது வென்ற இவர்களின் அடுத்த புராஜக்ட் என்ன தெரியுமா? #AnandaVikatanCinemaAwards | Vikatan Award winner's next projects

வெளியிடப்பட்ட நேரம்: 18:44 (28/01/2017)

கடைசி தொடர்பு:18:44 (28/01/2017)

விகடன் விருது வென்ற இவர்களின் அடுத்த புராஜக்ட் என்ன தெரியுமா? #AnandaVikatanCinemaAwards

கமல்,வைரமுத்து,ரஜினி,ஆர்.ஜே.பாலாஜி,மதன் கார்கி,விகடன் விருதுகள்

வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா. வெற்றி பெற்றவர்களுக்குப் பொறுப்பு கூடியிருக்கும். வெற்றியை விட வெற்றியைத் தக்க வைப்பதற்கான முயற்சிகளும் மெனக்கெடல்களும் தான் விருது தாண்டி எந்த ஒரு துறையின் உச்சபட்ச வேட்கையாக இருக்கும். குறிப்பாக சினிமாத்துறையில் கலை, கமர்ஷியல் என எப்படிப்பட்ட ஏற்பாடாக இருந்தாலும் அதன் இறுதி, ஏதோ ஓர் அங்கீகாரம். அப்படி இந்த முறை ஆனந்த விகடன் சினிமா விருது பெற்ற சிலரின் அடுத்த முயற்சிகள் என்ன என்கிற பட்டியல் இதோ....

சமுத்திரக்கனி:

தனது இயல்பான நடிப்பின் மூலம் கதாபாத்திரம் மற்றும் படத்துக்கு உயிர் கூட்டுபவர் சமுத்திரக்கனி. புதுமுகம் சரவணன் இயக்கும் கொளஞ்சி, தாமிரா இயக்கும் ஆண் தேவதை, சௌந்தர்யா இயக்கும் விஐபி 2, மேஜர் ரவி மலையாளத்தில் இயக்கும் 1971 என நடிகராக மிரட்டும் சமுத்திரக்கனி, கிட்னா, தொண்டன் என இரண்டு படங்களின் இயக்குநராகவும் அசத்த இருக்கிறார்.

ரித்திகா சிங்:

ரித்திகா, ரித்திகா சிங், விகடன் விருது, இறுதிச்சுற்று

இறுதிச்சுற்று மூலம் கவனம் கவர்ந்த சண்டைக்காரி, அதன் தெலுங்கு ரீமேக்கான குரு, பி.வாசு இயக்கியிருக்கும் சிவலிங்கா, செல்வா இயக்கத்தில் அர்விந்த் சுவாமியுடன் வணங்காமுடி என அடுத்தடுத்த படங்கள் மூலமாக அசரடிக்க இருக்கிறார்.

 

மடோனா செபாஸ்டியன்:

வெல்வெட் கேக்கை பிரபலமாக்கியதில் பிரேமம் செலினுக்கு ஒரு பங்கு இருக்கிறது. காதலும் கடந்து போகும் மூலம் தமிழில் அறிமுகமானவர் அடுத்தடுத்து நடிக்க இருப்பதும் தமிழில் தான். ஏற்கெனவே கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் கவண் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தனுஷ் இயக்கிக் கொண்டிருக்கும் பவர் பாண்டி படத்திலும் பவர் ஃபுல்லான ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷுடன் ஐங்கரன் படத்திலும் நடிக்கிறார் மடோனா.

 

சுசீந்திரன்:

மாவீரன் கிட்டுவுக்காக சிறந்த கதைக்கான விருது பெற்றவர், அடுத்து ஒரு படத்துக்கு கதை எழுதிக் கொடுத்திருக்கிறார். தன்னுடைய முதல் படமான வெண்ணிலா கபடிக் குழு படத்தின் இரண்டாம் பாகம் தான் அது. 

 

ராஜூமுருகன்:

சாட்டையடி வசனங்களால் சமூகத்தைக் கேள்வி கேட்டான் ஜோக்கர். அந்த ஜோக்கரை நண்பர் முருகேஷ் பாபுவுடன் இணைந்து பேச வைத்திருந்தார் ராஜுமுருகன். அடுத்ததாக ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மாரியப்பன் பயோ பிக் படத்தின் வசனங்கள் எழுதும் பொறுப்பு ராஜுமுருகனுக்கு, எழுத்துக்களோடு தன் அடுத்தப் படத்திற்கான பயணத்தையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ராஜூமுருகன்.

சந்தோஷ் நாராயணன்:

ரஜினி, விஜய், தனுஷ் என வரிசையாக பெரிய ஹீரோ படங்களில் வேலை செய்தவர், அடுத்து தன் வழக்கமான வித்தியாசப் படங்களின் தேர்வில் வேலை செய்கிறார். சந்தானம் நடிக்கும் சர்வர் சுந்தரம், இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக் குரு, சித்தார்த் நடிக்கும் சைத்தான் கா பச்சா, வெற்றிமாறனின் வடசென்னை, நிவின் பாலி நடிக்கும் படம் மூலம் மலையாள என்ட்ரி என இந்த வருடமும் வெளுத்து வாங்க காத்திருக்கிறது சந்தோஷின் சங்கீதம்.

வெற்றி மாறன்:

வெற்றிமாறன், விகடன் விருதுகள், விருது, ஆனந்த விகடன்

காவல் துறை இயங்கும், அதனை இயக்கும் சிஸ்டம் பற்றி சில நிஜசம்பவங்களை கோர்த்து விசாரணை செய்திருந்தார் வெற்றி மாறன். பல நாட்களாய் வெற்றிமாறன் இயக்க ஆவல் கொண்டிருக்கும் வடசென்னை, ரசிகர்களின் ஆவலும்கூட. கதையின் அடர்த்தி காரணமாக மூன்று பாகங்களாக வெளிவரும் படம் என கூறியிருக்கிறார் வெற்றிமாறன். இந்த ட்ரையாலஜி தமிழ் சினிமாவின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டும் என நம்பலாம். 

கமல்ஹாசன்

ரஜினி, கமல், எஸ்.எஸ்.வாசன் விருது, ஆனந்த விகடன் விருதுகள்

எஸ்.எஸ. வாசன் விருதை ரஜினி கையால் பெற்றுக் கொண்ட கமல்ஹாசனின் அடுத்த படைப்பு சபாஷ் நாயுடு. விஸ்வரூபம்  அடுத்த பாகமும் வெளியீட்டுக்குத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. சபாஷ் நாயுடு இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது. 

ரஜினி:

விருது, விகடன் விருது, விஜய், ரஜினி, ஆனந்த விகடன் #Vikatanawards #VIkatanCinemaAwards

கபாலிக்குப் பிறகு மிக அதீத எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் படம் 2.0. உச்ச நட்சத்திரத்தை வைத்து இதற்கு முன் இரண்டு படங்கள் இயக்கியிருக்கும் ஷங்கர் இயக்கும் படம். தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட நீட்சியை இன்னும் கொஞ்சம் எட்டிவிடும் முயற்சியாக இந்தப் படம் இருக்கும். கூடவே நெருப்புக் கூட்டணியான ரஜினி + ரஞ்சித் இருவர் மீண்டும் இணையும் படம். படத்தை தயாரிப்பது தனுஷின் வுண்டர்பார் நிறுவனம். இந்த இரண்டு படங்களின் எதிர்பார்ப்புக்கு என பிரத்யேக காரணம் இருக்க அவசியம் இருக்காது, ஏனென்றால் அது ரஜினி படம்.


விகடன் விருதுகளின் முன்னோட்டம்  29.01.2017 ஞாயிறு மாலை 5 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. நைனிகா முதல் ரஜினிகாந்த் வரை அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்ட நிகழ்வின் ஜாலி பக்கங்களை காணத் தவறாதீர்கள்! 

-பா. ஜான்சன்

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close