Published:Updated:

பர்த்டே பேபி எமி ஜாக்சனை ரஜினி என்ன சொல்லிக் கூப்பிடுவார் தெரியுமா? #HBDAmyJackson

பா.ஜான்ஸன்
பர்த்டே பேபி எமி ஜாக்சனை ரஜினி என்ன சொல்லிக் கூப்பிடுவார் தெரியுமா? #HBDAmyJackson
பர்த்டே பேபி எமி ஜாக்சனை ரஜினி என்ன சொல்லிக் கூப்பிடுவார் தெரியுமா? #HBDAmyJackson

ன்று எமி ஜாக்சன் 26 வயதை கடக்கிறார். இப்போதான் இந்தப் பொண்ணு "மறாந்துட்டியாஆஆஆ...."னு சொன்ன மாதிரி இருந்தது அதுக்குள்ள ரஜினி கூட நடிக்குது என கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கிறது. இதில் எமிக்கு தெரியாமலேயே அவருக்கு இந்த பாதை அமைந்தது தான் சுவாரஸ்யம். மாடலிங் செய்து கொண்டிருந்த எமிக்கு அறிமுகப் படமே அசத்தலாக அமைந்த ஒன்று. இயல்பிலேயே பிரிட்டிஷ் பெண்ணான அவருக்கு மதராசப்பட்டிணம் படத்தில் கிடைத்தது பிரிட்டிஷ்காரப் பெண் கதாபாத்திரம்.

முதல் படத்திலேயே அத்தனை பாராட்டுகளையும் குவித்தார். இத்தனைக்கும் அவருக்கு அதற்கு முன்பு நடித்த அனுபவமே கிடையாது. இரண்டாவது படமே கௌதமேனன் இந்தியில் இயக்கிய ஏக் திவானா தா. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் எமி ஜாக்சனுக்கு அந்த நேரத்தில் அப்படி ஒரு அறிமுகம், பின்னாளில் அவரது கமர்ஷியல் என்ட்ரிக்கு பயன்பட்டது. அதே சமயத்தில், மறுபடி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்த தமிழில் தாண்டவம் வெளியானது, ராம் சரண் நடித்த யவடு படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.

அடுத்து அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவ்வளவு விரைவில் எதிர்பார்த்திருக்கமாட்டார். முதல் முறை ப்ரிட்டிஷ் கை கொடுத்தது போல இந்த முறை மாடலிங் கை கொடுத்தது. அந்தப் படத்தின் ஹீரோயினுக்கு ஒரு 'மாடல்' கதாபாத்திரம். அதற்குப் பொருத்தமாக இருந்த எமி, ஷங்கரின் 'ஐ' படத்தில் ஹீரோயின் ஆனார். படத்தின் ரிசல்ட்டுக்கு முன்பே எல்லா இடங்களுக்கும் போய் சேர்ந்திருந்தார். சிங் இஸ் பிளிங் மூலம் மீண்டும் இந்திப் படம் நடிக்க ஒரு வாய்ப்பு, ஹீரோ அக்‌ஷய் குமார், இயக்குநர் பிரபுதேவா. படம் படுபயங்கர ஹிட். அடுத்தடுத்த படங்களில் தனுஷ், விஜய் என க்ராஃப் இன்னும் ஏகிறியது. அந்த க்ராஃப் இப்போது வந்து சேர்ந்திருக்கும் இடம், ரஜினிகாந்த் + ஷங்கர் = 2.0.

ஒரு நடிகையாக, பெர்ஃபாமென்ஸ் என்றால் எமி தான் என்று குறிப்பிடும் படி இன்னும் அவர் எதுவும் செய்யவில்லை தான். ஆனால், எமி செய்திருப்பது வெறுமனே, வெளிநாட்டு நடிகை அதனால் தான் இவ்வளவு வாய்ப்பு என்ற எண்ணத்துடன் யாரும், ஒதுக்க முடியாத உழைப்பு மட்டுமே. அது அழகானதும் கூட. Very Happy Birthday To You Amy!

எமி ஜாக்சன் பற்றி அதிகம் வெளியில் தெரியாத சில டிட் பிட்ஸ் இதோ...

* எமி லூயிஸ் ஜாக்சன் இது தான் எமியின் முழுப் பெயர்

* 16 வயதிலேயே மாடலிங் செய்யத் துவங்கியவர், உலக அளவில் 18க்கும் மேற்பட்ட அழகி விருதுகளை வென்றுள்ளார்.

* விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக், ஏக் திவானா தா படத்தில் எமி தான் ஜெஸ்ஸி.

* ஐஸ்வர்யா ராய், மனிஷா கொய்ரலாவுக்குப் பிறகு ஷங்கரின் இரண்டு படங்களில் இடம்பிடித்திருக்கும் ஹீரோயின் எமி ஜாக்சன் தான்.

* சல்மான் கான் நடித்த கிக் படத்தில் முதலில் எமி ஜாக்சனை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. அந்த சமயத்தில் ஷங்கரின் 'ஐ' படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பை நழுவ விட்டார் எமி.

* இந்தி நடிகை பிபாஷா பாசு மற்றும் கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமின் தீவிர ரசிகை எமி.

* 'ஜூனியர் ஐஸ்வர்யா ராய்' என்று தான் ரஜினிகாந்த் எமியை அழைப்பாராம்.

* அக்கா அலிகா ஜாக்சன் மீது மிகுந்த ப்ரியம் உள்ளவர் எமி.

* எமி, தமிழ் வசனங்களை லிப் சிங்க் மிஸ்ஸாகாமல் பேசக்கூடியவர். 

- பா.ஜான்ஸன்

பா.ஜான்ஸன்