போட்டியில் கலக்கிய வரு.. சோலோ கெத்து காட்டிய தமன்னா... டார்லிங் நடனங்கள் இவை! #AnandaVikatanCinemaAwards | Dance performances in Vikatan award

வெளியிடப்பட்ட நேரம்: 10:17 (01/02/2017)

கடைசி தொடர்பு:10:17 (01/02/2017)

போட்டியில் கலக்கிய வரு.. சோலோ கெத்து காட்டிய தமன்னா... டார்லிங் நடனங்கள் இவை! #AnandaVikatanCinemaAwards

வண்ண மின் விளக்குகள் மின்ன, பொன் அனல் பொறிகள் தூவ, பத்திரிக்கை, சினிமா என்ற இரு பெரும் இலாக்காக்களுக்கான பொது அடையாளமாய் பேருரு பேனா முள் நிற்க, திறமைகளுக்கு மரியாதை செய்ய திங்கள் போல் மிளிர்ந்து நின்ற 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள்' மேடையை மேலும் அழகாக்கியது திரை நட்சத்திரங்களின் நடனங்கள்.

vikatan awards

ஜெமினியின் தயாரிப்பும், தமிழ் சினிமாவின் பெருமையுமான 'சந்திரலேகா' திரைப்படத்தை நினைவுப்படுத்தும் விதமாக முரசு நடனத்துடன் விழா தொடங்கியது. 'சந்திரலேகா'வின் பிரமாண்டத்தை மேடைக்குள் அடக்க முடியாது எனினும், நடன கலைஞர்கள் தனது அசத்தலான நடனத்தால் பார்வையாளர்களை கட்டிப்போட்டனர். அது ட்ரெடிஷனல் நடனமாக இல்லாமல், இளமையும் புதுமையுமாய் முழுக்க முழுக்க 'ஹிப்ஹாப்' பாணியில் பட்டையைக் கிளப்பியது. மேடையில் இருந்த ரியல் சைஸ் டிரம்கள் கண்கவர் அணிவகுப்பு.

விகடன்

`கயல்' ஆனந்தியும் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒன்றாக இணைந்து 'தர லோக்கல்' பாடல்களுக்கு நடனமாடினர். குத்துப்பாடல்கள் அணிவகுக்க, கொஞ்சமும் சளைக்காமல் இருவரும் ஒருவருக்கு இணையாக இன்னொருவர் இறங்கி அடித்ததில் மேடையே கொஞ்சம் ஆடியது. அவர்களின் அந்த 'ட்ரை சைக்கிள்' என்ட்ரி செம மாஸ். சன் டிவில போடறப்ப மிஸ் பண்ணாமப் பாருங்க.. 

வரலட்சுமி

எஸ்.எஸ்.வாசனின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்று `வஞ்சிக்கோட்டை வாலிபன்'. அந்தப் படத்தில் இடம்பெற்ற `சபாஷ்...சரியான போட்டி!' பாடலை நவீனமாக்கி மேடையில் அரங்கேற்றி அசத்தியது வரலட்சுமி, இஷா தல்வார் ஜோடி. ஒரு பக்கம் வரலட்சுமி நளினம் காட்ட, இஷா மறுபக்கம் தன் ஒல்லிக்குச்சி உடலை வைத்துக்கொண்டு ஆடி அசத்தினார். இசை இறுதியில் உச்சம்பெற, இருவரும் போட்டது டான்ஸ் ஆஃப் தி நைட். அவர்கள் நடனமாடிய பாடல்கள் செவிக்கும் செம தீனி.

தமன்னா

ஹீரோக்களின் நடன அசைவுகளைக் கெத்தாக மேடையில் அரங்கேற்றி அசத்தினார் நடிகை தமன்னா. `போக்கிரி' விஜய்யாக, `பில்லா' அஜித்தாக, `விஸ்வரூபம்' கமலாக, இறுதியில் `நெருப்புடா... நெருங்குடா!' என ரஜினியாகவும் நடனமாடி அசத்தினார். ஆடும்போது நடுவில் `போக்கிரி பொங்கல்...' பாடலுக்கு தமன்னா ஆட, அதைப் பார்த்துக்கொண்டிருந்த விஜய்யை அழைத்த ரஜினி, `உங்க பாட்டு!' என உற்சாகப்படுத்தியதும் விஜய் முகத்தில் அமைதிப்புன்னகை. அதிலும் தமன்னாவின் 'தேவி' ஸ்டெப்புகள் அப்ளாஸ் அள்ளியது.

லாரன்ஸ்

`லாரன்ஸ் மாஸ்டர் ஆடப்போகிறார்' என்ற அறிவிப்பு வர, அரங்கமே அதிர்ந்தது. முதலில் என்ட்ரி கொடுத்து ஆடி அசத்தியவர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின். சில நிமிடங்களில் லாரன்ஸும் `சிவலிங்கா' கெட்டப்பில் ஸ்டேஜ் ஏறி அசத்தலான ஸ்டெப்ஸ்களால் மிரளவைத்தார். கழுத்தில் உள்காயம் ஏற்பட்டு சிகிச்சையில் இருந்ததால், நெக் காலர் அணிந்து ஆட முடியாமல் இருந்தவர், விகடன் மீதான அன்புக்காக மேடையில் தோன்றி மிகச் சிறப்பாக ஆடினார். அண்ணனும் தம்பியுமாகப் போட்ட ஆட்டம், அத்தனை பேரையுமே ஆடவைத்தது. 

விகடன் விருதுகள் முன்னோட்டத்தைத் தொடர்ந்து, சன்  டிவியில் ஒளிபரப்பாக இருக்கும், இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்! 

-ப.சூரியராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close