Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சித் ஸ்ரீராம் குரல்... ஜி.வி.பிரகாஷ் தங்கை நடிப்பு... இந்த காதலர் தின ஸ்பெஷலுக்கு இசை யார்?

காதல்...  இருபது முதல் அறுபது வரை இளமைத் துள்ளலுடன் ஆட்டிவைக்கும் ஆக்சிஜன். இந்த இளமைத் தீயின் ஹார்மோன் கலாட்டாவிற்கு இன்று சிறந்தநாள்... பிறந்தநாள். இது ’காதலர் தினம்’. இந்நாளில் ‘வான்...வருவான்’ என்று ஏ.ஆர்.ரஹ்மான் ஒருபக்கம் இளைஞர்களின் காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க, சத்தமே காட்டாமல் இன்னொரு ஆல்பம் வெளிவந்திருக்கிறது. சித் ஸ்ரீராம் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடலின் இசை யார் என்று பார்த்தால்...

ஏ.ஹெச். காசிப்

ஆம். ஏ.ஆர். ரஹ்மானின் வீட்டிலிருந்து வந்த இன்னொரு இசை வாரிசு அவர். ஏ.ஹெச்.காசிப். ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை பாத்திமாவின் மகன்தான் ஏ.ஹெச்.காசிப். இந்தக் காதலர் தின ஸ்பெஷலாக இவர், ’போ போ என் இதயம் தரையில் விழுந்து சிதறிப் போகட்டும்’ என்னும் மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

துவக்கத்தில் மெல்லிய மயிலிறகாக ‘போ போ என் இதயம் தரையில் விழுந்து சிதறிப் போகட்டும்...போ போ என் நிழலும் பிரிந்து என்னை தனிமையாக்கட்டும்’ என்று பியானோ இசை, சாரலாய் பொழிய, சரியாக 2 நிமிடங்களுப் பிறகு ‘ஏனோ என்னை மட்டும் வாழ்க்கை கொல்லுதடி’ என்று பாஸ்ட் பீட்டில், எலக்ட்ரிக் கிடார், கீபோர்ட் இசையில் தெறிக்கவிடுகிறது. முடிவில், மீண்டும் மெலடியாய்ப் பிரிவின் சோகம் இழையோட, பியானோ இசையில் முடிகிறது ஆல்பம்.  

‘லயோலா கல்லூரியில் விஸ்காம் முடிச்சுருக்கேன். ஆனாலும், பிளஸ் 2 முடிச்சதில் இருந்து மியூசிக்தான் என்னோட கனவு. இதுவரை 3 வீடியோ ரீலீஸ் பண்ணியிருந்தாலும், ஹைஃபையா, ஒரு அழகான சாங், பேக்கிரவுண்ட் டான்ஸோட வெளியாகியிருக்கிற ஸ்பெஷல் வீடியோ இது. 

எப்பவும் காதலர் தினம்னா பெரும்பாலும் ரொம்ப பெப்பியான ஆல்பம்ஸ் வெளியாகும். நான் கொஞ்சம் மாத்தி ட்ரை பண்ணலாமேனு சோகம் கலந்த காதலை என் ஆல்பத்தில் காட்டியிருக்கேன். காதலின் மொழியில் அன்பு, சோகம், மகிழ்ச்சி எல்லாம் ஒரே மாதிரிதான். அதனால், இந்த மியூசிக்கும் கண்டிப்பாக மனதை ஈர்க்கும்.

சித் ஸ்ரீராம் ஆல்பம்

’போ போ’ங்கற இந்த ஆல்பத்தின் பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருக்கார். ஜி.வி.பிரகாஷோட சிஸ்டர் பவானி, இதில் நடிச்சிருக்காங்க. மேலும், இரண்டு பேர் நடனமாடியிருக்காங்க. ஃபாலே டான்ஸ் போன்ற கருப்பு, வெள்ளை டான்ஸ் போர்ஷனில் அவங்க இருவரும் அசத்தியிருக்காங்க.

இதில் மொத்தம் 3 ஜானர். மெலடியா தொடங்கி, ராப் பீட்-டில் பயணித்து, மெல்லிசான ஃபோக் ஃபீட்டில் முடியற இந்த ஆல்பம் காதலிக்கற, காதலிக்கப்போற எல்லாருக்கும் கண்டிப்பா பிடிக்கும்’ என்கிறார் காசிப். மாமா ஏ.ஆர்.ரஹ்மான் வாவென்று காதலர்களை அழைக்கும் ‘வான்..வருவான்’ பாடலும், மருமகன் ஏ.ஹெச்.காசிப்பின் காதல் சோகத்தைத் துரத்தட்டும் என்னும் ‘போ போ’ பாடலுமாக நிறைந்திருக்கிறது காதலர் தினம்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!