ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

க்ளீன் ஷேவ் கார்த்தியை உங்களுக்குப் பிடிச்சிருக்கா கேர்ள்ஸ்?!

கார்த்தி

திரைப்படங்களில் வரும் ஹீரோயின்கள் மட்டுமல்ல ஹீரோக்களுக்கும் தங்கள் கெட்டப்பை அவ்வப்போது மாற்றி நியூ லுக்கில் பெண்களின் மனதை கொள்ளையடிப்பது வழக்கம்தான். அந்த வகையில் பெண்களின் மனதில் இடம்பிடித்த அஜித், விஜய், அரவிந்த் சாமி, மாதவன், சூர்யா, சிம்பு, நிவின்பாலி, கார்த்தி... என டிரீம் பாய்ஸ் பட்டியல் நீளும். இன்னும் சில ஹீரோக்களும் உடல் தோற்றத்தில் ஆரம்பித்து தாடி, மீசை, ஹேர்ஸ்டைலில் திடீரென செம சேஞ்ச் ஓவர் காட்டுவார்கள்.

’’ச்சும்மா, மீசையை வளைச்சு விட்டா வில் அம்பு கணக்கா, கச்சிதமா இருக்கணும்.’’
‘’தாடி அதிகமாவும் இருக்கக் கூடாது, கம்மியாவும் இருக்கக் கூடாது. லைட்டா ட்ரிம் பண்ணி இருந்தால் போதும்.’’
‘’ ஃப்ரெஞ்ச் பியர்டு தான் பார்க்க அழகா இருக்கும். ஃபாரின் மாப்பிள்ளைனா மீசையை வழிச்சுட்டுத்தான் இருக்கணுமா என்ன?’’
‘’ தலை முடியை படிய வாரிட்டு போறதெல்லாம் ஓல்டு ஸ்டைல். கலைச்சு விட்டா தான் அழகு.’’
‘’பார்க்க பக்காவா க்ளீன் ஷேவ் பண்ணிட்டு இருக்கணும். சும்மா முகத்துல கைய வச்சு தாடியைத் தடவிக்கிட்டே இருந்தா பார்க்க நல்லாவா இருக்கு.’’
‘’கரு கருனு வளர்ந்த தாடியும் அதை அப்படியே ஸ்டைலா, தடவி கொடுக்குற மேனரிசமும் தான் அழகு"
 - இதெல்லாம் ஆண்களின் லுக் குறித்து கேர்ள்ஸ் மத்தியில் இருக்கும் பேச்சுகள்.
 
’இப்ப தாடி, மீசை வேணுங்கிறயா...வேணாங்கிறயா ’ என ஆண்கள் கேட்டால் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. பெண்களின் ரசனைக்கு நோ லிமிட். அது மாறிக் கொண்டே இருக்கும். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்களில் கார்த்தியின் நியூ லுக்கைப் பார்த்தீர்களா? பட்டா பட்டி தெரிகிற அளவுக்கு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முகத்தில் முக்கால் பாகத்துக்கு மீசையோடு முரட்டு லுக்கில் வந்து ‘அடி கறுப்பு நிறத்தழகி’ என வில்லேஜ் ரொமான்ஸ் காட்டியவர், ‘காற்று வெளியிடை’ யில் டிரிபிள் ரேஸரில் சுத்தமாய் வழித்துவிட்டு பிங்க் லிப்ஸை க்ளோசப்பில் காட்டி , ‘அழகியே’ என அட்ராசிட்டி செய்கிறார். பிரேமம் வந்த சமயத்தில் நிவின்பாலியைப் போலவே தாடியோடு லவ்விக் கொண்டிருந்த பாய்ஸ், இனி க்ளீன் ஷேவ் கார்த்தியைப் பார்த்து, பட்டுப் போன்ற சருமத்துக்கு மாறுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

- பொன்.விமலா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!