மெக்கானிகல் இன்ஜினீயரிங்கில் ஒரு பெண் சேர்ந்தால்....!? #RegionalMovies | Do not miss these upcoming regional movies

வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (22/03/2017)

கடைசி தொடர்பு:15:44 (22/03/2017)

மெக்கானிகல் இன்ஜினீயரிங்கில் ஒரு பெண் சேர்ந்தால்....!? #RegionalMovies

" 'அலமாரா', 'ட்ராப்டு' இரண்டுமே சென்ற வாரம் வெளியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மிஸ் செய்தவர்கள் அதைப் பார்க்கலாம்" என்கிற அறிவிப்போடு இந்த வார ரீஜனல் பட அறிமுகத்துக்கு செல்வோம். தற்போது உடனடியாக வெளியாகும் படங்கள் எதுவும் சிக்கவில்லை என்பதால் கொஞ்ச நாட்கள் கழித்து வர இருக்கும் படங்கள் மட்டும் லிஸ்டில் இடம்பிடித்திருக்கிறது.

படம்

மலையாளம்  

கோதா: 

மல்யுத்தத்தை மையமாக வைத்து உருவாகிறது கோதா. டீசர் பார்க்கும் போது மெலிதாக தங்கல், சுல்தான் படங்கள் நினைவுக்கு வந்து போவது உண்மை தான் என்றாலும் பாரம்பரியமாக மல்யுத்தத்தில் ஈடுபடுபவர்களைப் பற்றிய தெளிவுகளை அடக்கிய படமாக இருக்கும் என்பது உறுதி. பாசில் ஜோசப் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். டொவினோ தாமஸுக்கு இது பெரிய என்ட்ரி கொடுக்கும் என நம்பலாம். படம் மே மாதம் வெளியாகிறது. 

குயின்:

இந்தப் படத்தின் கான்செப்ட்டே குதூகலமான ஒன்று. ஆண்கள் மட்டுமே படிக்கும் மெக்கானிகல் டிபார்ட்மென்டில் புதிதாக சேரும் ஒரு பெண். இது தான் படத்துக்கான லைன். பேஸ்ட் ஆன் ட்ரூ ஸ்டோரி என்கிறார் இப்படத்தின் இயக்குநர் டிஜோ ஜோஷ் ஆண்டனி. இந்தப் படம் எடுக்க காரணம் வலைதளத்தில் வலம் வந்த ஒரு புகைப்படம் தானாம். நிஜமாகவே இப்படியான மாணவர்கள் ஓனம் கொண்டாட்டத்துக்காக ஒரு புகைப்படம் எடுக்க, அதைப் பார்த்து இந்த லைனை பிடித்திருக்கிறார் இயக்குநர். படத்தின் கதையை எழுதுவது, படத்தைத் தயாரிப்பது என சகலமும் மெக்கானிகல் படித்த இளைஞர்களால் செய்யப்படுகிறதாம். 

தெலுங்கு 

கேசவா:

சென்ற வருடம் 'எக்கடக்கி போத்தாவு சின்னிவாடா' என்கிற படம் மூலம் கவனிக்க வைத்தார் நடிகர் நிகில் சித்தார்த். இந்த வருடம் பக்கா மாஸ் காட்ட 'கேசவா' படத்துடன் வந்திருக்கிறார். பலமுறை பார்த்த பழிக்குப் பழி கதை தான். ஆனால், இது கொஞ்சம் வேற மாதிரி என்று கூறுகிறார் இயக்குநர் சுதீர் வர்மா. இதற்கு முன் 'ஸ்வாமி ரா ரா' படம் மூலம் கவனம் பெற்றவர் என்பதாலும் படத்தின் டீசரிலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாலும் இது கவனிக்க வேண்டிய படமாகிறது.

- பா.ஜான்ஸன்


டிரெண்டிங் @ விகடன்