Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

எவர்க்ரீன் ஜாக்ஸன், குறும்பு டான்ஸர் பிரபுதேவாவுக்கு ஹாப்பி பிறந்த நாள்..! #HBDPrabhudeva

யக்குநர், தயாரிப்பாளர், நடிகர், பெஸ்ட் டான்ஸர். 'இந்து' எனும் படத்தில் 'பட்டாசு' கதாபாத்திரத்தில் அறிமுகமான பிரபு தேவாவுக்கு இன்னிக்கு ஹேப்பி பிறந்தநாள். அந்தப் படத்தைத் தொடர்ந்து நடித்த படங்கள் எல்லாமே பட்டாசுதான். தன்னுடைய இரண்டாவது படமே தமிழ் சினிமாவில் டாப் டைரக்டர்களீல் ஒருவரான 'ஷங்கர்' படத்தில். ஏ.ஆர். ரஹ்மான் இசை, வடிவேலு காமெடி எனப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெறறது. அதன்பின் 'மின்சாரக் கனவு, 'வி.ஐ.பி', 'காதலா காதலா', 'வானத்தைப்போல' என எவர்க்ரீன் ஹிட் அடித்தார். அதன் பின்னர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என மற்ற மொழி படங்களிலும் வலம் வந்தார்.

பிரபு தேவா

பிரபு தேவா 3 ஏப்ரல், 1973 அன்று மைசூரில் முகுர் சுந்தர், மகாதேவம்மா சுந்தர் என்ற தம்பதியனருக்கு மகனாகப் பிறந்தார். சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் வளர்ந்தார். அவரது அப்பா முகுர் சுந்தர் சவுத் என்கிற சுந்தரம் மாஸ்டர். இந்தியன் சினிமாவில் மிகப் பெரிய நடன ஜாம்பவான். அவரைப் பார்த்து இவரும் நடனத்தில் பிரபலமாக வேண்டும் என்று ஆசைப்பட்டு சினிமாவில் என்ட்ரி காட்டினார். முதன்முதலாக 'மெளன ராகம்' படத்தில் இடம்பெற்ற 'பனி விழும் இரவு...நனைந்தது நிலவு' பாடலின் இரண்டாவது பி. ஜி எம்மில் வரும் புல்லாங்குழல் பீட்டினை திரையில் வாசித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 'அக்னி நட்சத்திரம்' படத்தின் மாஸ்டர் பீஸான ' ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' பாடலில் ஆடும் குரூப்பில் இவரும் ஒருவர். அதேபோல் 'இதயம்' படத்தில் இடம்பெற்ற ' ஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல' பாடலில் தனித்துத் தெரிந்தார். பின்னாளில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன் என்று செல்லமாக அழைக்கப்பட்டார். சிங்கப்பூரில் இவருக்குச் சொந்தமாக டான்ஸ் அகாடமியும் உள்ளது. இவரது 39-வது பிறந்தநாளைக்கு முக்கிய பாலிவுட் ஸ்டார்களான அமிதாப்பச்சன், சல்மான் கான், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா போன்றவர்கள் கலந்துகொண்டனர்.  ஐ.பி.எல் ஒப்பனிங் செர்மனியில் பெர்ஃபார்ம் செய்தார். இந்தியாவின் முதல் டான்ஸ் 3டி படமான ஏ.பி.சி.டி (AnyBody Can Dance) படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இரண்டு முறை 'பெஸ்ட் கொரியோகிராஃபர்' என்ற வரிசையில் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். அதில் ஒன்று தமிழில் வெளிவந்த 'மின்சாரக் கனவு' படத்துக்காக.   

பிரபு தேவா

நடிப்பில் கலக்கியதைத் தொடர்ந்து 2004-ல் டைரக்‌ஷனிலும் இறங்கினார். இவர் இயக்கிய முதல் படம் தெலுங்கில் சித்தார்த், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 'நுவ்வோஸ்தானன்டே நின்னோடான்டே'.  'சன் இன் லா' எனும் ஹாலிவுட் படத்தில் இன்ஸ்பையாராகி எடுத்த அந்தப் படம் மாபெறும் ஹிட்டானதைத் தொடர்ந்து 8 'ஃபிலிம் ஃபேர் அவார்டுகளும், 5 'நந்தி' விருதுகளும் பெற்றன. அதன் பின்னர் அந்தப் படம் 7 மொழிகளில் ரீமேக் ஆனது. தமிழில் ஜெயம் ரவி நடித்து வெளியான 'சம்திங் சம்திங்' இந்தப் படத்தின் ரீ-மேக்தான். பின்னர் தொடர்ந்து தமிழில் 4 படங்களையும், தெலுங்கில் 2 படங்களையும், இந்தியில் 6 படங்களையும் இயக்கியுள்ளார்.  

இயக்கம், நடிப்பு, தயாரிப்பு எனப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் பிள்ளையார் சுழி போட்டது டான்ஸில்தான். அப்படி இவரின் நடனத்தின் புகழ் பாடும் பாடல்கள் ஏராளம். 'காதலன்' பட 'பேட்டராப்' பில் ஆரம்பித்து சமீபத்தில் வெளியான 'குலேபகாவலி' படத்தின் 'குலேபா' பாடல் வரை இவரது டான்ஸ் தெறி ரகம். இவரின் சகோதரர்களான ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத் ஆகிய இருவரும் டான்ஸ் மாஸ்டர்ஸ்தான். சென்னையில் பல்கலைக்கழகத்தில் அமையப்பெற்ற மைக்கேல் ஜாக்ஸனின் உருவச் சிலை இவரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. 

பிரபு தேவா

இப்படிப் பலத் திறமைகளை தனக்குள் வைத்திருக்கும் இந்திய மைக்கேல் ஜாக்ஸனிற்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்களும் வாழ்த்துங்கள் ஃப்ரெண்ட்ஸ்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement