தமிழ்ப்புத்தாண்டு.. டி.வியில் ஒளிபரப்பாக இருக்கும் படங்களின் லிஸ்ட்! #TV | Movies to watch During April 14 in Television Channels

வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (12/04/2017)

கடைசி தொடர்பு:16:12 (13/04/2017)

தமிழ்ப்புத்தாண்டு.. டி.வியில் ஒளிபரப்பாக இருக்கும் படங்களின் லிஸ்ட்! #TV

டந்த பொங்கல் விடுமுறை தினத்தில் சிறப்புத் திரைப்படங்களாக ‘தேவி’, ‘கொடி’, ‘ரெமோ’, ‘ரெக்க’ என்று அசரடித்த டிவி சேனல்கள் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்திற்கும் புதுப்படங்களை ஒளிபரப்ப ரெடியாகிவிட்டன. இந்த ஏப்ரல் 14-க்கு ஒளிபரப்பாகப்போகும் புதுப்படங்கள் என்னென்ன? 

புதுப்படங்கள் , பைரவா

சன் டிவி: 

விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்த படம் ‘பைரவா’. கீர்த்திசுரேஷ், சதீஷ், டேனியல் பாலாஜி, தம்பி ராமையா என கமர்ஷியல் ஆக்‌ஷன் படம் ‘பைரவா’. ‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்குப் பிறகு பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த இரண்டாவது படம். படத்தின் ப்ளஸ் சந்தோஷ் நாராயணனின் இசை. சன் டிவியில் மாலை 6மணிக்கு ஒளிபரப்பாகிறது. புதுப்படம் மட்டுமின்றி, சன் நெட் ஒர்க்ஸ்  தொடங்கப்பட்ட தினம் என்பதால், சன் சேனல் முழுவதும் ஸ்பெஷல் நிகழ்ச்சிகளால் களைகட்டும். 

விஜய் டிவி: 

ஓகே கண்மணி

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான காதலும் காதல் சார்ந்த படம் ‘ஓ காதல் கண்மணி’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை, மணிரத்னம் இயக்கம், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு என ரொமான்ஸில் வேற லெவல். வீட்டில் ரிமோட்டை ஆக்கிரமிக்கும் இளசுகளின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் இப்படமாகத்தான் இருக்கும். காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. 

தொடர்ந்து, இரவு 8மணிக்கு ’M.S. Dhoni: The Untold Story’ ஒளிபரப்பாகிறது. தோனியின் பயோபிக்கான இப்படம் தமிழ் டப்பிங் என்றாலும் செம ஹிட். வசூலிலும் சிக்ஸர் விளாசிய இப்படம் ஏற்கெனவே விஜய் டிவியில் கடந்த பொங்கலுக்கு ஒளிபரப்பப்பட்டுவிட்டதும் குறிப்பிடத்தக்கது. 

ஜீ தமிழ்: 

சைத்தான்

விஜய்ஆண்டனி, அருந்ததி நாயர் நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பரில் வெளியான படம் ‘சைத்தான்’. சைக்கோ த்ரில்லர் படம். இசையமைத்து, தயாரித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. சுஜாதாவின் ‘ஆ...’ நாவலை மையமாக கொண்ட படம். ஜீ தமிழில் மாலை 4மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘சைத்தான்’. 

ஜெயா: 

காஷ்மோரா

தமிழ்ப் புத்தாண்டுக்கு ஜெயா இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களைத் திரையிடவிருக்கிறது.  காலை 11 மணிக்கு கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவான ‘காஷ்மோரா’ ஒளிபரப்பாகிறது. ’இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கிய படம் இது. ப்ளாக் மேஜிக், த்ரில்லர் என திரையரங்கை மிரளவைத்த படம். 

தொடர்ந்து, மாலை 6 மணிக்கு முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ ஒளிபரப்பாகிறது. ஹீரோயின் சமந்தா; காமெடிக்கு சதீஷ்.   காமெடியிலும், ஆக்‌ஷனிலும் கலக்கிய படம்.  விஜய் படத்திற்கு முதல் முறையாக அனிருத் இசையமைத்திருப்பார். விவசாயம் சார்ந்த இப்படம் வசூலிலும் செம ஹிட். 

ஏசியா நெட் : 

புலிமுருகன்

தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் எல்லா தமிழ் படமும் ஏற்கெனவே பார்த்துவிட்டேன் என்று நினைப்பவர்களா நீங்கள்...? அப்படியே மலையாள கரையோரம் ஒதுங்கித்தான் பாருங்களேன். மலையாள சேனலான ஏசியா நெட்டில் விஷுக்கனி   கொண்டாட்டமாக மோகன்லால் நடித்து வெளியான ‘புலிமுருகன்’ படத்தை மாலை 7மணிக்கு ஒளிபரப்பவிருக்கிறது. கடந்த வருடம் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூல் சாதனைப் படைத்த கமர்ஷியல் மாஸ் சினிமா. 

வசந்தம் டிவி - ஸ்ரீலங்கா: 

சிம்பு

இலங்கையில் இருக்கும் தமிழ் சேனலான வசந்தம் டிவியில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கெளதம்மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு காம்போவில் வெளியாகும் படமென்பதால் இலங்கைத் தமிழர்களுக்கு செமத்தியான விஷூவல் ட்ரீட்டாக இருக்கும்.  

-‘சீரியல்’ கில்லர்-


டிரெண்டிங் @ விகடன்