ராஜமௌலி சகோதரரின் ‘ஷோ டைம்’; `திருஷ்யம்’ இயக்குநரின் அடுத்த கதை.. #RegionalMovies

ராஜமௌலியின் குடும்பமே சினிமா குடும்பம் தான். அதில் அவரின் சகோதரர் இயக்கும் படம் பற்றி தெரியுமா? அதோடு சேர்த்து த்ரிஷ்யம் இயக்குநர் கதையில் உருவாகும் படம், இரண்டு ஃபீமேல் லீட் படங்கள் இந்த எபிசோடில்...

ராஜமௌலி

மலையாளம்

லக்‌ஷ்யம்

 

மெமரீஸ், த்ரிஷ்யம் படங்களின் இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் கதையில் உருவாகியிருக்கிறது லக்‌ஷ்யம். இந்திரஜித் சுகுமாரன், பிஜூ மேனன் நடித்திருக்கும் இப்படத்தை அன்ஸார் கான் இயக்கியிருக்கிறார். போலீஸில் இருந்து தப்பும் இரண்டு கைதிகள், காட்டுக்குள் ஓடும் அட்வென்சர் பயணம் தான் கதை. ஷிவதா, கிஷோர் சத்யா, ஷம்மி திலகன் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். 

 

இந்தி

பேகம் ஜான்

 

 

2015ம் ஆண்டு பெங்காலியில் வெளியான ராஜ்கஹினி படத்தின் இந்தி ரீமேக் பேகம் ஜான். பெங்காலியில் இயக்கிய ஸ்ரீஜித் முகர்ஜி பேகம் ஜான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். படத்தில் லீட் ரோலில் நடித்திருப்பது வித்யா பாலன். 1947ல் நடந்த வங்காளப் பிரிவினையின் போது ஒரு விபச்சார விடுதி என்ன பிரச்னைகளை சந்தித்தது என்பது தான் கதை. படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

 

மாட்ர்

 

 

இதுவும் ஹீரோயின் லீட் கொண்ட படம் தான். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ரவீணா டான்டன் நடித்திருக்கிறார். பாலியல் வன்முறைக்கு உள்ளான ஒரு பெண் ரிவென்ஞ் எடுத்துக் கிளம்பும் கதை. நிறைய நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து கொஞ்சம் கற்பனை கலந்து கதையாக்கியிருக்கிறார் கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் மைகேல் பெலிகோ. படத்தை இயக்கியிருப்பது அஸ்தர் சையத்.

 

தெலுங்கு

ஷோ டைம் 

 

 

எஸ்.எஸ்.ராஜமௌலி ஒருபுறம் பாகுபலி 2 என்கிற பிரமாண்டத்துடன் வர, இன்னொரு புறம் அவரது சகோதரர் எஸ்.எஸ்.காஞ்சி சின்ன பட்ஜெட்டில் 'ஷோ டைம்' படம் மூலம் வர இருக்கிறார். ராஜமௌலி இயக்கிய மரியாத ராமண்ணா படத்துக்கு கதை வசனம் எழுதியவர் எஸ்.எஸ்.காஞ்சி. பாகுபலி படத்தைப் போல இதற்கும் இசை கீரவாணி தான். மினி பட்ஜெட்டில் ஒரு த்ரில்லர் சினிமாவாக வர இருக்கிறது படம். ரனதீர், ருக்‌ஷர், சுப்ரீத் கார்த்திக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

- பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!