டாப் ஹீரோக்கள் தவறவிட்ட ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா?

சினிமாவில் மிக சிரமமானதே எந்தக் கதை ஹிட்டாகும், எது ஃப்ளாப் ஆகும் எனக் கணிப்பதுதான். நமக்குப் பொருத்தமாக இருக்குமா என்பது உட்பட   பல காரணங்களுக்காக ஒரு ஹீரோ சில படங்களை மிஸ் செய்வதும், அதை வேறு ஒரு ஹீரோ நடித்து ஹிட்டாவதும் இங்கு இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் எந்தெந்த ஹீரோ என்னென்ன படங்களை மிஸ் செய்தார்கள் என்கிற சின்னச் சின்ன தவல்கள் இங்கே...

ரஜினி: 

ஹீரோ

'முதல்வன்' படத்தின் கதையையே ரஜினியை மனதில் வைத்துதான் எழுதியிருந்தார் ஷங்கர். அதே போல் 'ரமணா' படத்தின் கதையைக் கூட ரஜினியை மனதில் வைத்தே உருவாக்கியிருந்தார் முருகதாஸ்.

 

ஆனால் அந்த க்ளைமாக்ஸை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கம் வந்த பின் அவரை அணுகாமலே விட்டுவிட்டார். இதன் பின் மலையாளத்தில் மோகன் லால் நடித்த 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' படத்திற்காக ரஜினியை அணுக, முதலில் அவரும் ஆர்வமாக தயாரானார், பின் சில சீன்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற யோசனை எழவே தவிர்த்துவிட்டார்.

 

கமல்:

கமல்

ரஜினி நோ சொல்ல, 'முதல்வன்' படத்தில் நடிக்க கமலும் அணுகப்பட்டிருக்கிறார். ஆனால், அந்தச் சமயத்தில் கமல் தனது 'ஹேராம்' படத்துக்கான வேலைகளில் இருந்ததால் இதில் நடிக்க முடியவில்லை. 'முதல்வன்' படத்தின் இந்தி ரீமேக் 'நாயக்' படத்தை முடித்ததும் கமல்ஹாசன் - ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் 'ரோபாட்' படத்தை இயக்குவதாக இருந்தார் ஷங்கர். கதை 2200 அல்லது 3000மாவது ஆண்டில் நடப்பதாக இருக்கும் என சொல்லப்பட்டது. சில காரணங்களால் படம் கைவிடப்பட்டு பின்னர் ரஜினி நடிப்பில் 'எந்திரன்' ஆக 2010ல் வெளியானது.

 

விஜய்:

விஜய்

ரஜினி கமல் இருவரும் நோ சொல்வதற்கு இடையில் 'முதல்வன்' படம் விஜய்யிடமும் சென்று வந்தது, அவர் ஆர்வம் காட்டாததால் அர்ஜுனை நடிக்க வைத்தார் ஷங்கர். 'அனேகன்' படத்தில் நடிக்கவும் விஜயிடம் கேட்கப்பட்டிருக்கிறது, மற்ற படங்களின் வேலைகளில் இருந்ததால் அனேகனில் விஜயால் நடிக்க முடியாமல் போனது. முருகதாஸின் 'தீனா', அமீரின் 'பருத்திவீரன்' படங்களும் விஜயிடம் சென்று வந்தவை தான்.

 

அஜித்:

அஜித்

அஜித் நிராகரித்த நிறைய படங்கள் மற்ற ஹீரோகளால் நடிக்கப்பட்டு ஹிட் ரேட்டிங்கும் வாங்கியிருக்கிறது. 'நேருக்கு நேர்' படத்தில் சூர்யா நடித்த ரோல் முன்பு அஜித் நடிக்க வேண்டியிருந்தது, சில நாள் ஷூட்டிங் போனது வரை அனைவரும் அறிந்ததே. மாதவன் நடித்த 'ரன்' முதலில் அஜித்துக்கு சொல்லப்பட்ட கதை தான். ஷங்கர் இயக்கிய 'ஜீன்ஸ்', விஜய் நடித்த 'லவ் டுடே', 'கில்லி', சூர்யா நடித்த 'நந்தா', 'கஜினி' (மிரட்டல் எனத் துவங்கப்பட்டது), 'காக்க காக்க', விக்ரம் நடித்த 'ஜெமினி', 'தூள்', 'சாமி', ஆர்யா நடித்த  'நான் கடவுள்' ஆகிய படங்களை அஜித் நிராகரிக்க, பின்பு அது மற்ற ஹீரோக்கள் நடித்து பெரிய ஹிட்டானது.

 

சூர்யா:

சூர்யா

'ஆசை' படம் மூலம் சூர்யாவின் என்ட்ரி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்த இயக்குநர் வசந்த் சூர்யாவை அணுகியிருக்கிறார். ஆனால், சூர்யாவிற்கு நடிப்பில் பெரிய ஆர்வம் இல்லாததால் அஜித்துக்கு அந்த வாய்ப்பு சென்றது. பிறகு வசந்த் இயக்கிய 'நேருக்கு நேர்' படம் மூலமே அவர் அறிமுகம் நிகழ்ந்தது. (ஆனால் நேருக்கு நேரில் முதலில் நடிக்க இருந்தது அஜித்). '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'நண்பன்' படத்தில் லீட் ரோலில் நடிக்க முதலில் சூர்யாவைக் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அவரது கமிட்மென்ட்கள் வேறு மாதிரி அமைய ஷங்கர் பட வாய்ப்பை மிஸ் செய்தார் சூர்யா. 'துருவ நட்சத்திரம்' படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா. அதற்கான பட துவக்கவிழா எல்லாம் நடக்க பின் பல கருத்து வேறுபாடுகளால் படம் கைவிடப்பட்டது. இப்போது அந்தப் படத்தில் விக்ரம் நடிக்கிறார்.

 

விக்ரம்:

விக்ரம்

'பம்பாய்' படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது விக்ரம். அந்தச் சமயத்தில் விக்ரமனின் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருந்த 'புதிய மன்னர்கள்' பாதிக்கப்படும் என்பதால் விக்ரமால் 'பம்பாய்' படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால், பிறகு 'ராவணன்' படம் மூலம் மணிரத்னத்துடன் இணைந்தார். கௌதம் மேனன் இயக்கிய 'காக்க காக்க' படத்திற்காக விக்ரமை அணுகினார். அந்தச் சமயத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த 'சாமி' படமும் போலீஸ் கதை என்பதால் நடிக்க முடியாமல் போனது. தற்போது 'துருவ நட்சத்திரம்' மூலம் மீண்டும் இணைகிறது இந்த காம்போ. 'யாவரும் நலம்' படத்திற்குப் பிறகு விக்ரம் குமார் இயக்கத்தில் விக்ரம் '24' படத்தில் நடிப்பதாக இருந்தது. பின் பல காரணங்களால் அது கைவிடப்பட்டு மகேஷ் பாபுவிடம் சென்றது. கதை கேட்ட மகேஷ், அப்போது மறுத்துவிட்டார். பின்னர் சூர்யா நடித்து படம் வெளிவந்த பின், படம் பார்த்துவிட்டு சூர்யாவால் செய்ய முடிந்த அளவுக்கு என்னால் சிறப்பாக செய்ய முடிந்திருக்காது எனக் கூறினார்.

 

சிம்பு: 

சிம்பு

சிம்பு நடிப்பதாக எல்லாம் முடிவு செய்யப்பட்ட நிலையில், சில காரணங்களால் 'கோ' படம் ஜீவாவிற்கு சென்றது. அதே போல் லிங்குசாமி இயக்கத்தில் உருவான 'வேட்டை' படத்தில் ஆர்யா ரோலில் நடிக்க இருந்தது சிம்பு. அதிலிருந்தும் விலகினார் சிம்பு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!