தமிழ்த் திரையுலகின் மிஸ்டர் 'ஏ' யார் தெரியுமா? (sponsored content) | Music director Ashwin is the latest buzz in Ktown

வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (20/04/2017)

கடைசி தொடர்பு:16:14 (20/04/2017)

தமிழ்த் திரையுலகின் மிஸ்டர் 'ஏ' யார் தெரியுமா? (sponsored content)

music director aswin

தமிழ்த் திரைப்படங்கள் எப்போதும் அதன் இசைக்கும், இசையமைப்பாளர்களுக்கும் முக்கியத்துவம் தருவதாகவே இருந்து வந்திருக்கிறது. சமகால இளைஞர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இன்றைய 'டிரெண்ட்டுக்கு' ஏற்றவாறு இசையமைப்பதில்தான் ஒரு இசையமைப்பாளன் வெற்றி பெறுகிறான். அந்த வரிசையில் ஏற்கெனவே 'மானாட மயிலாட' நிகழ்ச்சிக்கு இசையமைத்து இளம் உள்ளங்களைக் கவர்ந்தவர் இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி, காயத்ரி ரகுராம் இயக்கும் 'யாதுமாகி நின்றாய்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.

இந்த ஆல்பத்தில், கபிலன் எழுதிய பாடல்களுக்கு, நடிகர் தனுஷ், சித் ஸ்ரீராம், அந்தோணி தாசன் மற்றும் ரீத்தா ஆகியோர் பாடியிருக்கின்றனர். இந்தப் பாடலைப் பாடி முடித்ததும், அது மிகவும் பிடித்துப் போக, தன்னுடைய 'வொண்டர்பார் ஸ்டுடியோஸ்' சார்பில் ஆடியோ உரிமையை பெற்றிருக்கிறார் நடிகர் தனுஷ். இந்த படத்தின் ஆடியோ பிப்ரவரி 17, 2017 அன்று 'ஜெயம்' ரவி மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரால் வெளியிடப்பட்டது. மேலும் RMW நிறுவன தயாரிப்பில் ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர் நடிக்கும் 'விதி மதி உல்டா' திரைப்படத்திற்கும் இசையமைக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close