சினிமா ரசிகன், தியேட்டர் கட்டணம், ஆன்லைன் பைரசி, சினிமாவின் எதிர்காலம் இதுதான்! (Sponsored Content)

herotalkies

பிறந்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னும் இளமையாக இருப்பது சினிமா ஒன்றுதான். மழலைகள் முதல் ஓல்ட் ஏஜ் இளைஞர்கள் வரை வயது வேறுபாடின்றி எல்லோரையும் ரசித்துப் பார்க்க வைப்பது சினிமா. மொழிகளுக்கு அப்பாற்பட்டு சந்தோஷம், உற்சாகம், சோகம், வலி, நகைச்சுவை என பலவகையான உணர்வுகளை நமக்குள் கடத்துவது இந்த சினிமா.

வெவ்வேறு ரசனைகள் கொண்ட கலவையான மனிதர்கள் ஒன்றுகூடும் புள்ளி சினிமா. திரைப்படத்தின் முதல் ஸ்லைடில் தொடங்கி இறுதியில் கிரெடிட்ஸ் போடும்வரை பார்ப்பவர்கள், பாடல்கள் வரும்போதெல்லாம் வெளியே சென்று இளைப்பாறிவிட்டு வருபவர்கள், திரைப்படம் தொடங்கியவுடன் கர்மசிரத்தையாக உறங்கத் தொடங்குபவர்கள், ஒவ்வொரு காட்சியையும் கண்கொட்டாமல் பார்த்து, படத்தில் இயக்குநருக்கே தெரியாத குறியீடுகளை எல்லாம் பகுத்தாய்ந்து முதல் ஆளாய் விமர்சனம் செய்பவர்கள், நகைச்சுவையை மட்டும் நேசிப்பவர்கள், இசைக்காக வருபவர்கள், லொக்கேஷன்களால் ஈர்க்கப்பட்டு வருபவர்கள் என பல ரகங்களில் ரசிகர்கள் உண்டு சினிமாவுக்கு.
   
வேலை முடித்து, களைப்போடு வரும் ரசிகனுக்கு ஆறுதல் தந்து மகிழ்விக்கும் சினிமா இன்று சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன தெரியுமா? திரைப்படங்களைக் குடும்பத்துடன் திரையரங்குக்குச் சென்று கண்டுகளிக்க முடியாதபடி திரையரங்கங்களின் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது. சரி, நுழைவுக்கட்டணம் இப்படி என்றால், பார்க்கிங் கட்டணம், கேன்டீனில் சிற்றுணவுக்கான கட்டணங்கள் என்று எல்லாமே சாமான்ய மனிதன் மனைவி, குழந்தைகளுடன் சென்று ரசிக்க முடியாத அளவில் பல மடங்கு உயர்வாக இருக்கிறது. அதுமட்டுமா? புதிய திரைப்படங்கள் வெளியாகும் நேரத்தில் கவுன்ட்டரில்/ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்கப்படுவது குறைந்து பிளாக்கில் அதிக பணம் கொடுத்தால் மட்டுமே பார்க்கும் நிலை உள்ளது.

இந்தப் பிரச்னைகள் இருப்பதால், அதிக பணத்தைச் செலவழிக்க விரும்பாத சினிமா ரசிகன் ஆன்லைனில் தரவிறக்கம் செய்து, தவறான முறையில் திரைப்படங்களைப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். ஆன்லைனில் டவுன்லோட் செய்வது சட்டப்படி தவறு என்று தெரிந்தபோதும், துணிந்து பார்க்கிறான். இதன் தீர்வுதான் என்ன? சினிமா ரசிகனின் ஆர்வத்தை அவன் பட்ஜெட்டுக்குள் எப்படி தீர்த்து வைப்பது? 

ரசிகனின் நியாயமான சினிமா ஆசையை அவனுடைய மாத பட்ஜெட் எகிறாதவாறு குடும்பத்துடன் பார்த்து ரசிக்க உதவுகிறது ஹீரோ டாக்கீஸ்.காம் (www.herotalkies.com) இந்த ஆன்லைன் தளத்தில், 2-6 வாரங்களுக்குள் வெளியான திரைப்படங்கள் காணக்கிடைக்கின்றன. திரையரங்கில் பார்க்கக்கூடிய அதே ஒளி - ஒலி அமைப்புடன் (HD தரத்துடன்) பார்த்து மகிழலாம். இந்த தளத்துக்கென ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஆப்புகள் இருப்பதால் மொபைல் போன், டேப்லெட், லேப்டாப் என எதில் வேண்டுமானாலும் கண்டுகளிக்கலாம். குரோம்காஸ்ட், ஆப்பிள் டிவி, ரோகு போன்றவற்றின் உதவியுடன் உங்கள் வீட்டுத் தொலைக்காட்சியிலும் குடும்பத்துடன் அமர்ந்து, பார்த்து ரசிக்கலாம். மிகவும் குறைந்த சப்ஸ்கிரிப்ஷன் தொகை மட்டும் செலுத்தி ரெஜிஸ்டர் செய்துகொண்டால், நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த வகையான டிவைஸ் வைத்திருந்தாலும் நீங்கள் வீட்டிலிருந்து விரும்பும் சினிமாவைத் தடையின்றி கண்டு மகிழலாம். இவ்வாறாக, திரையரங்கில் நீங்கள் காண விரும்பும் சினிமாவை, அதே துல்லியத்துடன் உங்கள் வீட்டின் வரவேற்பறைக்கே அழைத்து வருகிறது ஹீரோ டாக்கீஸ். வெளிநாடுகளில் மக்களின் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவரும் ஹீரோ டாக்கீஸ், விரைவில் இந்தியாவிற்கும் வர இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!