டயட், ஜிம், டான்ஸ், நயன்தாரா..!? - ‘சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம்’ எப்படி தயாராகிறது? | Is Nayanthara really pairing up with Saravana Stores' Saravanan? Answers Costumer Designer Sathya

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (21/04/2017)

கடைசி தொடர்பு:10:47 (23/04/2017)

டயட், ஜிம், டான்ஸ், நயன்தாரா..!? - ‘சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம்’ எப்படி தயாராகிறது?

சரவணா ஸ்டோர்ஸ்

ஹன்சிகா, தமன்னாவோடு சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் நடித்த இரண்டு விளம்பரங்கள் தினமும் தொலைக்காட்சிகளை அலங்கரித்துக் கொண்டிருக்க, தற்போது நடன இயக்குநர் ராஜூசுந்தரத்துடன் அவர் சேர்ந்து நடனமாடிய புது விளம்பரம் பட்டைய கிளப்பிவருகிறது. அது போக, நான்காவது விளம்பரத்தின் படப்படிப்பும் பரபரப்பாக நடந்து வருகிறது என்ற தகவல் கிடைத்தது. அது தொடர்பான தகவல்கள் பெற சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணனின் காஸ்ட்யூம் டிசைனர் சத்யாவை தொடர்பு கொண்டோம்.

 

“நேத்து காலையில தான் நாலாவது விளம்பரத்தோட ஷூட்டிங் முடிஞ்சது. சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை பொறுத்தவரை எந்த விஷயம் பண்ணினாலும் அதை சிறப்பா பண்ணணும்னு நினைப்பார். அதுனால தான் ஜேடி-ஜெர்ரி, பிருந்தா மாஸ்டர், ராஜூசுந்தரம் மாஸ்டர், கேமராமேன் ஓம்பிரகாஷ், சுகுமார், திருனு அநத விளம்பரங்களில் பெரிய பெரிய பிரபலங்களை வெச்சு பண்றார். சரவணா ஸ்டோர்ஸின் முதல் விளம்பரத்துல ஹன்சிகா, தமன்னாவோட அவர் நடிச்சிருந்தார். அதைப் பத்தி சோஷியல் மீடியால வந்த ரியாக்‌ஷன் பத்தி அவர்கிட்ட கேட்டேன். ’நான் சோஷியல் மீடியாவுல ஆக்ட்டிவ்வா இருக்கிறதில்லை சத்யா. யாராவது என்கிட்ட ஏதாச்சு காட்டுனா அந்த விமர்சனங்களை நான் கண்டுக்கிறதில்ல. என்ன ஒரு மாசத்துக்கு அதைப் பத்தி பேசுவாங்களா..? அப்பறம் மறந்துடுவாங்க’னு கூலா சொன்னார். 

காஸ்ட்டியூம் டிசைனர் சத்யா

சீரியஸாவே அவருக்கு அதைப் பத்தியெல்லாம் எந்த கவலையும் இல்ல. அதையெல்லாம் பார்க்க அவருக்கு டைமும் இல்ல. அவருக்காக நான் டிசைன் பண்ணின டிரஸ்ஸை ட்ரையல் பார்க்க போனாக்கூட அவரை பார்க்க லேட்டாகும். அந்த அளவுக்கு அவர் பிஸி. ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டாருன்னா வேற எதைப் பத்தியும் யோசிக்காம, விளம்பரத்துல தான் கவனமா இருப்பார். ஷூட்டிங்கிற்கு மூணு நாள் முன்னாடியிருந்தே டயட்ல இருக்க ஆரம்பிச்சுடுவார். உடம்பை ஃபிட்டா வச்சுக்க ஒர்க்-அவுட் பண்ணுவார். முதல் இரண்டு விளம்பரங்களில் டான்ஸ்லாம் இல்ல. மூணாவது விளம்பரத்துல கொஞ்சமா டான்ஸ் பண்ணியிருந்தார். அதுக்காக அவர் நிறைய ப்ராக்டீஸ் எடுத்து பண்ணினார்” என்றவர், நயன்தாராவோடு தான் நடிப்பேன் என்று அவர் கூறியதாக வந்த செய்தியைப் பற்றியும் சொல்லத் தொடங்கினார். 

 

 

THE LEGEND NEW SARAVANA STORES BRAMANDAMAI - TVC from jdjerry on Vimeo.

“நயன்தாராவோடு தான் நடிப்பேன்னு அவர் சொன்னதா செய்திகள் வந்தப்போ நான் அவர்கிட்ட அதைப் பத்தி கேட்டேன். ‘எனக்கு படங்களில் நடிக்கணும்ங்கிற ஆசையே இல்ல. நான் ‘நயன்தாராயோட தான் நடிப்பேன்னு சொல்லவேயில்ல. அப்படியே நடிக்கணும்னு ஆசையிருந்தாலும் அதை கோயில்லயா சொல்லுவேன்’னு சொன்னார். வியாபாரத்துல எப்படி அவருக்கு அதிக ஆர்வம் இருக்கோ அதே மாதிரி விளம்பரத்துல நல்லா பண்ணணும்னு யோசிச்சுட்டே இருப்பார். ஒரு ஷாட் நல்லா வரவரைக்கும் பண்ணிட்டே இருப்பார்” என்று முடித்தார் காஸ்ட்டியூம் டிசைனர் சத்யா.


விளம்பரங்களின் மேக்கிங் ஸ்டில்ஸ் ஆல்பம்... இந்த இணைப்பில்..!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close