நம்ம ஹீரோஸ் நடித்த இந்தக் குறும்படங்கள் எல்லாம் பார்த்திருக்கீங்களா?

குறும்படங்கள் சினிமாவில் நுழைவதற்கான எளிமையன துருப்புச்சீட்டு.  ஒருகாலத்தில் குறும்படங்களில் நடித்த பலர் இன்று சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமா நடிகர்கள் ஆரம்பக்காலத்தில் பல குறும்படங்களில் நடித்திருக்கிறார்கள். இளமையான முகம், வித்தியாசமான கெட்டப் என்று எதிர்பார்க்காத ரோல்களில் மிரட்டவும் செய்திருக்கிறார்கள். விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என சில நடிகர்கள் நடித்த, கவனிக்கப்படவேண்டிய குறும்படங்கள் இது! 

ஏஞ்சல்: 

‘நேரம்’ மற்றும் ‘பிரேமம்’ படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய குறும்படம் ‘ஏஞ்சல்’. விஜய்சேதுபதி மற்றும் பாபிசிம்ஹா இருவருமே நடித்திருப்பார்கள். க்ளீன் ஷேவில் ஸ்மார்ட் போலீஸ் அதிகாரி விஜய்சேதுபதி, நெகட்டிவ் ரோலில் பாபிசிம்ஹா என இருவருமே வேற லெவல் கெத்து காட்டியிருப்பார்கள். இருவரில் யார் ஏஞ்சல் என்பதுதான் ட்விஸ்ட்.

வீடியோவிற்கு: 

நெஞ்சுக்கு நீதி: 

இயக்குநர் நலன்குமாரசாமி இயக்கிய குறும்படம் ‘நெஞ்சுக்கு நீதி’. கருணாகரன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நடித்த குறும்படங்களில் தி பெஸ்ட் என இக்குறும்படத்தைச் சொல்லலாம். ஏனெனில் மற்றக் குறும்படங்களில் காமெடி ரோலில் நடித்த கருணாகரன், இதில் கொஞ்சம் சீரியஸ் காட்டியிருப்பார். இக்குறும்படத்திலும் நட்புக்காக பாபிசிம்ஹா. கருணாகரனின் இதயத்தை எடுத்து, பாபிசிம்ஹாவின் தாத்தாவுக்குப் பொருத்துவதற்காக கருணாகரனை கொல்ல போகும் போது நடக்கும் சுவாரஸ்ய சம்பவம் தான் ‘நெஞ்சுக்கு நீதி’. 

விடியோவிற்கு: 

முகப்புத்தகம்: 

விஜய்யை இயக்கிக்கொண்டிருக்கும் அட்லீயின் குறும்படம் இது. சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷ் இருவருமே நடித்திருப்பார்கள். செம வைரலான குறும்படம் ‘முகப்புத்தகம்’. ஃபேஸ்புக் காதல் தவறாக பயன்படுத்தும் கும்பலின் மிரட்டல் ஒரு பக்கம், அதே நேரத்தில் பேஸ்புக்கில் காதல் பண்ணும் சிவாவின் காதல் என்னவானது  என்ற ஜாலியான டச்சுடன் மெசேஜ்  சொல்லும் குறும்படம் தான் ‘முகப்புத்தகம்’. 

வீடியோ:

சரித்திரன்:- 

அசோக் செல்வன் நடித்திருப்பர். ரஜினியின்  ‘எந்திரன்’ முதல் நாள் காட்சியைப் பார்ப்பதற்காக, தனித்தனியாக வந்து திரையரங்கில் மாட்டிக்கொள்ளும் ஃபேமிலியின் காமெடி அதகளம் தான் சரித்திரன். 

வீடியோ:

ஒரு பொய்: 

‘ஜோக்கர்’ நாயகன் குருசோமசுந்திரன் நடித்திருப்பார்.கொலையும், கொலைக்குப் பிறகான விசாரணையும் தான் களம். செம சீரியஸான படம். நடிப்பிலும் குரு அசத்தல். 

வீடியோ:

தோட்டா விலை என்ன? 

கருணாகரன் போலவே, குறும்படங்களில் அதிகம் தென்படும் மற்றுமொரு நடிகர் ரமேஷ் திலக். காமெடியில் தொடங்கி நெகட்டிவ் ரோல் வரையிலும் வெரைட்டி காட்டியிருப்பார். என்கவுன்டர் சரியா, தப்பா என்று பேசும் ஒன்லைன்,  ஏன் என்கவுண்டரால் ரமேஷ் திலக்  கொல்லப்படுகிறார் என்பதை பேசும் விஸுவல் தான் ‘தோட்டா...விலை என்ன?’.  நலன் குமாரசாமியின் மற்றுமொரு பெஸ்ட் ஷார்ட் ஃபிலிம். 

வீடியோ:

கலரு: 

செம ஜாலியான குறும்படம். காதல் சுகுமார் மற்றும் சென்ட்ராயன் இருவருமே நடித்திருப்பார்கள். சென்ட்ராயனின் போட்டுவரும் கலர்கலரான உடைகளும், அதன் காரணமும் தான் இக்குறும்படம். நாளைய இயக்குநரில் வெளியாகி ஹிட்டடித்த குறும்படம் இது. 

வீடியோ:

 

 

சதுரங்கவேட்டை: 

மாநகரம் படத்தில் கலக்கிய ‘முனிஸ்காந்த்’ ராமதாஸ் இக்குறும்படத்தில் நடித்திருப்பார். மாய உலகத்திற்கும் புகுந்துவிடும் ஹீரோ, சதுரங்க விளையாட்டு விளையடுகிறார். ஒவ்வொரு வீரராக இழக்கும் போதும் ஹீரோவுக்கு நெருக்கமானவர்கள் யாராவது ஒருவர் இறந்துவிடுகிறார்கள். இறுதியாக ராணியை இழந்தனா இல்லையாங்கிற கதை சதுரங்கவேட்டை. செம சீரியஸான ஃபேண்டஸி குறும்படம். 

வீடியோ:

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!