வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (05/05/2017)

கடைசி தொடர்பு:13:12 (05/05/2017)

மக்கள் மகிழ்ச்சியா இருந்தாலே போதும் - டப்ஸ்மாஷ் ரேஷ்மிகா

டப்ஸ்மாஷ் ஃபீவர் குறைந்த பின்பும், அதில் பின்னியெடுத்து மில்லியன் கணக்கில் ஹிட்களை அள்ளிக்கொண்டிருக்கிறார் ரேஷ்மிகா. பொதுவாகவே பெண் டப்ஸ்மாஷ் கலைஞர்கள் ஹீரோயின்கள் பேசிய வசனங்களை எடுத்தே டம்ப்ஸமாஷ் செய்வார்கள். ஆனால், இவரோ வடிவேலு, சந்தானம் போன்ற ஆண் நடிகர்கள் பேசிய கலகலப்பான டயலாக்குகளை, காமெடியான முகபாவனைகளை வைத்துக்கொண்டு கலக்கி எடுக்கிறார். அமெரிக்காவில் லிவிங்ஸ்டனாக இருக்கும் அவரை ஃபேஸ்புக்கில் பிடித்துப் பேசினோம்...

ரேஷ்மிகா டப்ஸ்மாஷ்

"என் பெயர் ரேஷ்மிகா. அமெரிக்கத் தமிழ் பொண்ணு. சென்னையில் தான் காலேஜ் படிச்சேன். படிச்சு முடிச்சுட்டு அமேசான் நிறுவனத்தில் வேலை. என் அப்பா டாக்டர். நான், அப்பா, அம்மா எல்லோரும் அமெரிக்காவில் தான் இருக்கோம்" என ஸ்வீட்டாக ஆரம்பித்தார் ரேஷ்மிகா.

"எப்போ இருந்து டப்ஸ்மாஷ் பண்ண ஆரம்பிச்சீங்க?"

"போன வருஷம் நவம்பர் மாசத்துல இருந்துதான் டப்ஸ்மாஷ் பண்ண ஆரம்பிச்சேன். சும்மா பொழுதுபோக்காக பண்ணினது தான். என் ஃபிரெண்ட்ஸ்தான் நான் பண்ணின டப்ஸ்மாஷ் வீடியோக்களை பேஸ்புக்ல போஸ்ட் பண்ணச் சொன்னாங்க. `டப்ஸ்மாஷ் தமிழ் ஃபன்'ங்கிற பேஸ்புக் பேஜுக்கு என்னுடைய டப்ஸ்மாஷ் வீடியோக்களை அனுப்பிவெச்சேன். அவங்களும் அதை போஸ்ட் செய்ய, அதற்கு நிறைய பாராட்டுகள் கிடைச்சது. பிறகு வடிவேலு சாரோட `வாம்மா மின்னலு...' காமெடியில் வரும் எல்லா கதாபாத்திரங்களிலேயும் நானே நடிச்சேன். அதுதான் நான் நிறைய கதாபாத்திரங்களில் நடிச்ச முதல் டப்ஸ்மாஷ். மக்களுக்கு அது ரொம்பவே பிடிச்சுப்போக, அதே மாதிரியே பண்ணச் சொல்லி ரிக்வஸ்ட் பண்ணாங்க. ஒவ்வொரு வீடியோவிலும் உடை, உடமை, இடம்னு எல்லா விஷயத்தையும் ரொம்ப கவனிச்சுப் பண்ணுவேன். அது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துச்சு, நானும் தொடர்ச்சியாகப் பண்ண ஆரம்பிச்சுட்டேன்."

"பெரும்பாலும் பெண்கள் ஹீரோயின் வசனங்களையே டப்ஸ்மாஷ் பண்ணுவாங்க. ஆனால், நீங்க அதிகமா ஆண் காமெடியன்கள் பேசின வசனங்களைப் பண்ணக் காரணம்..?"

"மக்களை என்டர்டெயின் பண்ணாலே எனக்கும் போதும். ஒரு காட்சி நகைச்சுவையா, சுவாரஸ்யமா, நாகரிகமானதா இருக்குதானு பார்ப்பேன். அப்படி எல்லா விஷயங்களும் அதில் இருந்தால், அதை டப்ஸ்மாஷ் பண்ணிடுவேன். நானும் ஹீரோயின்கள் பேசிய வசனங்களை வெச்சுப் பண்ணியிருக்கேன். ஆனால், அதை விட எனது காமெடி வீடியோக்கள் தான் நல்லாருக்குனு நிறையபேர் சொன்னாங்க. நானும் வடிவேலு சாரோட மிகப்பெரிய ரசிகை. அதனால், அவர் நடித்த காட்சிகளையே பண்ண ஆரம்பிச்சுட்டேன்."

"டப்ஸ்மாஷ் வீடியோக்களுடன் நீங்க பரதநாட்டியம் ஆடின வீடியோக்களையும் நிறைய பார்க்கமுடியுது..."

"ஆமாம், நான் பரதநாட்டியம் டான்ஸர். 11 வருஷமா கத்துக்கிட்டு வர்றேன். 5 வருஷத்துக்கு முன்னாடியே அரங்கேற்றமும் பண்ணியாச்சு. பரதநாட்டியம் கத்துக்கிட்டதாலே தான் நடிக்க எளிதாக இருக்குனு நினைக்கிறேன்."

 

டப்ஸ்மாஷ் வீடியோக்கள்

"குடும்பத்தினர், நண்பர்கள் என்ன சொல்றாங்க?"

"அவங்க தான் எனது மிகப்பெரிய சப்போர்ட். என் வீடியோ ஹிட் ஆகும்போது என்னைவிட என் நண்பர்கள் தான் அவ்வளவு சந்தோஷப்படுவாங்க. நீ அந்த காமெடியை டப்ஸ்மாஷ் பண்ணுனு பல நேரங்கள்ல சிபாரிசு செய்றதும் அவங்கதான்."

"சினிமா வாய்ப்புகள் வந்திருக்குமே..."

"ஆமாம், சில சினிமாக்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனக்கு அதில் ஆர்வம் இல்லை. டப்ஸ்மாஷ் பண்ணினோமா மக்களை சிரிக்க வெச்சோமா...அவ்வளவுதான்." என்றார். மகிழ்ச்சி...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்