Published:Updated:

இட்லியை வச்சு உப்புமா செய்யுறது தப்பு; ஏன்னு தெரியுமா..?!

ஜெ.வி.பிரவீன்குமார்
இட்லியை வச்சு உப்புமா செய்யுறது தப்பு; ஏன்னு தெரியுமா..?!
இட்லியை வச்சு உப்புமா செய்யுறது தப்பு; ஏன்னு தெரியுமா..?!

சினிமாவுல என்னத்தையாச்சும் ஈஸியா பண்ணிட்டுப் போயிடுவாங்க. ஆனா அதைப்பார்த்துட்டு ஃபாலோ பண்ணேன்னு  ரியல் லைஃப்ல நடக்குற அட்ராசிட்டீஸ்லாம் இருக்குது பாருங்க. எல்லாம் தெர்மாகோல் லெவல்லதான் இருக்கும்.

 'ரட்சகன்' படத்துல நாகர்ஜுனா 'கனவா காற்றா...'ன்னு பாட்டுப்பாடுறதோட நிறுத்திருக்கலாம்ல. அவர் பாட்டுக்க ஹீரோயின் சுஷ்மிதாசென்னை அலேக்கா தூக்கிக்கிட்டு மாடியில ஏறிப் போறார். அதைப் பார்த்துட்டு ``நாகார்ஜுனனைப் பார்த்தீங்களா, எப்படித் தூக்கிட்டுப் போறாரு. நீங்களும்தான் இருக்கீங்களே’’னு பலபேரு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. பசங்களுக்கு  நாகார்ஜுனா மாதிரி தூக்கத்தெரியலைங்கிறது இருக்கட்டும். ஆனா  அதுக்கு முதல்ல நீங்க சுஷ்மிதாசென் மாதிரி இருக்கணுமே...  வெயிட் தாங்காம ஸ்லிப் ஆகி மாடிப்படி உடைஞ்சா கட்டடத்துக்கு யாரு பில் கட்டுறது, ஃபேமிலிய யாரு மெயின்டன் பண்றது.

அப்புறம் இந்த ‘அலைபாயுதே’ படம். ஓபனிங் சீன்ல ஹெட்போனை மாட்டிகிட்டு மண்டையை ஆட்டிக்கிட்டு 'என்றென்றும் புன்னகை...'னு மாதவன் என்ட்ரி ஆனாலும் ஆனாரு, அதுல இருந்து இன்னும் இந்தப் பசங்க மீண்டு வரல போல. என்னமோ இவிய்ங்க பொறக்கும்போது பக்கத்து பெட்டுல இசையும் பிறந்து கிடந்ததுமாதிரி, எந்நேரமும் ஒரே இசைதான், பாட்டுதான், ஹம்மிங்தான். வண்டி ஓட்டும்போது நீங்க ஹெட் போனைக் காதுல மாட்டி பாட்டுக் கேளுங்க, இல்லை பேங்குக்கு போனைப் பண்ணி பெர்சனல் லோன் கேளுங்க... ஆனா அதைக்காதுல மாட்டிக்கிட்டு உங்களுக்குக் காது கேட்காம எதிர்ல வர்ற எங்க மேல ஏன்  மோதுற மாதிரியே வர்றீங்கங்கிறதுதான் கேள்வி.

'ஜலக்கு ஜலக்கு ஜரிகை சேலை ஜலக்கு ஜலக்கு'னு பாட்டுப்பாடுனதோட நிறுத்தி இருக்கலாம். தெரியாத்தனமா எப்படியோ இட்லியை உதிர்த்து உப்புமா பண்றமாதிரி ‘சூர்யவம்சம்’ படத்தில் தேவயானி ஒரு காட்சியில புதுமையா பண்ணிட்டாங்க. அதைப்பண்ணாலும் பண்ணுனாங்க, ஊருக்குள்ள அம்புட்டு கிச்சன்லேயும் அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஆக்சுவலா அவிச்ச இட்லி மீதம் இருக்கேனுதான் அந்த டிஷ்ஷே பண்ண ஆரம்பிச்சாங்க. அதுல ஒரு லாஜிக் இருந்துச்சு. ஆனா உப்புமா கிண்டுறதுக்காகவே இட்லிகளை அவிச்சு அதைத் திரும்ப உப்புமாவாகப் பண்ணித் திங்கக்கொடுக்கிறதெல்லாம் இருக்கு பாருங்க. ரொம்பத் தப்பு இல்லை, ரொம்ப ரொம்பத் தப்பு மக்கழேய்ய்ய். (அதுவும் 'பசி தீர்ந்தது போக மீதம் இருக்குற இட்லி அடுத்தவங்களோடது'னு 'கத்தி'யில விஜய் வேற சொல்லி இருக்காரு. அப்படிப்பாத்தா மத்தவங்களுக்குக் கொடுக்காம  அதை உப்புமாவாகவேற செஞ்சு சாப்புடுறது எவ்வளவு பெரிய தப்புன்னு அந்த தேவயானிக்குத் தெரியுமா? ஆங்க்.)

அப்புறம் இதை சொல்லியே ஆகணும். அஜித்துக்கு உண்மையிலேயே சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் இருக்குங்கிறது ஊரறிஞ்ச விஷயம். ஒரிஜினாலிட்டியா இருக்கணும்னுதான் அஜித்தே அப்படி பண்ணுனார். ஆனா அதைப் புரிஞ்சிக்காம அதுமாதிரியே பண்றோம்னு நல்லா இருக்கும் தலையில ஷங்கர் படத்து சாங்க்ல வர்றமாதிரி சால்ட் அண்ட் பெப்பர் கலரிங்குகளை பூசிக்கிட்டு வந்து நல்லாருக்குதான்னு வேற கேக்குறீங்களே, அதெல்லாம் நல்லாவா இருக்குது மக்களே... அந்தக்காசுல நிஜமாவே சால்ட்டும், பெப்பரும் வாங்குனா சமையலுக்காவது யூஸ் ஆகும்ல.

‘தனி ஒருவன்’ படத்துல போறபோக்குல, நியூஸ் பேப்பர்ல ஒண்ணாவது பக்கத்துக்கும் மூணாவது பக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குதுனு க்ளோஸ்அப் ஷாட்லவேற முகத்தைக்காட்டி சொல்லிட்டுப் போயிட்டார் ‘ஜெயம்’ ரவி. அதை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு, `மூணாவது பக்கத்துல மணமகள்தேவைனு விளம்பரம்தான் போட்ருக்கு, இதுல என்ன சம்பந்தம் இருக்குது?'னு சம்பந்தமே இல்லாம நம்மகிட்ட வந்து கேட்டுக் கேட்டு டார்ச்சர் பண்றவய்ங்களைலாம் என்னதான் பண்றதுனே சத்தியமா தெரியலை பாஸ். ஏன்யா நாங்களாய்யா சொன்னோம். 'தனி ஒருவன்'ல அவரு சொன்ன டயலாக்குக்கு தனியா ஒருவனா உட்கார்ந்திருக்க எங்ககிட்ட வந்து டவுட் கேக்குறீங்களே இதெல்லாம் நியாயமா இருக்காய்யா?

ஹீரோயின் சிக்ஸ் பேக் வைக்கிற காலமே வந்துடுச்சு. ஆனா இன்னமும் சிக்ஸ்பேக்ஸ் வச்சா அம்புட்டுப் பொண்ணுகளும் க்யூவுல வந்து நிக்கும்னு இந்த பசங்க மாங்கு மாங்குனு வொர்க் அவுட் பண்ணிக்கிட்டு  ஜிம்லயே கிடக்குறது, 'சந்தோஷ் சுப்ரமணியம்' ஜெனிலியா மாதிரி கேனைத்தனமா ஏதாவது பண்ணுனா பசங்க இம்ப்ரஸ் ஆயிடுவாங்கனு நினைக்கிறதைலாம் இத்தோட நிறுத்திடுங்க மக்களே. ஏன்னா இந்த லவ்வுங்கிறது இருக்கே...

ஜெ.வி.பிரவீன்குமார்