Published:Updated:

“சீரியல்லதான் வில்லன்.. சீரியஸா  நான் ஹீரோ!” - ‘நீலி’ விகாஷின் மறுபக்கம்!

முத்து பகவத்
“சீரியல்லதான் வில்லன்..  சீரியஸா  நான் ஹீரோ!” - ‘நீலி’ விகாஷின் மறுபக்கம்!
“சீரியல்லதான் வில்லன்.. சீரியஸா  நான் ஹீரோ!” - ‘நீலி’ விகாஷின் மறுபக்கம்!

விஜய் டிவியின் ‘நீலி’ சீரியலில் மெயின் வில்லன் விஜே விகாஷ்.  சீரியலில் மட்டுமே படு சீரியஸாக, உர்ர்ரென மிரட்டுகிறார். ஆனால், நிஜத்தில் புன்னகையை மட்டுமே விதைக்கிறார். செம ஜாலி டைப். ஏதும் உதவின்னா யோசிக்காமல் செய்பவர். சீக்கிரமே சினிமாவிலும் விஜயம் செய்யவிருப்பவரிடம்... நட்புடன் ஓரு தேனீர் சந்திப்பு! 

“மீடியா என்ட்ரி ?” 

“காலேஜ் படிக்கும்போது எக்ஸாம் போறேனோ இல்லையோ, மிமிக்ரி, கல்ச்சுரல்ஸ்னா முதல்ல போய் நிப்பேன். படிச்சது இன்ஜினியரிங். மீடியாவா, ஐடி துறையான்னு முடிவெடுக்க வேண்டிய கட்டாயம். முன்னாடியெல்லாம் வீட்டுக்கு முதல் பையன் மிலிட்டரிக்கு போவங்க. இப்போ ஐடி-க்கு வேலைக்குப் போறாங்க. அதுனால என் அண்ணன் ஐடிக்கு போய்ட்டதுனால மீடியாவில் ஜொலிக்கலாம்னு யோசிச்சேன். முதல் முயற்சி ராஜ் டிவிதான். ஆகஸ்ட் 15ம் தேதி ஆடிஷன். மொத்தமா 57 பேர் இருந்தோம். 57வது ஆளா நான் ஆடிஷனுக்குப் போனேன். இரண்டு நிமிஷம் பேசச் சொன்னாங்க. வெளிய வந்ததும், ‘நீங்க ஒருத்தர் தான் செலக்ட் ஆகிருக்கீங்க’னு சொன்னாங்க. நார்மல் விகாஷ், விஜே விகாஷா மாறினது இப்படிதான். மசாலா கஃபே, திரைவிமர்சனம், ரோடு மேல ரோமியோ, கேம் ஷோன்னு ராஜ் டிவியில் எல்லா நிகழ்ச்சியுமே பண்ணிட்டேன்.  கடந்த இரண்டு வருஷமா விஜேவா இருந்தேன். அடுத்த வாய்ப்பு விஜய் டிவியில இருந்து வந்தது. ‘நீலீ’ சீரியல்ல பத்தோடு பதினொண்ணா சின்ன ரோல் தருவாங்கன்னு நினைச்சித்தான் போனேன். ஆனா மெயின் வில்லனா நடிப்பேன்னு நினைச்சிக்கூட பார்க்கலை. அதுமட்டுமில்லாம விஜய் டெலிவிஷன் விருதுகள்ல நாமினேஷன் வரைக்கும் வந்ததே பெரிய விஷயம். அதுக்கு காரணம் நீலி இயக்குநர் ஜெரால்ட்டு சார் தான். 100 எபிசோட் தாண்டிப் போய்ட்டு இருக்கு. சீரியல் செம ரீச். ஃபேஸ்புக்குல எனக்கே 4 ஃபேன் பேஜ் கிரியேட் பண்ணிட்டாங்க. ”

“மீடியாவை ஏன் தேர்ந்தெடுத்தீங்க?”

“ஒரு பெரிய திட்டத்தோடதான் மீடியாவுக்கே வந்துருக்கேன். சொன்னா ரொம்ப ஓவரா பேசுறேன்னு தோணும். ஆனா அதான் உண்மை. சின்ன வயசுல இருந்தே இரத்த தானம், சமூக சேவையில ஈடுபடுறதுன்னா ஆர்வம் அதிகம். நாம கொஞ்சம் பிரபலமா இருந்தா இன்னும் நிறைய உதவிகள் பண்ணலாம்னு தோனுச்சு. அதுக்காக நான் தேர்ந்தெடுத்த துறை மீடியா. இப்போ சம்பாதிக்கிற பணத்துல கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சிப்பேன். இல்லாதவங்களுக்கு சாப்பாடு, உடை கொடுக்குறதெல்லாம் பொதுவா செய்யுறதுதான். அதையும் தாண்டி அவங்களுக்கு என்னவேணும்னு பார்த்து உதவணும். சீரியல்லதான் வில்லன் ப்ரோ.. சீரியஸா  நான் ஹீரோதான் ”

“சினிமா?”  

“விஜய் டிவியில் நடிக்க ஆரம்பிச்சதுல இருந்து, நான்கு படங்கள் கமிட்டாகிட்டேன். மொட்டை ராஜேந்திரன் அண்ணா கூட ‘வராகா’னு ஒரு படம், மலையாள இயக்குநர் ரினி ஜோசப் சாரோட படம், இன்னும் இரண்டு படங்கள்னு சீக்கிரமே சினிமாவிலும் என்னை பார்ப்பீங்க. எனக்கு இன்ஸ்பரேஷன் ஜெயம்ரவி சார் தான். ராஜ் டிவியில் இருக்கும் போது ‘சீக்கிரமே சினிமாவுக்கு வருவ, பெரிய ஆளாகிடுவ’னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே சினிமா வாய்ப்பும் தேடி வந்துடுச்சு. 

ஒருமுறை ‘மிருதன்’ படத்துக்காக லட்சுமிமேனனை பேட்டி எடுக்குற வாய்ப்பு கிடைச்சது. அவங்களுக்கு என்ன ரொம்ப பிடிச்சுப் போய்டுச்சு. நான் பண்ணுற ஆக்‌ஷன்லாம் அவங்களும் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ‘என் லைஃப்லயே உங்களை மறக்கவே மாட்டேன். உங்களை மாதிரி ஒரு ஆங்கரை பார்த்ததே இல்லை. இனி எப்போ மீட் பண்ணாலும் ஒரு செல்ஃபி உங்களோடு கண்டிப்பா எடுத்துப்பேன்’ன்னு சொன்னாங்க. அப்படியே வானத்துல பறக்குற மாதிரியே இருந்துச்சு. நிஜமாகவே மறக்கமுடியாத தருணம் அது.”

“பொது இடங்களில் மக்கள் ரியாக்‌ஷன்?”

“வெளிய போகும்போது ஈஸியா என்னைக் கண்டுப்பிடிச்சிடுவாங்க. என்னை அவங்க வீட்டுல ஒருத்தனா நினைச்சி, நலம் விசாரிப்பாங்க. மக்களோட வாழ்த்து ராஜ போதைக்கு சமம். மீடியா வராம, ஐடி-யில் வேலைப்பார்த்திருந்தா, என்னை 10 பேருக்குத்தான் தெரிஞ்சிருக்கும். ஆனா இப்போ உலகத்துக்கே என்னைத் தெரியுது. இதுதாங்க சந்தோஷம். இதுவே போதும்.” 

முத்து பகவத்

Cinema Reporter