Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ ‘விஜய்க்கு சஞ்சீவ் க்ளோஸ் ஃப்ரெண்ட்’னு சொல்றாங்களே.. அதான் பெருமை!” - ‘திருமதி செல்வம்’ சஞ்சீவ்

திருமதி செல்வம் நாடகத்தில் செல்வம் கதாபாத்திரமாகவே மக்கள் மனதில் பதிந்தவர் சஞ்சீவ். அதன் பின்னர் "மானாட மயிலாட" என்கிற நடன நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளாராக மாறி அனைவரையும் வியக்க வைத்தார். இப்போது நீண்ட இடைவேளைக்குப் பின்னர் "யாரடி நீ மோகினி" நாடகத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சூட்டிங் ஸ்பாட்டில் பிசியாக இருந்த அவரோடு ஒரு தேநீர் இடைவேளையில் பேசினோம்.

சஞ்சீவ்

ரொம்ப நாள் கழிச்சு சீரியல்ல ரீ-என்ட்ரி கொடுத்துருக்கீங்களே..?

திருமதி செல்வத்துக்கு அப்புறம் எனக்கு கொஞ்சம் இடைவேளை தேவைப்பட்டுச்சு. அந்த சீரியல் மக்கள் மத்தியில பரபரப்பா பேசப்பட்டுச்சு. நல்ல வாய்ப்புகள் வந்தும், வேண்டாம்னு தான் சொல்லிட்டு இருந்தேன். அப்போ தான் "யாரடி நீ மோகினி" நாடகத்துல நடிக்க வாய்ப்பு வந்துச்சு.. ஆரம்பத்துல கதை கேட்கும் போது எனக்கு நாடகம்னு தோணவே இல்ல.. சினிமால வர மாதிரி பாட்டு, ஃபைட் சீன்லாம் உண்டுனு சொன்னாங்க. ரொம்ப நாள் கழிச்சு நடிக்குறதுக்கு சரியான புராஜெக்ட்னு ஓகே சொல்லிட்டேன்.

"மானாட மயிலாட" நிகழ்ச்சியை தொகுத்து வழங்குன அனுபவம்.?

எனக்கு நடிக்கதான் தெரியும். வீஜேவா ஷோலாம் பண்ண முடியாதுனு சொல்லிட்டேன். வீஜே தீபக்தான் உன்னால முடியும் சும்மா பண்ணுனு என்னை ஊக்கப்படுத்தினான். ஆரம்பத்துல மெதுவாத்தான் பேசுனேன். ஒரு நாள் கலா மாஸ்டர் டைம் ஆச்சு. வேகமா பேசுங்கனு சொன்னாங்க. சரினு நானும் வேகமா பேசுனேன். அன்னைக்கே மக்கள் கிட்ட செம ரெஸ்பான்ஸ்.. ‘தொடர்ந்து நீ இப்படியே பேசு’னு கலா மாஸ்டர் சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறமா வேகமா பேசுற வீஜேங்குற பேரு கிடைச்சிருச்சு.

உங்க குடும்பத்தைப் பற்றி..?

Sanjeev Family

என்னோட மனைவி ப்ரித்தீ. அவங்களும் சின்னத்திரை நடிகை தான். எனக்கு பெரிய தூண் என்னோட மனைவி தான். நான் துவண்டுபோய் இருந்த நாட்கள் எல்லாம் கவலைப்படாதீங்க.. நிச்சயம் நல்ல வாய்ப்பு வரும்னு என்னை உற்சாகப்படுத்திட்டே இருப்பாங்க. என்னோட பெரிய பொண்ணு லயா, ஒண்ணாவது படிக்குறாங்க.  பையன் ஆதவ், பிளே ஸ்கூல் போறாரு. இவங்கதான் என்னோட சந்தோஷமே..

விஜய் - சஞ்சீவ் நட்பு..?

எனக்கு 25 வருஷ நண்பன். ரெண்டு பேரும் ஒண்ணாதான் காலேஜ் படிச்சோம். விஜய் ரொம்பவே ஜாலி டைப். எப்பவும் கலகலனு சிரிச்சு பேசிட்டே இருப்பான். ஆனா, அவனுக்கு நெருக்கமானவங்களை மட்டும் மனசு விட்டு பேசுவான். என்னோட வாழ்க்கையில எந்த மாதிரியான சூழ்நிலைகளிலும் என் கூடவே இருக்குற நல்ல மனுஷன். ரொம்ப எளிமையா இருப்பான். இப்போ ‘யாரடி நீ மோகினி’ல வர பாட்டை அவனுக்கு அனுப்பி வச்சேன். ‘என்னடா புது படத்துக்கான டிரெய்லரா?’னு கேட்டான். ‘இல்லடா சீரியல்’னு சொன்னதும் ‘அருமையா இருக்கு நிச்சயம் உனக்கு சீக்கிரமே பட வாய்ப்புகள் கிடைக்கும்’னு என்னை உற்சாகப்படுத்தினான். சீரியல் ஆக்டர், ஆங்கர்லாம் தாண்டி, ‘விஜய்க்கு சஞ்சீவ் ரொம்ப குளோஸ்’னு சொல்றாங்களே.. அதுதான் எனக்குப் பெருமை.

சின்னத்திரை நடிகர்கள் கொஞ்ச பேர் மன உளைச்சல் காரணமா தற்கொலை பண்ணிக்கிறாங்களே அதை எப்படி பார்க்குறீங்க..?

 

எல்லாருக்குமே ஸ்டிரெஸ் இருக்கு. ஸ்டிரெஸ் இல்லாத மனுஷங்க யாருமே இல்லை. எல்லாருக்கும் ஏதோ ஒரு வழியில பிரச்சனை கண்டிப்பா இருக்கும். எதுவுமே வாழ்க்கையில நிரந்தரம் கிடையாது. அது கவலையா இருந்தாலும் சரி, மகிழ்ச்சியா இருந்தாலும் சரி எல்லாமே கொஞ்ச நாளைக்கு தான். "இதுவும் கடந்து போகும்" என்பதை மட்டும் எப்பவும் நியாபகத்துல வச்சிக்கணும். எதுவுமே நிரந்தரம் சஞ்சீவ் விஜய்இல்லை..ஜாலியா வாழ கத்துக்கணும். 

புதுசா நடிக்க விரும்புறவங்களுக்கு நீங்க சொல்ற அட்வைஸ்..?

நான் அட்வைஸ் சொல்றதா? (சிரிக்கிறார்) ம்ம்.. இயக்குநர் என்ன சொல்றாரோ அத அப்படியே பண்ணினாலே போதும்.. நம்மளுக்கு எது நல்லா வரும், வராதுனு தெரிஞ்சவர் அவர்தான். அதுனால சொன்ன கேரக்டர ஃபீல் பண்ணி நடிச்சாலே போதும்.

எந்த மாதியான படங்களைத் தேர்வு செய்வீங்க..?

நடிச்சா ஹீரோ தானுலாம் சொல்ல மாட்டேன். எந்த கேரக்டர்னாலும் நடிக்க ரெடியாதான் இருக்கேன். ஆனா மக்கள்கிட்ட பேசப்படுற
கதாபாத்திரமா இருக்கணும். அந்த மாதிரி ஒரு படத்துக்காக தான் காத்துட்டு இருக்கேன்.

யாரடி நீ மோகினில உங்க ரோல்..?

அந்த சீரியல்ல என்னோட பேரு முத்தரசன். மனைவியை இழந்த கணவன். திருமதி செல்வம்ல மக்கள் எப்படி செல்வத்தை கொண்டாடினாங்களோ அதே மாதிரி நிச்சயமா முத்து மாமா கதாப்பாத்திரமும் பேசப்படும். நிச்சயம் இது ஒரு நல்ல கம்-பேக்கா எனக்கு இருக்கும்.

கலைஞர் கருணாநிதி உங்களுடைய ரசிகராமே..?

நான் 2009ல் சிறந்த நடிகருக்கான விருது " திருமதி செல்வம்" கதாப்பாத்திரத்துக்காக வாங்கினேன். அப்போ அந்த விருதை கலைஞர்தான் கொடுத்தாரு. அப்போ அவரு நானும், எங்க வீட்லயும் உன்னோட ரசிகன்யானு சொன்னாங்க. அதை சத்தியமா நான் அவர் கிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்