இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளன்று அவரை நேரில் பார்த்து வாழ்த்துச் சொல்ல வேண்டுமா? (Sponsored Content)

‘இசை மழை எங்கும் பொழிகிறதே,
இசைஞானியை நேரில் கண்டதுமே’

 
என்று உற்சாகத்துடன் நீங்கள் பாடிக் குதூகலிக்க ஓர் அருமையான வாய்ப்பு. ஆம், ராகதேவனை நேரில் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு! 
 
ஜூன் 2-ம் தேதி, ‘மேஸ்ட்ரோ’ இளையராஜா அவர்களின் பிறந்த நாள். அன்றைய தினம், ‘மேஸ்ட்ரோஸ் மியூஸிக்’ நிறுவனத்தினர் இசை அரசரைப் பெருமைப்படுத்த ஒரு பிரமாண்ட விழாவை ஏற்பாடு செய்துள்ளனர். ரசிகர்களாகிய நீங்கள், அந்த மாபெரும் விழாவில் பங்குகொண்டு, இசைஞானியை நேரில் சந்திக்கலாம். விழாவின் முதல் நிகழ்ச்சியாக,  இளையராஜா அவர்களின் வாழ்வையும் படைப்புகளையும் மையப்பொருளாகக் கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களுடன் கூடிய நகைச்சுவைப் பட்டிமன்றம் ஒன்று முனைவர் ஞானசம்பந்தம் மற்றும் குழுவினரால் நடத்தப்பட இருக்கிறது. அதைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் ஆறு இசைக்குழுவினர்கள், இளையராஜா இசையமைத்த படங்களிலிருந்து பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கலவையை வாசித்து நம் அனைவரையும் அசத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். உங்கள் மனம் கவர்ந்த இசையமைப்பாளரை அவர் பிறந்த நாளன்று நேரில் சந்தித்து வாழ்த்த, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 
 


 
நீங்கள் செய்ய வேண்டியவை எளிமையான செயல்களே. Maestrosmusic.net தளத்துக்குச் சென்று, ‘Maestro’s Music’ App-ஐ தரவிறக்கம் (download) செய்யவேண்டும். (ஆப்பிள் பயனாளர்கள் App Store-லும், ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் Play Store-லும், அதைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.) பிறகு, உங்கள் பெயர் மற்றும் இதர விவரங்களையும் கொடுத்துப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். இசைஞானி இசையமைத்த பாடல்கள் அனைத்தையும் நீங்கள் ‘Maestro’s Music’ App மூலம் எளிமையாகப் பெற்றுக் கேட்டு மகிழலாம். பதிவு செய்த பயனாளிகளில், எவர் ‘Maestro’s Music’ App செயலியை அதிகம் பயன்படுத்துகிறார்களோ, அவர்களுள் சிலரே இசைஞானியைச் சந்திக்க  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் வெற்றி பெறுபவர் நீங்களாகவும் இருக்கலாம்! 
 
உடனே Register செய்யுங்கள்! இசை வேந்தனை நேரில் காணும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

Apple App Store link: https://itunes.apple.com/in/app/maestros-music/id1176893191?mt=8

Play Store Link: https://play.google.com/store/apps/details?id=com.maestrosmusicinc.maestrosmusic&hl=en

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!