Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

பில்லா, பீட்சா, கோ - பார்ட் 1 பக்கா... பார்ட் 2 போங்கு! #SequelFilms

வி.ஐ.பி 2 படத்தின் டீஸர் இப்போதான் ரிலீஸ் ஆகியிருக்கு. அதுக்குள்ள, 'சூப்பர்.... தலைவர் படம் எப்படியும் பார்ட் ஒன் மாதிரி கெத்தாதான் இருக்கும்"னு தனுஷ் ரசிகர்கள் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. முதல் பாகம் சூப்பர் ஹிட்டுன்னா அடுத்த பாகம் மேல தன்னாலே எதிர்பார்ப்பு வர்றது சகஜம்தான். ஆனா, அந்த எதிர்பார்ப்பு மட்டுமே பார்ட் 2 படத்தை ஓடவைக்காது. தமிழ் சினிமாவில் இதுக்கு எக்கச்சக்க உதாரணங்கள் இருக்கு. ஒரு ரவுண்ட் போவோமா?

பார்ட் 2       

பார்ட் ஒன்னின் தொடர்ச்சியையே பார்ட் 2 வாக பார்த்த மக்களுக்கு, பார்ட் ஒன்னின் முன்கதையை இரண்டாம் பாகமா சொன்ன படம்தான் பில்லா 2. அஜித் ரசிகர்களுக்கிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பைக் கிளறி வெளிவந்த படம் நினைச்ச அளவுக்கு ஹிட் ஆகாம ஏமாற்றத்தைக் கொடுத்துச்சு. 'இது தமிழ் படம் மாதிரியே இல்லையே, நாமதான் மாறி வந்துட்டோமோ'னு யோசிக்கிற அளவுக்கு வடக்கத்தி வாடையை தூக்கி அடைச்சிருந்தாரு இயக்குநர். பாவத்த!

இளைஞர்கள் அரசியலுக்கு வரணும்னு மெசேஜ் சொன்ன படம் 'கோ'. அதனாலேயே யூத்துகள் மத்தியில இந்தப் படத்துக்கு அமோக வரவேற்பு. அதை பார்ட் 2-வாக எடுத்திருக்காங்கனு ஆவலா கோ 2 படத்துக்கு போனவங்களுக்கு பெரிய ஏமாற்றம். டைட்டிலைத் தவிர வேற எங்கயுமே முதல் பாகத்தோட சிங்க் ஆகவே இல்லை. அரசியல் வசனங்கள், பாரதியார் கவிதைகள்னு நிறைய இருந்ததுதான். ஆனாலும்... ப்ச்!

த்ரில்லர்லயே வேற லெவல் வெரைட்டியை கொண்டு வந்த படம் பீட்சா. மொத்த தமிழ் சமூகமும் அந்தப் படத்தைக் கொண்டாடுச்சு. அதோட இரண்டாம் பாகமும் அதே பேய்ப்பட ஜானர்தான். படத்துல நிறைய அறிவியல்பூர்வமான விஷயங்களை எல்லாம் டீல் பண்ணிருந்தாங்க. ஆனா, அதனாலயே படம் அன்னியப்பட்டுடுச்சோ என்னவோ, பெரிசா ஹிட் அடிக்கலை. நல்லவேளை முதல் பாகத்தோட பேரை டேமேஜ் பண்ணாத மாதிரிதான் படம் எடுத்திருந்தார் இயக்குநர்.

நான் அவன் இல்லை 2 படமும் முதல் பாகத்தோட  தொடர்ச்சிதான். முதல் பாகத்திலேயே கவர்ச்சி குப்புனு அடிக்கும். ரெண்டாவது பாகத்துல அதையும் தாண்டி இருந்தது கவர்ச்சி. அதே கதை, வேற ஹீரோயின்கள், அதிக கவர்ச்சிங்கிறதால மக்களுக்கு சலிப்புத் தட்டிருச்சு. அதனால படமும் தரைத் தட்டிடுச்சு.

முன்னொரு காலத்துல நாடி நரம்பு எல்லாம் தேசபக்தியோட வந்து ஹிட் அடிச்ச படம்தான் ஜெய்ஹிந்த். அந்தப் படத்தோட ஹீரோ அர்ஜுனே பல வருஷங்களுக்கு பிறகு பாகம் இரண்டை எடுத்து நடிச்சு வெளியிட்டார். ஆனா அது ஆக்‌ஷன் கிங் படமா இல்லாம அட்வைஸ் கிங் சமுத்திரக்கனி படம் மாதிரி இருந்ததால பலருக்கும் பிடிக்காம போச்சு. நிறைய பேருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது.

டார்லிங் 2 ஒரு அக்மார்க் டெம்ப்ளேட் பேய்ப்படம். அதே பெண் பேய், அதே மாதிரியான கதை, அதே திரைக்கதைனு புதுசா எந்த ட்விஸ்ட்டும் இல்லாம மொண்ணைக் கத்தி மாதிரி மழுங்கி இருந்ததால படம் பெருசா போகலை. பாவம் ஒரே மாதிரி கதைல நடிச்சா பேய்ங்களுக்கே போரடிக்கும்ய்யா! மக்கள் என்ன பண்ணுவாங்க?

இந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செஞ்சு கதையிலயும் வித்தியாசம் காட்டுன ஹிட் படங்களும் இங்கே இருக்கு. 'காஞ்சனா 2', 'சிங்கம் 2', 'பாகுபலி 2' மாதிரியான படங்கள் எல்லாம் குறி வச்சு கோடிகளை அள்ளுன ஹிட் படங்கள். ஆனா இதெல்லாம் பத்தாது.
ஹாலிவுட்ல ஒரு படத்தை ஏழு எட்டு பாகங்களா எல்லாம் எடுக்கும்போது நாம ஏன் எடுக்கக் கூடாது? விஸ்வரூபம் 2, எந்திரன் 2, வி.ஐ.பி 2 மாதிரியான படங்கள் அடுத்தடுத்த பாகங்களுக்கு தாவும்னு நம்புவோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement