Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

As I Am Suffering From Kaadhal - பாலாஜி மோகனின் இந்த சீரீஸில் என்ன விசேஷம்?

`As i'm suffering form fever'னு ஸ்கூல்ல லெட்டர் எழுதியிருப்போம். அதே மாதிரி `As i'm suffering form Kadhal'ன்னு ஹாட் ஸ்டார் ஆப்ல புதுசா லெட்டர் எழுத வர்றார் இயக்குநர் பாலாஜி மோகன். என்ன புரியலையா மக்களே... நம்ம இந்தி அண்ட் இங்கிலீஷ் சேனல்கள்ல நிறைய சீரீஸ் பார்த்திருப்போம். சீரியல் இல்லை...சீரீஸ்! அது என்ன சீரீஸ்? சீரியலுக்கும் சீரீஸுக்கும் அப்படியென்ன வித்தியாசம்?'ன்னுதானே கேட்கிறீங்க?

நிறைய  இருக்கு. சீரியல் ரொம்ப நீளமாவும், சீரீஸ் கொஞ்சம் நீளம் குறைவாவும் இருக்கும். அதுமட்டும் இல்லாம சீரீஸ் பார்ட்-1, பார்ட்-2'ன்னு தொடர்ச்சியா வந்துகிட்டே இருக்கும். ஆனா, சீரியல் அப்படி இல்லை. ஒரே கதையைத் தொடர்ச்சியா எடுப்பாங்க. அதுக்கு நிரந்தரமான ஒரு முடிவும் இருக்கும்.

சீரீஸ்

தமிழ்ல முதல் முயற்சியா இந்த `As i'm suffering form Kadhal' சீரீஸ், வரும் ஜூன் 16-ம் தேதி முதல் ஒளிபரப்பாகுது. அதுவும் எஸ்க்ளூசிவ்வாக ஹாட் ஸ்டார் ஆப்ல மட்டும். இது வேறெந்த சேனல்களிலும் ஒளிபரப்பாகாது. இதோட ஸ்டோரி லைன் பார்த்தீங்கன்னா... நான்கு வெவ்வேறு தம்பதிகளோட லைப்ஸ்டைல் எப்படி இருக்கு? அவங்க ரிலேஷன்ஷிப்பை எப்படிப் பார்க்குறாங்கங்கிறதுதான். இந்தக் கதைக்களத்துக்கு ஏத்தமாதிரி தம்பதிகள் வெவ்வேறு தளங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காங்க. 

அதாவது, கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்பப் பாத்தாலும் சண்டைபோட்டுக்கிட்டே இருக்கிற ஒரு ஜோடி, 'எங்களுக்கு கல்யாணத்துல நம்பிக்கையே இல்லை. ஸோ, வி ஆர் லிவ்விங் டுகெதர்'ங்கிற லைப்ஸ்டைலை ஃபாலோ பண்ற ஒரு ஜோடி, லவ்பண்ணி விரைவில் திருமணத்துக்குத் தயாராகிக்கிட்டிருக்கிற ஒரு ஜோடி, மனைவியை விவாகரத்து செய்து தன்னோட மகளைத் தனி ஆளா வளர்த்து வர்ற அப்பா - இப்படி நான்கு ஜோடிகள். இவங்க ஒண்ணா இருக்கும்போது, அவங்கவங்க ரிலேஷன்ஷிப் பற்றி  மத்தவங்ககிட்ட எப்படிச் சொல்றாங்க? அதை அவங்க எப்படி மதிக்குறாங்க? இதுல இவங்களோட பெஸ்ட் அண்ட் ஒர்ஸ்ட் என்ன?  

குறிப்பா,  இந்தக் காலத்து இளைஞர்களுக்கு ரிலேஷன்ஷிப்ல 'பெர்சனல் ஸ்பேஸ்' என்பது மிக முக்கியமான ஒன்றா இருக்கு. 'லவ்வுல ஃபிரீடம் தேவை. ஒருத்தர்மேல இன்னொருத்தர் ஆதிக்கம் செலுத்தவே கூடாது' இதெல்லாம் நவீனகால 'காதல் பிரின்சிபல்ஸ்'ஸா இருக்கு. கண்மணி... பொன்மணி...  என்று உருகி உருகிக் காதலிப்பது, காதலுக்காக எதையும் தியாகம் செய்வது, 'நீ இல்லாம நான் இல்லை' என்று ரிப்பீட் வசனங்களைப் பேசுவது போன்ற பழைய முறை காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, நவீனகாலத்து இளைஞர்களின் மனநிலையை ஒரு ரொமான்டிக்-காமெடி கதையா மாத்திருக்காங்க. 

சீரீஸ்

என்னதான் இளைஞர்களின் மனநிலையை அப்பட்டமா வெளிக்கொண்டு வந்தாலும், `சோஷியல் டிரிங்கிங் கலாசாரம்', 'லிவிங் டுகெதர்' எல்லாத்தையும் திரையில் காட்டும் சினிமா பழக்கம் கொஞ்சம் ஓவர்தான் பாஸ். அதுலயும் மனைவி தன்னோட கணவனை கெட்டவார்த்தையில் திட்டுறது, பெண்கள் குடிக்கிற மாதிரியான சீன்கள் எல்லாமே டி.ர்.பி-யை ஏற்றிவிடும் ரகமாக இருந்தாலும், இந்த மசாலா சமாசாரம் எல்லாம் இல்லாமல் கதையை எடுப்பது இயக்குநர்களுக்கு சற்று சிரமமான காரியம்தான்போல! 

இந்த சீரீஸின்  டிரெய்லரைப் பார்க்கும்போது ஏதோ படம் டிரெய்லர் பார்த்த மாதிரி வேற லெவல்ல இருக்கு. காரணம், இதுல நடிக்கிறவங்க எல்லாரும் நாம அடிக்கடி பார்க்கிற சீரியல் கதாபாத்திரங்கள் இல்லை. எல்லாருமே சினிமா பிரபலங்கள்தான். சுந்தர் ராமு, தான்யா பாலகிருஷ்ணா, பேபி யுவினா, நக்ஷத்ரா நாகேஷ், சமன்த் ரெட்டி, அபிஷேக் ஜோசப் மற்றும் சஞ்சனா இதுல முக்கிய கதாபாத்திரங்களாக வர்றாங்க. ஆண்ட்ரியா மற்றும் ரம்யாக்கு ஸ்பெஷல் கேரக்டர் ரோல் கொடுக்கப்பட்டிருக்கு. 

சீரீஸ்சினிமா எப்படி வேணும்னாலும் இருந்துட்டுபோகட்டும். ஆனால் சீரியலுக்கு என்றே ஒரு தனி கலாசாரத்தைத் திரை உலகம் பின்பற்றி வருது. அதுல தொடுதல் காட்சிகள், மதுப்பழக்கம், முறையற்ற வார்த்தைகள் எல்லாத்துக்கும் தடா. அதனாலதான் சின்னப் பசங்கள்ல இருந்து பெரியவங்க வரை குடும்பத்தோடு சேர்ந்து சீரியல் பார்க்குறாங்க. இந்தக் கலாசாரத்தை உடைச்சு எரியுற மாதிரி இருக்குது இந்த 'அஸ் ஐ யம் சஃபரிங் ஃப்ரம் காதல்' சீரீஸ். (அதனாலதான் இதை டிவியில போடாம... ஹாட் ஸ்டார்ல மட்டும் போடுறாங்கபோல). எப்படியோ, இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அள்ளுமா... கையைக் கிள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்