Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1 டூ 2017... சினிமாவில் 'மெர்சல்' விஜய்யின் நம்பர் கேம்ஸ்! #HBDVijay

‘இளைய தளபதி’ விஜய்க்கு இன்று பிறந்தநாள். இன்னும் அதே இளமை, அதே வேகம், அதே ஆர்வம்… என தமிழ்சினிமாவில் தனக்கான இடத்தைக் கெட்டியாக இறுக்கிப் பிடித்து அமர்ந்திருக்கும் விஜய்யின் வரலாற்றை எண்களில் சுருக்கியிருக்கிறோம்.

0 – தமிழைத் தவிர பிறமொழிப் படங்களில் விஜய் நடித்ததில்லை. பிரபுதேவா கேட்டுக்கொண்டதற்காக, பாலிவுட்டில் ‘ரவுடி ரத்தோர்’ படத்திற்கு அக்‌ஷய்குமாருடன் ஆட்டம் போட்டார்.

1 – தமிழ் சினிமாவின் நேரெதிர் துருவங்களான விஜய் – அஜித் இருவரும் ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற ஒரே ஒரு படத்தில் இணைந்து நடித்தார்கள்.

1 – ஒருமுறை ‘டாக்டர்’ பட்டம் பெற்றிருக்கிறார். 2007-ல் டாக்டர். எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகம் விஜய்க்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

2 – ‘அழகிய தமிழ்மகன்’, ‘கத்தி’ இரண்டு படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

3 – தமிழக அரசின் திரைப்பட விருதுகளை மூன்று முறை பெற்றிருக்கிறார்.

5 –  ஒரு ஆண்டில் விஜய் நடித்து அதிகபட்சமாக வெளியான படங்களின் எண்ணிக்கை ஐந்து. இது இரண்டு முறை நடைபெற்றிருக்கிறது. 1996-ல் விஜய் நடிப்பில் 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை', 'பூவே உனக்காக', 'வசந்த வாசல்', 'மாண்புமிகு.மாணவன்', 'செல்வா' ஆகிய படங்களும், 1997-ஆம் ஆண்டில் 'காலமெல்லாம் காத்திருப்பேன்', 'லவ்டுடே', 'ஒன்ஸ்மோர்', 'நேருக்குநேர்', 'காதலுக்கு மரியாதை' ஆகிய படங்களும் வெளியானது.  

5 - பல்வேறு காரணங்களால் இவர் நடித்த ‘காவலன்’, ‘வேலாயுதம்’, ‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘கத்தி’ உள்ளிட்ட 5 படங்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்தது.

விஜய் - மெர்சல் - சினிமா

8 – நடிகராக உச்சம் தொட்ட விஜய், மக்கள் சேவைக்காக ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை 2009-ல் தொடங்கினார். எட்டு ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

9 – ‘பத்ரி’, ‘யூத்’, ‘வசீகரா’, ‘கில்லி’, ‘சச்சின்’, ‘ஆதி’, ‘போக்கிரி’, ‘காவலன்’, ‘நண்பன்’ ஆகியவை மற்ற மொழிப் படங்களில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு விஜய் நடித்த படங்கள்.

10 – குழந்தை நட்சத்திரம், துணை நடிகர், ஹீரோ எனத் தனது முதல் பத்து படங்கள் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் மட்டுமே நடித்தார்.

13 – கார் ஓட்டுவதில் விஜய்க்கு ஆர்வம் அதிகம். தனது 13 வயதில் இருந்து கார் ஓட்டப் பழக ஆரம்பித்துவிட்டார் விஜய்.

16 – குழந்தை நட்சத்திரம், துணை நடிகர், ஹீரோ, சிறப்புத் தோற்றம் என அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் மொத்தம் 16 படங்களில் நடித்திருக்கிறார் விஜய்.

17 – பிப்ரவரி 17, 1984. அப்பா எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘வெற்றி’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, விஜய் திரையில் தோன்றிய நாள்.

18 – ஹீரோவாக சினிமாவில் அறிமுகம் ஆனபோது, விஜய்யின் வயது.

25 – விஜய் ஹீரோவாக சினிமாவுக்கு அறிமுகமாகி, 25 ஆண்டுகள் கடந்திருக்கிறது. 1992-ல் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ என்ற படம்தான், விஜய் ஹீரோவாக நடித்த முதல் படம்.

30 – இதுவரை 30க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார் விஜய்.

33 – குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, ஹீரோவாக தனி ராஜ்ஜியம் செய்யும் இன்றுவரை… திரையுலகில் இதுவரை விஜய் பயணித்த ஆண்டுகள் 33.

43 – ஜூன் 22, 1974-ல் பிறந்த விஜய், இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

61 - அட்லி இயக்கத்தில், விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘மெர்சல்’ படத்தையும் சேர்த்து இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார் விஜய்.

69 – குழந்தை நட்சத்திரம் முதல் ஹீரோ வரை… விஜய் இதுவரை நடித்துள்ள மொத்தப் படங்களின் எண்ணிக்கை.

2017 – ‘இளைய தளபதி’யாகப் பயணம் செய்துகொண்டிருந்த விஜய், ‘தளபதி’யாகப் பறக்க ஆரம்பித்திருக்கிறார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ‘தளபதி’ விஜய்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!