Published:Updated:

அவதார், ஹாரிபாட்டரா... கமல்ஹாசனின் ‘பிக் பாஸா?' இந்த வீக் எண்டின் டாப் என்ன? #TVSchedule

சுஜிதா சென்
அவதார், ஹாரிபாட்டரா...  கமல்ஹாசனின் ‘பிக் பாஸா?' இந்த வீக் எண்டின் டாப் என்ன? #TVSchedule
அவதார், ஹாரிபாட்டரா... கமல்ஹாசனின் ‘பிக் பாஸா?' இந்த வீக் எண்டின் டாப் என்ன? #TVSchedule

TV-யில் இந்த வார இறுதியின் மாபெரும் விருந்து ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகும் பிக் பாஸ்தான். ‘ஹிந்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்ற பிக் பாஸ், தமிழிலும் ஹிட் அடிக்குமா' என்ற கேள்வி அனைவரிடமும் காணப்படுகிறது. மேலும், திங்கள் அன்று ரம்ஜான் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இந்த வார இறுதியின் பிளாக் பாஸ்டர் ஹிட் மூவீக்களின் வரிசை மற்றும் வேறு சில சின்னத்திரை ஸ்பெஷல் நிகழ்ச்சிகளின் வரிசைகளைக் கண்டு மகிழுங்கள். 

ஜெ மூவீஸ்: 'புதிய பறவை', சனிக்கிழமை, மதியம், 1.00 :-

கோபால் மற்றும் லதா தங்களது காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்ற முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்கின்றனர். அப்போதுதான் தெரியவருகிறது கோபாலுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்துவிட்ட செய்தி. அடுத்தது என்ன..? என்று அந்த காலத்தில் வெளிவந்த பல திருப்பங்களைக் கொண்ட சிவாஜியின் சென்டிமென்டல் மூவீ. வீட்ல பெரியவங்க இருந்தா மிஸ் பண்ணாமப் பார்க்கச் சொல்லுங்க கோப்ப்பால்ல்ல்ல்ல்!  

மூவீஸ் ஓகே: 'ஹவுஸ் ஃபுல் 2', சனிக்கிழமை, மதியம், 1.20 :-

நான்கு தந்தைகள் தங்களது மகள்களை பணக்கார மாப்பிளைகளுக்கு கல்யாணம் செய்துவைக்க வேண்டும் என்று வரன் தேடுகின்றனர். அப்போது மகள்கள் காதல் வயப்படும் மாப்பிள்ளைகள் பணக்காரர்கள் போல் நடிக்கிறார்கள். இறுதியில் திருமணம் நடக்குமா... என்பதுதான் கதை.  கல கல ஜாலி படம். 

ஜீ TV : 'சென்னை எக்ஸ்பிரஸ்', சனிக்கிழமை, மதியம், 2.00 :-

ராமேஸ்வரத்தில் தனது தாத்தாவின் அஸ்தியைக் கரைப்பதற்காக ஷாருக்கான் சென்றுகொண்டிருக்கும்போது தற்செயலாக ரயில் பயணத்தில் தீபிகாவை சந்திக்கிறார். தீபிகாவின் பிரச்னைகளை சரி செய்வதற்காக அவரது காதலன்போல் நடிக்கும் ஷாருக் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் படமே. இது ஹ்யூமர் டைப் ஆக்‌ஷன் கலந்த மூவீ. தலைவா..... &  லுங்கி டான்ஸ்... !!

ஸ்டார் மூவீஸ்: 'டைட்டானிக்', சனிக்கிழமை, மதியம் 2.38 :-

இந்தப் படத்துக்கு முன்னுரையே தேவையில்லையே!  1997ல் வெளிவந்த ரொமான்டிக் ஹிட் மூவீ. ஜாக் மற்றும் ரோஸ் காதலை மையமாக வைத்து டைட்டானிக் கப்பல் மூழ்கிய உண்மைச் சம்பவத்தை சித்திரித்த படம். 

WB: 'ஹாரிபாட்டர் அண்ட் தி ஹாஃப் ப்ளட் ப்ரின்ஸ்', சனிக்கிழமை, மதியம், 3.37:-

டம்பில் டோர் மற்றும் ஹாரி பாட்டரும் சேர்ந்து வோல்டே மார்ட்டினின் கடந்த காலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர். அப்போது அவர் எப்படி அதிகாரத்தை கைப்பற்றினார் என்பது தெரிய வருகிறது. இதற்கிடையே ஹாஃப் ப்ளட் ப்ரின்ஸ் என்னென்ன தந்திரங்களை செய்கிறார்...? க்ளைமாக்ஸில் எப்படி ஹாரி வில்லனை எதிர்கொள்கிறார் என்பதை செம்ம திரில்லர் ஜானரில் காட்சிப்படுத்திய  படம். 

HBO: 'ட்ரான்ஸ்பார்மர்ஸ்- ரிவென்ஜ் ஆஃப் தி ஃபாலன்', சனிக்கிழமை, மதியம், 4.32 :-

சயின்ஸ் பிக்ஷன் ஜானரின் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. இயந்திர சக்திகள் புதிய யுத்தம் படைத்தால் எப்படி இருக்கும் என்பதைக் கூறும் திரில்லர் கலந்த ஆக்ஷன் மூவீ. 

ஜே மூவீஸ்: 'கோச்சடையான்', சனிக்கிழமை, மாலை, 6.00 :-

ரஜினி நடிப்பில் வெளியான கோச்சடையான்   காதல் மற்றும் சென்டிமென்ட் கலந்த அனிமேஷன் படம். ரானா மற்றும் சேனாவின் சகோதர பாசம் மற்றும் மன்னர் ஆட்சியின் அரசியல் சூட்சுமங்களைக் காட்டும் படம். ரஹ்மானின் பாடல்கள், எக்ஸ்ட்ரா போனஸ்!     

சோனி பிக்ஸ்: 'தி மம்மி- டோம்ப் ஆஃப் தி ட்ராகன்', சனிக்கிழமை, மாலை, 6.46 :-

இறந்தவர்களை மீண்டும் உயிர்த்தெழுப்பக்கூடிய சூத்திரங்களை தேடிச் செல்லும் வழியில், ஹீரோ அலெக்ஸ் ஒரு கல்லறையை கண்டுபிடித்து தற்செயலாக ஒரு மம்மியை உயிர்ப்பிக்கிறான். அப்போது அந்த மம்மி எப்படி அவர்களை திகிலூட்டுகிறது என்பதைக் கூறும் த்ரில்லர் மூவீ. 

ஞாயிறு:  ஸ்டார் கோல்ட்: 'பேங் பேங்' ஞாயிறு, காலை, 9.20 :-

கத்ரினா கைஃப்பின் பாட்டி, தான் ஒரு மந்தமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக வருத்தப்படுகிறார். அவரது ஒரே ஆசை, கத்ரினாவை நல்லபடியாக கல்யாணம் செய்துவைக்க வேண்டும் என்பதுதான். அப்போது ஆக்ஷன், சேஸிங், ஃபைட்டிங் என மிரட்டல் வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் ஹ்ரித்திக் ரோஷனுடன் கதிரினாவுக்கு காதல் ஏற்படுகிறது. காதலும், அதிரடி வாழ்க்கையும் அவர்களுக்கு என்ன பாடம் கற்றுத்தருகிறது என்பதுதான் கதை. 

ஸ்டார் மூவீஸ்: 'அவதார்', ஞாயிறு, மதியம், 12.10 :-

ஜேம்ஸ் கேமரூனின் எப்பிக் சயின்ஸ் பிக்ஷன் மூவீ . அனிமேஷனில் பெரிய புரட்சியை ஏற்படுத்திய படம் என்றும் கூறலாம். பிரமாண்ட செலவில் எடுக்கப்பட்டு, தாறுமாறாக விருதுகளை அள்ளித் தட்டிய இந்தப் படம் அவதார் உலகை எடுத்துக்கூறும் மிகப்பெரிய காணொலி  விருந்து.  

அண்ட் பிக்சர்ஸ்: 'ஹேப்பி நியூ இயர்', ஞாயிறு, மதியம், 1.19 :-

பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்த காமெடி மூவீ. ஷாருக்கான், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் மற்றும் பூமான் இராணி நடித்த டான்ஸ் டீம்களின் பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹ்யூமர் படம். 

விஜய் டி.வி: 'நீயா நானா', ஞாயிறு, மதியம், 3.00 :-

வாரா வாரம் ஏதாவது ஒரு பரபரப்பான தலைப்பில் விவாதம் செய்யப்பட்டு வருகிற 'நீயா நானா' டாக் ஷோவில், இந்த வாரம் 'காதலில் சுயமரியாதை வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி விவாதிக்க இருக்கின்றனர். ஸோ, பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் பீ ரெடி...!

விஜய் டி.வி: 'பிக் பாஸ்', ஞாயிறு, இரவு, 8.30 :- 

14 பிரபலங்கள், 30 கேமராக்கள், 100 நாள்கள் ஒரே வீட்டில்...என்று போடப்பட்டிருக்கும் விளம்பரப் பலகையை பார்த்திருப்பீர்கள். ஆமாங்க...அந்த நிகழ்ச்சி ஞாயிறு அன்றுதான். இந்தியில் சல்மான் கான், தமிழில் கமல்ஹாசன் தொகுப்பாளராக ஏற்கும் இந்த பிரமாண்ட ரியாலிட்டி ஷோவில் 100 நாள்கள் பிரபலங்களை ஒரே வீட்டில் வைத்திருந்தால் என்ன நடக்கும்... என்பதுதான் கான்செப்ட்.  தமிழில் இப்படியான ரியாலிட்டி ஷோவாக முதல் முயற்சி!    

B4U மூவீஸ்: 'பாத்ஷா', ஞாயிறு, இரவு, 10.15 :-

ஷாருக் டிடெக்ட்டிவ் நிறுவனத்தில் வேலை புரியும்போது, கடத்தப்பட்ட ஒரு பெண்ணை மீட்டுக் கொண்டுவர முயல்கிறார். அப்போது தவறாக அரசியல் கும்பலிடம் சிக்கி பல பிரச்னைகளில் மாட்டிக் கொள்கிறார். க்ளைமாக்ஸில் எப்படி அனைத்தும் சரி செய்யப்படுகிறது என்பதைக் கூறும் திரில்லர் வகை மூவீ. 

ரம்ஜான் சிறப்பு திரைப்படம்:-

சன் டி.வி: 'அச்சம் என்பது மடமையடா' திங்கள், காலை 11.00 :-

'தள்ளிப் போகாதே' பாடல் மூலம் மில்லியன் டாலர் ஹிட் அடித்த மூவீ. படத்தோட முதல் பாதியிலேயே அனைத்து சூப்பர் ஹிட் பாடல்களும் செல்ல, இரண்டாம் பாதி முழுக்க  ஆக்‌ஷன் சீக்வென்ஸ் நிறைந்திருக்கிறது. இப்படி காதலும், டமால் டுமீல் காட்சிகளும் சேர்ந்த படம்.  

சனிக்கிழமை முழுக்க திரில்லர் திரைப்படங்கள் என்றால், ஞாயிறு முழுவதும் பிரமாண்ட ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் காமெடி திரைப்படங்கள் என்று டி.விக்கு விடை கொடுக்காத இந்த வீக்எண்ட்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். ஹேப்பி வீக்எண்ட்...!

சுஜிதா சென்