Published:Updated:

''கொஞ்சம் சீரியல்... நிறைய பரதநாட்டியம்!'' 'தெய்வமகள்' சிந்து ஷியாம் பெர்சனல்

வே.கிருஷ்ணவேணி
''கொஞ்சம் சீரியல்... நிறைய பரதநாட்டியம்!'' 'தெய்வமகள்' சிந்து ஷியாம் பெர்சனல்
''கொஞ்சம் சீரியல்... நிறைய பரதநாட்டியம்!'' 'தெய்வமகள்' சிந்து ஷியாம் பெர்சனல்

ன் டி.வியில் ஒளிபரப்பாகும் 'தெய்வமகள்' சீரியலில் பொறுமையான மருமகளாக 'திலகா' கதாபாத்திரத்தில் அசத்திவருகிறார் சிந்து ஷியாம். இப்படியொரு மருமகளைப் பார்க்க முடியுமா எனப் பார்ப்போர் வியக்கும் வகையில் கதாபாத்திரமாகவே மாறியிருக்கும் சிந்து ஷியாமுடன் சில நிமிடங்கள்... 

'' 'தெய்வமகள்' சீரியலில் மருமகள் கதாபாத்திரத்துக்காக எவ்வளவு மெனக்கிடுறீங்க?'' 

''எந்த சீரியலாக இருந்தாலும், முதன்மையான கதாபாத்திரங்களுக்கு பெரிய லெவல்ல காஸ்டியூம் கொடுத்துடுவாங்க. ஆனால், 'தெய்வமகள்' சீரியலில் என் கதாபாத்திரம் ஏழ்மையான மருமகள். கணவர் மற்றும் வில்லியின் டார்ச்சர் காரணமாகப் புகுந்த வீட்டிலிருந்து தனியே இருப்பேன். வீட்டு வேலைகளுக்குப் போவேன். அதனால், கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, சாதாரணமான புடவையோடு வந்தால் போதும்னு டைரக்டர் குமரன் சார் சொல்லிட்டார். சில நேரங்களில் ரொம்ப பொறுமையாக நடந்துக்கிற மாதிரி காட்சி வரும்போது, என்னைப் பார்க்க எனக்கே பாவமா இருக்கும்.'' 

''உங்கள் கணவராக நடிக்கும் ராஜூ பற்றி...'' 

''செம கேரக்டர்ங்க. சில நேரத்தில் நானும் அவரும் சில டயலாக் மாடுலேஷனை ஒருத்தருக்கு ஒருத்தர் நடிச்சுக் காண்பிச்சு சரி செய்துக்குவோம். அவர் சரியான சாப்பாட்டுப் பிரியர். விதவிதமான டிஷ் பத்தி சொல்லிட்டே இருப்பார். ஷூட்டிங்ல எப்பவும் கலகலனு இருப்பார்.'' 

''நீங்க நடிச்ச படங்கள் மற்றும் சீரியல்கள் பற்றி...'' 

''நான் நடிகையாக அறிமுகமானது மலையாளத்தில். ஆறு படங்களுக்கும் மேல் நடிச்சிருக்கேன். அந்தப் படங்களின் அறிமுகம்தான் மலையாள சீரியல்களில் நடிக்கிற வாய்ப்பைக் கொடுத்துச்சு. பிறகு, சென்னைக்கு வந்து வீடு எடுத்துத் தங்கினேன். விஜய் டி.வியில் 'ஶ்ரீராமன் ஶ்ரீதேவி' என்கிற சீரியலில் நடிச்சேன். 'ஆயுத எழுத்து' படத்தில் சூர்யாவுக்கு தங்கை. 'போகன்', 'ரங்கூன்' போன்ற படங்களிலும் நடிச்சிருக்கேன். விஜய் டி.வியில் 'பகல் நிலவு', சன் டி.வியின் 'தெய்வமகள்' சீரியல்களில் நடிச்சுட்டிருக்கேன்.'' 

''சினிமா, சீரியல் இரண்டில் எது அதிக பிரபலத்தை தருவதாக நினைக்கிறீங்க?'' 

''சினிமாவைவிட, சீரியலில்தான் வாய்ப்பும் பப்ளிசிட்டியும் அதிகம். ஒவ்வொருத்தர் வீட்டுக்குள்ளேயும் நாமும் ஒருவராக இருக்கிறோம். தங்கள் குடும்பத்தில் ஒருத்தராகவே மக்கள் நினைக்கிறாங்க. எத்தனை வருஷமானாலும் எங்களை மறக்கறதில்லை.'' 

'' 'வெண்ணிற ஆடை' நிர்மலாவுக்கும், உங்களுக்குமான நட்பு பற்றி...'' 

''அவங்க பெரிய கிளாசிக்கல் டான்ஸர். நானும் கிளாசிக்கல் டான்ஸராக இருக்கிறதால, அது சம்பந்தமா பேசிப்போம். நடனத்தில் நிறைய நுணுக்கமான டிப்ஸ் கொடுப்பார். 'தெய்வமகள்' சீரியல் ஆரம்பித்தபோது சத்யா, காயத்ரி, நிர்மலா மேடம், நான் என எல்லோரும் ஒரே வீட்ல இருந்தோம். பேல் பூரி, ஸ்நாக்ஸ் ஐட்டம் என ஷூட்டிங் ஸ்பாட்லயே வித்தியாசமாக சமைச்சுச் சாப்பிட்டுட்டு இருப்போம். இப்போ, கதைப்படி நாங்க பிரிஞ்சதால் அதையெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றோம்.'' 

'பல படங்களில் நடித்த உங்கள் கணவரை இப்போது ஸ்கிரீனில் பார்க்க முடியவில்லையே?'

''பிஸினஸ்ல முழுமையா இறங்கியிருக்கார். சினிமாவுல நல்ல கேரக்டருக்காகக் காத்துட்டு இருக்கார்''. 

''கிளாசிக்கல் டான்ஸ்ர்னு சொல்றீங்க, டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கும் ஐடியா இருக்கா?'' 

''இப்போதைக்கு இல்லை. நாங்க குடியிருக்கிற அப்பார்ட்மென்ட்ல இருக்கிற இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்கிறேன். எதிர்காலத்தில் வாய்ப்பு அமைந்தால், நிச்சயமா டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிப்பேன்'.

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.