வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (13/07/2017)

கடைசி தொடர்பு:08:35 (13/07/2017)

பிக் பிரதரில் ஆரம்பித்து.. பிக் பாஸ் இந்தி... பிக் பாஸ் தமிழ்.. நாளை பிக் பாஸ் தெலுங்கு!

`நாகினி', `நந்தினி' தொலைக்காட்சித் தொடர்களைத் தாண்டி `பிக் பாஸ்'தான் இன்று டாக் ஆஃப் தி எவ்ரி ஹவுஸ். வீட்டில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் முதல் மீம் க்ரியேட்டர்கள் வரை தினமும் ஏதாவது ஒரு சுவாரஸ்ய விஷயத்தைக் கிளப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். இது தமிழ்நாட்டு மக்களுக்குப் புதுசுதான் என்றாலும், தற்போது ஒளிபரப்பாகிவரும் `பிக் பாஸ்' செலிப்பிரிட்டி ஷோவில் நடைபெறும் அதிரடி நிகழ்வுகள் அனைத்தையும், வெளிநாட்டில் ஒளிபரப்பான `பிக் பிரதர்'  நிகழ்ச்சியின் வடிவமைப்பாளரான ஜான் டி மோல் (John de Mol Produkties) என்பவர்தான் முதன்முதலில் ஊடக உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

பிக் பிரதர்

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் ஜூலி ஷூசன் சென் (Julie Suzanne Chen). அவர்களுடைய கலாசாரத்துக்கு ஏற்ற நாகரிகப் பாணியை அவர்கள் பின்பற்றினார்கள். இன்று நாம் எப்படிப் பேசிக்கொண்டிருக்கிறோமோ, அப்படித்தான் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளிலும் இந்த நிகழ்ச்சி பரவலாகப் பேசப்பட்டது. அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வது, அதீதமாகக் கோபப்படுவது, சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வது என எல்லாவிதமான பரிமாணங்களையும் அந்தக் குழு வெளிப்படுத்தியது. இதில் அதிக சர்ச்சைக்குள்ளானவரும், ஜூலி, பரணி போன்றோரைப்போல் ஒதுக்கப்பட்டவருமானவர் ஷில்பா ஷெட்டி. அதன் பிறகு அவருக்கான ரேட்டிங் எகுறவே, எதிர்கால வாய்ப்புகளுக்கு இது அடித்தளமிட்டது. ஒவ்வொரு நாட்டுக்குமான கலாசாரம் அவசியம் அல்லவா! அதனால் ஸ்மோக்கிங், டிரிங்கிங் என அவர்களோடு கலந்துபோனவற்றுக்கு அனுமதியளிக்கப்பட்டு, பல கேமராக்களை வைத்து படம்பிடிக்கப்பட்டது. நம்ம ஊர் பிக்பாஸில் அறைக்குள் புகைக்க அனுமதி இல்லை. அதற்கென ‘ஸ்மோக்கிங் ஜோக்’ உள்ளது. மது அருந்த அனுமதி இல்லை. 

அந்த `பிக் பிரதர்' (Big Brother) நிகழ்ச்சியை யூடியூயில் காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.
 

இன்று எல்லோரும் `பிக் பாஸ்' என்று உச்சரிக்கக் காரணமாக இருந்தது இந்தி `பிக் பாஸ்'.  2006-ம் ஆண்டு ஒளிபரப்பான Big Boss Hindi நிகழ்ச்சி, கலர்ஸ் டிவி-யில் ஒளிபரப்பானது. இதன் முதல் எபிசோசைத் தொகுத்து வழங்கியவர் அர்ஷத் வர்சி  (Arshad Warsi). அதன் பிறகு ஷில்பா ஷெட்டி, அமிதாப் பச்சன் போன்றோரைத் தொடர்ந்து, சல்மான் கான் 2010-ம் ஆண்டு 4-வது எபிசோடைத் தொகுத்து வழங்கினார். அதன் பிறகு 6 முதல் 10 எபிசோடுகள் வரை அவர்தான் தொகுப்பாளராக இருந்தார். 2016-ம் ஆண்டு ஒளிபரப்பான 10-வது எபிசோடு வரை மக்களை பரபரப்பாகவே வைத்திருந்தார்  சல்மான் கான். வித்தியாசமான போட்டிகள், சண்டைகள், சச்சரவுகள் என ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாகச் சென்றது. இதில் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொண்டார்கள். தமிழ் `பிக் பாஸ்'-ல் நடைபெறும் விஷயங்கள் எல்லாம் ஜுஜூபி எனச் சொல்லவைத்துவிடும், அவர்கள் போட்ட சண்டைகள். 

இந்தியில் சக்கைப்போடுபோட்ட `பிக் பாஸ்' நிகழ்ச்சியின் சாம்பிள் வீடியோவைப் பார்க்க:
 

வாரத்தின் வேலை நாள்களில் இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரையிலும் ஒளிபரப்பாகிவரும் தமிழ் `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு பிக் பேனராக அமைந்தவர் நடிகர் கமல்ஹாசன்.  `பிக் பாஸ்' என்றால் என்ன என்பதே தெரியாதபோது, உலக நாயகன் கமல்ஹாசனுக்காகவே பலர் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கக் காத்துக்கிடந்தார்கள். நிகழ்ச்சி ஒளிபரப்பான முதல் நாளே டி.ஆர்.பி எகிற ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சிக்குள் வந்த ஒருசில தினங்களிலேயே ஶ்ரீ வெளியேறிவிட்டார். அவரைத் தொடர்ந்து அனுயா வெளியேற, பரணியைக் குறை சொல்லியபடியே வெளியேறினார் கஞ்சா கருப்பு. அதற்குப் பிறகு மன உளைச்சலுக்கு ஆளான பரணியும் சுவர் ஏறி குதிக்க முயற்சித்து, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான விதியை மீறியதால் வெளியேற்றப்பட்டார். 

தமிழில் ஒளிபரப்பான இரண்டே வாரங்களில் கிடைத்த ரீச்சை அடுத்து, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் `பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார். Lonavala என்னுமிடத்தில் 10,000-க்கும் மேற்பட்ட ஸ்கொயர் ஃபீல்டில் பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். 70  நாள்கள் 12 செலிப்பிரிட்டிகள் இந்த வீட்டில் தங்கவிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்களிடம் பேசி இறுதியில்12 பேரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 70 நாள்கள் `பிக் பாஸ்' இல்லத்தில் தங்கத் தயாராக இருக்கிறார்களாம் தெலுங்குப் பிரபலங்கள். `என் கசின் சிஸ்டர் இந்தி `பிக் பாஸ்'-ன் வெறித்தனமான ஃபேன். அவர் சொல்லித்தான் பிக் பாஸின் சில எபிசோடுகளைப் பார்த்தேன். இன்னும் முழுமையாகப் பார்த்து முடிக்கவில்லை. ஆனால், எனக்கான இடத்தை இந்த ஷோ மூலம் பெறுவேன். வித்தியாசமான, ஃப்ரெஷான ஷோவை கூடிய விரைவில் பார்க்கப்போகிறீர்கள்' என தெலுங்கு ரசிகர்களின் பிபி-யை எகிறவைத்திருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கு பிக் பாஸின் முதல் சீஸன், ஜூலை 16-ம் தேதி `Star Maa' சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்