வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (14/07/2017)

கடைசி தொடர்பு:19:13 (14/07/2017)

தமிழில் நம்பர் ஒன் - ஸ்கெட்ச் போடும் ரகுல் ப்ரீத் சிங்

ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ்பாபு காம்பினேஷனில் தமிழ் - தெலுங்கில் உருவாகும் `ஸ்பைடர்' படம், `சதுரங்கவேட்டை' வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `தீரன் அதிகாரம் ஒன்று', தெலுங்கில் `ஜெய ஜானகி நாயகா' திரைப்படம், இந்தியில் உருவாகும் `அய்யாரி' என கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என மூன்று மொழிப் படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். குறுகிய காலத்திலேயே தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோயின் லிஸ்ட்டில் இடம்பிடித்த இந்த அழகி யார்?

ராகுல் ப்ரீத் சிங்

டெல்லியில் பிறந்த பஞ்சாபிப் பொண்ணு. சுடோகு ரொம்பப் பிடிக்கும், கணக்குப் பாடம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். தேசிய அளவிலான கோல்ஃப் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார். இவை எல்லாவற்றையும்விட, மாடலிங் மீது ஆர்வம் அதிகம். 18 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்தார். 2011-ம் ஆண்டுக்கான ‘மிஸ் இந்தியா’ போட்டியில் நான்கு பட்டங்களை வென்று அசத்தினார். 

ராகுல் ப்ரீத் சிங்

வழக்கம்போல நடிக்கும் வாய்ப்பு வந்தது. நடிகை ஆகவேண்டும் என்பது லட்சியமாக இல்லையென்றாலும், `எக்ஸ்ட்ரா கொஞ்சம் பாக்கெட் மணி கிடைக்குமே!' என சினிமாவில் நடிக்க வந்தார் ரகுல் ப்ரீத் சிங். செல்வராகவன் இயக்கிய `7ஜி ரெயின்போ காலனி' படத்தின் கன்னட ரீமேக்கான `கில்லி'யில் நடிகையாக அறிமுகமானார். இன்று அவருக்குச் சொந்தமாக ஓர் உடற்பயிற்சிக் கூடமும், ஒரு பங்களாவும் ஹைதராபாத்தில் இருக்கின்றன. இவையெல்லாம் சினிமாவில் நடித்த பிறகு இவர் சம்பாதித்த சொத்துகள். 

அறிமுகம்தான் கன்னடப் படமே தவிர, அம்மணி அசத்தியது முழுக்க டோலிவுட்டில்! மஞ்சு மனோஜ், கோபி சந்த், ரவிதேஜா, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், இப்போது மகேஷ்பாபு... என முன்னணி தெலுங்கு நடிகர்களோடு நடித்த பெரும்பாலான படங்கள் பட்டையைக் கிளப்ப, தெலுங்கு சினிமாவில் றெக்கை கட்டிப் பறந்தார் ரகுல் ப்ரீத் சிங். 

ராகுல் ப்ரீத் சிங்

அருண்விஜய் நடிக்க, மகிழ்திருமேனி இயக்கிய `தடையறத் தாக்க' தமிழில் இவருக்கு முதல் படம். பிறகு, `என்னமோ ஏதோ', `புத்தகம்' என ஏனோதானோ படங்களில் நடிக்க, மீண்டும் தெலுங்கு சினிமாவில் செட்டிலானார். மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, `தீரன் அதிகாரம் ஒன்று', `ஸ்பைடர்' போன்ற ஸ்டார் வேல்யூ படங்களின் மூலம் தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். 

தெலுங்கு சினிமாவில் இவரின் வளர்ச்சி சக நடிகைகளுக்குப் பிடிக்காது என்றாலும், `சீனியர் நடிகைகளோடு என்னை ஒப்பிடாதீர்கள். அவர்களிடமிருந்துதான் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்' என அடக்கத்துடன் ட்வீட் தட்டினார் ரகுல். தமிழ் சினிமாவிலும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது ரகுல் ப்ரீத் சிங்கின் டார்கெட்! #வாம்மா... மின்னல்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்