மணிரத்னம் முன்னிலையில் பர்த்டே பரிசு... செம ஹேப்பி துல்கர்! #HBDDulquer #Video

மிழில் துல்கர் சல்மான் நடிக்கும் மூன்றாவது படம் ‘சோலோ’. விக்ரம், ஜீவா நடிப்பில் 2013ல் வெளியான படம் ‘டேவிட்’. இப்படத்தின் இயக்குநரான பிஜோய் நம்பியார் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பை-லிங்குவலில் உருவாகிவரும் படம்தான் ’சோலோ’. இன்று துல்கரின் பிறந்த நாள் என்பதால், படத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இப்படம் பற்றி இயக்குநரும், துல்கரும் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டனர். 

துல்கர் சல்மான்

இயக்குநர் பிஜோய் நம்பியார் பேசும்போது, “  என்னுடைய முதல் தமிழ்ப் படம் இது. ‘டேவிட்’ படத்தை முதல் படம்னு சொல்லமுடியாது. ஏன்னா, இந்தியிலும் தமிழிலும் டேவிட் படத்தை ஒரே நேரத்தில் இயக்கினேன். இந்தியில் வரும் பாதி காட்சிகள்தான் தமிழுக்கும் பயன்படுத்தியிருப்பேன். முழுமையாக தமிழுக்கென எடுத்த படமாக டேவிட் படத்தை சொல்ல முடியாது. ‘சோலோ’ பைலிங்குவல் படம். தமிழுக்கும், மலையாளத்திற்கும் தனித்தனியாக படப்பிடிப்பு நடத்தியிருக்கோம். அதுமட்டுமல்லாம, தமிழுக்கும், மலையாளத்திற்கும் சில கேரக்டர்களும், நடிகர்களையும் மாற்றியிருக்கோம். நான்கு கதைகள் சேர்ந்ததுதான் இந்தப் படம். வித்தியாசமான நான்கு கதைகள் ஒரே படத்தில் இருந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் படத்தின் ஸ்பெஷல்”. என்றார் இயக்குநர் பிஜோய் நம்பியார்.  

தொடர்ந்து பேசிய துல்கர் சல்மான், “ நான் ரொம்ப லக்கி. இதுவரைக்கும் கிடைச்ச படங்கள் எல்லாமே எனக்கு கிஃப்ட்னுதான் சொல்லணும். என்னுடைய பிறந்த நாள் பரிசா, படத்தோட டீசர் வெளியிடுவது ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. அதுனாலயே இந்த நாள் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ‘சோலோ’ மாதிரியான படங்கள் கிடைப்பதே ரொம்ப பெரிய விஷயம். மலையாளத்தில் படம் நடிச்சாலும், தமிழிலும் நிறைய ஊக்கப்படுத்துறாங்க. கதைகளில் தொகுப்பு தான் இந்தப்படம். இந்த ஒரு படத்திற்கு வேலை செய்தது, எதோ நான்கு படங்களில் வேலை செய்த மாதிரி இருந்துச்சு. ஏன்னா படத்தில் நான்கு கதை. நான்கிலும் நான் வேற வெற  கேரக்டரில் நடிச்சிருகேன். தமிழ், மலையாளம் தனித்தனியா ஷூட் பண்ணியிருப்பதால் எட்டு படத்தில் நடிச்ச ஃபீல். நடிகர்கள், தயாரிப்பு என தொடங்கி, படத்தில் வரும் சின்ன ஷாட் வரைக்கும் தமிழுக்கும், மலையாளத்திற்கும் தனித்தனியா ஷூட் பண்ணியிருக்கோம். 

என்னுடைய எல்லா படத்தின் நிகழ்ச்சியிலும் மணிரத்னம் சார் இருப்பார். ‘வாயை மூடிப் பேசவும்’ நிகழ்ச்சியில் தொடங்கி இப்போ வரைக்கும் அவர் இல்லாமல் என்னுடைய எந்த நிகழ்ச்சியும் இருந்ததில்லை. இந்த நிகழ்ச்சியிலும் மணிசார் கலந்துக்கிட்டது, என் பிறந்த நாளுக்கு கிடைச்ச டபுள் கிஃப்ட்டா நினைக்கிறேன்.” என்று முடித்தார் துல்கர்.  

ஒரே மொழியில் மட்டும் நடிப்பது என்றில்லாமல், ஒட்டுமொத்த தென்னிந்திய மொழிகளிலும் நடிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார் துல்கர் சல்மான். ‘சோலோ’ படம் போலவே, இவர் நடிக்கும் ‘நடிகையர் திலகம்’ ட்ரைலிங்குவல். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தயாராகிவருகிறது. நடிகை சாவித்ரியின் பயோபிக்கான இப்படத்தில் சாவித்ரி கேரக்டரில் கீர்த்திசுரேஷூம், ஜெமினி கணேசன் கேரக்டரில் துல்கரும் நடிக்கிறார்கள். தெலுங்கில் ‘எவடே சுப்ரமணியம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது. . 

 

Happy Birthday Dulquer Salmaan!

’சோலோ’ படத்தின்  வீடியோ இதோ....! 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!