‘விஐபி’யில் விக்னேஷ் சிவன்... ‘விஐபி-2’ படத்தில்..! | Balaji Mohan plays an important role in VIP 2

வெளியிடப்பட்ட நேரம்: 10:12 (03/08/2017)

கடைசி தொடர்பு:11:43 (03/08/2017)

‘விஐபி’யில் விக்னேஷ் சிவன்... ‘விஐபி-2’ படத்தில்..!

'வேலையில்லா பட்டதாரி' படத்தின் ஹிட் நடிகர் தனுஷை அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுத வைத்துள்ளது. தனுஷின் கதை மற்றும் வசனத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல் என அனைத்தும் ரசிகர்களிடம் எதிர்பார்பை எகிற வைத்துள்ளன.

vip 2


படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்துக்காக நடிகை கஜோலை பாலிவுட் சினிமாவிலிருந்து அழைத்து வந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் கஜோல் நடித்திருப்பதால் படத்துக்கான அதிர்வு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடித்த அமலா பால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி ஆகியோர் இந்தப் படத்திலும் தொடர்ந்துள்ளனர்.

'வேலையில்லா பட்டதாரி' படத்தின் முதல் பாகத்தில் ஒரு சின்ன ரோலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நடித்திருப்பார். அதேபோல் 'விஐபி 2' படத்திலும் ஒரு இயக்குநரை நடிக்க வைத்துள்ளார் நடிகர் தனுஷ். இந்த இயக்குநர் தனுஷை வைத்து 'மாரி' படத்தை கொடுத்த பாலாஜி மோகன்தான். இவர்கள் இருவர் கூட்டணியில் விரைவில் 'மாரி 2' ரெடியாக உள்ளது. இந்தப் படத்தில் பாலாஜி மோகன் நடித்தைப் பற்றி அவரிடமே கேட்டோம்.

பாலாஜி மோகன்

“விஐபி 2 படத்தில் ஒரு சின்ன ரோலில்தான் நடித்துள்ளேன். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம். தனுஷ் கேட்டதால் அந்த ரோல் பண்ணினேன். முதல் பாகத்தில் விக்னேஷ் சிவன் நடித்ததால், இதிலும் ஒரு இயக்குநர் நடிக்க வேண்டும் என்றெல்லாம் இதில் என்னை நடிக்க வைக்கவில்லை. எனக்கு அந்த கேரக்டர் பொருத்தமாக இருந்ததால் நடித்தேன்'' என்றார் இயக்குநர் பாலாஜி மோகன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்