Published:Updated:

அஜித்தின் அடுத்த படமும் சிறுத்தை சிவா தான், சொல்லும் இமான் அண்ணாச்சி

சனா
அஜித்தின் அடுத்த படமும் சிறுத்தை சிவா தான், சொல்லும் இமான் அண்ணாச்சி
அஜித்தின் அடுத்த படமும் சிறுத்தை சிவா தான், சொல்லும் இமான் அண்ணாச்சி

நடிகர் அஜித் திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், கும்பகோணத்தைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் அவருக்குச் சிலை ஒன்றை நிறுவியுள்ளனர். ஒரு லட்சம் செலவில் உருவான இந்தச் சிலையை நடிகர் இமான் அண்ணாச்சி இன்று (03-082017)  திறந்து வைத்துள்ளார். 

அஜித்தின் அடுத்த படமும் சிறுத்தை சிவா தான், சொல்லும் இமான் அண்ணாச்சி

அஜித்தின் சிலையைத் திறந்த இமான் அண்ணாச்சியிடம் பேசினோம். ''குற்றாலத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில்  இருந்தேன். அப்போது அஜித் ரசிகர்கள் என்னிடம் கும்பகோணத்தில் அஜித்துக்காக ஒரு சிலை வைத்துள்ளோம். அதை நீங்கள்தான் திறந்து வைக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதனால் நான் சம்மதம் தெரிவித்து சிலை திறந்து வைத்தேன். அஜித் ரசிகர்களின் ஆரவாரத்துடன் இந்த நிகழ்வு நடந்தது. அஜித் ரசிகர்கள் சிலர் பணம் சேர்த்து இந்தச் சிலையைத் திறந்துள்ளனர். 

திடீரென்று அஜித்துக்கு சிலை திறக்கக் காரணம் என்ன என்பது பற்றி அவர்களிடம் கேட்டேன். அஜித் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன அதனால்தான் என்றார்கள். சிலை பார்க்க நன்றாக இருந்தது. 'விவேகம்' படத்தில் வரும் அஜித் லுக் ஒன்றை மாடலாக வைத்து இந்தச் சிலையை வடிவமைத்திருந்தனர். இந்தச் சிலையைச் செய்த சிற்பியைப் பார்க்க வேண்டும் என்றேன். அவர் வெளியூர் சென்றிருப்பதாகச் சொல்லிவிட்டார்கள். 

அஜித்தின் அடுத்த படமும் சிறுத்தை சிவா தான், சொல்லும் இமான் அண்ணாச்சி

இந்தச் சிலையை ஓர் இடத்தில் மட்டும் வைத்திருக்காமல், அஜித் நடிக்கும் படம் வெளியாகும் திரையரங்குகளில் இந்தச் சிலையை வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அஜித் பிறந்த நாளன்று ஏற்கெனவே அஜித் ரசிகர்களின் மோர் பந்தலைத் திறந்து வைத்திருக்கிறேன். அதனால்தான் இன்று ’தல’யின் சிலை திறப்பு விழாவுக்கு என்னை அழைத்தார்கள். அஜித்துடன் எப்போது நடிக்கப்போகிறீர்கள் என்று பலர் என்னைக் கேட்கிறார்கள். அஜித்தின் அடுத்த படத்தில் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்கிறேன்'' என்றவரிடம்,’அஜித்தின் அடுத்த படத்தைப் பற்றி கேட்டால்’, ’’சிவா கூட்டணியில்தான் அஜித்தின் அடுத்த படம் உருவாகப்போகிறது. சத்யஜோதி தயாரிக்கும் இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் இருக்கும் என்று தயாரிப்பு நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், இயக்குநர் பக்கமிருந்து யாரும் என்னிடம் பேசவில்லை'' என்றார் இமான் அண்ணாச்சி.

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..